ஆண்களிடம் பெண்கள் பேசக்கூடாத சில விஷயங்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

நீங்கள் அவருக்கு சரியான ஜோடியாக இருக்கலாம். உங்கள் இருவருக்கும் பொருத்தம் என்றால் அப்படி ஒரு பொருத்தமாக இருக்கலாம். அதனால் உங்கள் உறவில் ஒரே மாதிரியான விதிமுறைகளை ஏற்கவோ தவிர்க்கவோ தேவையில்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனால் நீங்கள் தப்பு கணக்கு போடுகிறீர்கள். ஆம், நீங்கள் எவ்வளவு தான் அன்னியோனியமாக இருந்தாலும் கூட அவரிடம் பேச கூடாத சில விஷயங்கள் இருக்கத் தான் செய்கிறது.

ஏன், பேசினால் என்ன? குடியா மூழ்கி போகும் என நீங்கள் கேட்கலாம். மூழ்கியும் போகலாம். ஆம், சிறு துளி தானே பெரு வெள்ளம். நீங்கள் பேசும் அவ்வகையான விஷயங்கள் அவரின் மனதை காயப்படுத்தலாம். அதுவே உங்கள் இருவருக்கும் இடையே பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். இதனால் உங்கள் உறவு முடியும் படி கூட ஆகலாம். அது என்ன என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? இதோ அவற்றில் சிலவற்றை உங்களுக்காக நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவரின் தாயை பற்றிய கருத்துக்கள்

அவரின் தாயை பற்றிய கருத்துக்கள்

தன் கணவனின் தாயாரோடு ஒத்துப்போகாமல் போவது ஒன்றும் ஒரு பெண்ணுக்கு புதியதாய் ஏற்படுவது அல்ல. ஆனால் அதற்காக அவரைப் பற்றி அப்படியே உங்கள் கணவனிடம் குறை கூறாதீர்கள். அதனால் சாமர்த்தியமாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் மாமியாரை பற்றி கிண்டலோ, கேலியோ அல்லது நேரடியாக குறை கூறுவதையோ நிறுத்துங்கள்.

அவரின் நண்பர்கள்

அவரின் நண்பர்கள்

அவரின் நண்பர்களில் ஒருவர் உங்களுக்கு க்யூட்டாக தெரியலாம். அவரை புகழ்ந்து தள்ள வேண்டும் என்றும் தோன்றலாம். ஆனால் அதை அப்படியே உங்கள் கணவனிடம் நேரடியாக கூறாதீர்கள். அவர் அதை தவறாக எடுத்துக் கொள்ளலாம். இதனால் உங்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை தான் வளரும்.

அவரின் கனவுகளின் மீது சந்தேகிப்பது

அவரின் கனவுகளின் மீது சந்தேகிப்பது

அவருடைய மனைவியாக அவரை புரிந்து கொண்டு, அவரின் கனவுகளை நீங்கள் நம்ப வேண்டும். அதற்கு போதிய அளவிலான ஆதரவையும் வழங்க வேண்டும். உங்களால் ஆதரவளிக்க முடியாவிட்டாலும் கூட பரவாயில்லை, அவரின் கனவுகளின் மீது அவநம்பிக்கையை செலுத்தாதீர்கள்.

முடிந்து விட்டது என கூறாதீர்கள்

முடிந்து விட்டது என கூறாதீர்கள்

வாக்குவாதங்கள் என்பது உறவின் ஒரு அங்கமே. அதற்காக ஒவ்வொரு சின்ன சின்ன சண்டைகளுக்கு பிறகும், அவரை விட்டு பிரியப்போவதாக நீங்கள் மிரட்டினால், அது புத்திசாலித்தனம் கிடையாது. நீங்கள் அப்படி செய்ய விரும்பாவிட்டாலும் கூட, அவரை விட்டு பிரிய துடிக்கிறீர்களோ என்று அவர் நினைக்கத் தொடங்கி விடுவார்.

அவரின் சம்பளம்

அவரின் சம்பளம்

நீங்கள் இருவரும் தனித்தனியே பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் தம்பதிகளுக்கு கூட ஆபத்தை விளைவிக்கும் விஷயமாகும் இது. அதனால் இந்த குறிப்பிட்ட விஷயத்தை கவனமாக கையாளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things You Shouldn't Talk To Him About

There are a few things you should avoid saying. Because these things often hurt your good partner and may lead to problems between both of you.
Story first published: Monday, December 22, 2014, 12:47 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter