Latest Updates
-
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா
நீங்கள் தூங்கும் நிலை உங்கள் காதல் வாழ்க்கையை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?
நீங்கள் உங்கள் துணையுடன் அதிக நேரம் செலவழிப்பது உங்கள் படுக்கையில்தான், எனவே அது உங்கள் உறவு நிலையை பற்றிக் கூறுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
உங்கள் துணையுடன் நீங்கள் தூங்கும் நிலையே உங்கள் உறவு எப்படி இருக்கிறது என்பதை கூறிவிடும் தெரியுமா? நீங்கள் உங்கள் துணையுடன் அதிக நேரம் செலவழிப்பது உங்கள் படுக்கையில்தான், எனவே அது உங்கள் உறவு நிலையை பற்றிக் கூறுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஒருவரை ஒருவர் பின்னிய நிலையில் படுத்திருந்தாலோ அல்லது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி படுத்திருப்பது போன்றவை தூக்க நிலைகளையும் தாண்டிய ஒன்றாகும். ஒரு ஆய்வின்படி, படுக்கையில் உள்ள உடல் மொழி ஒரு உறவில் உங்கள் உணர்ச்சி நிலையை சொல்லும் குறிகாட்டியாக இருக்கலாம். உங்கள் துணையுடனான உங்களின் தூக்கநிலை உங்கள் உறவைப் பற்றி என்ன சொல்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்பூன் நிலை
இந்த நிலையில், உங்கள் கூட்டாளர் உங்களை ஒரே நேரத்தில் நெருக்கமாகவும் பாதுகாப்பாகவும் உணரும் வகையில் உங்களை இணைக்கிறார். இதில் இருவரும் பிணைந்த நிலையில் தூங்குவார்கள். இது சில தீவிரமான தொடர்புகளை உள்ளடக்கியாதக இருக்கும். இது பாலியல்ரீதியாக தோன்றினாலும் இது உணர்த்தும் ஒரே செய்தி நான் உன்னை நம்புகிறேன் என்பதுதான்.

தனித்தனியாக தூங்குவது
இந்த நிலையில் தூங்குபவர்களிடம் நெருக்கம் குறைந்திருக்கும். இருவரும் ஒருவருக்கொருவர் சுதந்திரமாக உணரலாம். இருவரும் ஒருவர் மீது ஒருவர் வெறுப்பை வளர்த்துக் கொள்ளாமல் குட்நைட் சொல்லிக் கொண்டு தூங்கும்வரை இந்த நிலை ஆபத்தானதல்ல.

எதிரெதிரே தூங்குவது
தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் முகத்தை பார்த்தபடி தூங்குவது இரவு முழுவதும் தங்கள் துணையை பார்க்க உதவும் மயக்கமான நிலை ஆகும். திடீரென உங்கள் துணை இரவில் கண் விழித்து பார்க்கும்போது எதிரே உங்கள் முகம் தெரியும்போது அது அவர்களின் காதலையும், ஆசையையும் தூண்டும். நடுராத்திரி ரொமான்ஸ்க்கு பெரும்பாலும் காரணமாக இருப்பது இந்த நிலைதான்.

ஹனிமூன் அரவணைப்பு
தூக்க நிலைகளிலேயே மிகவும் நெருக்கமான நிலை என்றால் அது இதுதான். இது ஸ்பூன் நிலையை விட மிகவும் நெருக்கமானது, இது காதல் அதிகமாக இருக்கும் காலத்தில் தூங்கும் நிலையாகும். பெரும்பாலும் காதலின் தொடக்கத்தில் இருப்பது, சில தம்பதிகள் தங்கள் ஆயுள் முழுவதும் பராமரிக்கின்றனர்.

நடுங்கும் நிலை
இந்த நிலை வலுவான ஈகோ மற்றும் உரிமையின் உணர்வைக் குறிக்கிறது, இது தம்பதிகளுக்கு இடையே இருக்கும் மிகவும் பிரபலமான தூங்கும் நிலையாகும். இந்த நிலையில் ஒருவர் பின்புறம் இருந்து அணைத்தபடியும் மற்றொருவர் தோளில் சாய்ந்த படியும் தூங்குவார்கள். இது ஒருவரை ஒருவருக்கு சார்ந்திருக்கும் படி செய்யும்.

ஸ்வீட்ஹார்ட் இணக்க நிலை
நடுங்கும் நிலையை விட ஒருபடி உயர்ந்த நிலை இதுவாகும். இந்த நிலையில் ஒருவர் மற்றொருவரின் தலையை தோள்பட்டையில் தாங்கியபடி அணைத்துக் கொண்டு தூங்குவதாகும். இதை நிலையில் தூங்குவது அக்கறை, நெருக்கம், பிணைப்பு மற்றும் பாதுகாப்பு உணர்வின் அடையாளமாகும்.

மார்பில் சாய்ந்தபடி தூங்குவது
முகத்தை மேல் நோக்கியபடி வைத்து தூங்குவது தன்னம்பிக்கை மற்றும் உறுதியை குறிக்கிறது. உங்கள் துணை தலையில் பின்புறமாக கையை வைத்துக்கொண்டு உங்களை மார்பில் சாய்ந்து தூங்க வைத்தால், : நான் எனது வலிமையை உன்னை பாதுகாக்க பயன்படுத்துகிறேன் " என்று அர்த்தம். உங்களின் தலை மட்டும் துணையின் மார்பு மீது இருந்து உடல் முழுவதும் தனியாக இருந்தால் உங்கள் நீங்கள் உங்கள் முடிவுகளை நீங்களாகவே எடுக்க விரும்புகிறீர்கள் என்று அர்த்தம்.

எதிரெதிர் திசையில் தூங்குவது
காதலிக்கவோ அல்லது கல்யாணமான புதிதில் நீங்கள் தூங்கிய நிலையையும், தற்போது உங்களுக்குள் நெருக்கம் குறைந்த பிறகு தூங்கும் நிலையையும் ஒப்பிட்டு பார்க்கவும். காலம் செல்ல செல்ல உங்களுக்குள் இருக்கும் நெருக்கம் குறையும் போது நீங்கள் இந்த நிலையில் தூங்க தொடங்கிவிடுவார்கள். இது அடிப்படையில் அதிக தூரம் கொண்ட ஸ்பூன் நிலை ஆகும். இது நம்பிக்கையை குறிக்கிறது, இது உங்கள் துணைக்கு நீங்கள் அளிக்கும் சுதந்திரத்தை குறிக்கிறது. இறுதியில், இந்த நிலை உங்கள் உறவின்
சமநிலையைக் குறிக்கிறது.

கால்களின் அணைப்பு
இந்த நிலை உண்மையில் இரண்டு விஷயங்களைக் குறிக்கும். முதலாவதாக, ஒரு ஜோடி உடல் நெருக்கத்தை காண்பிப்பதில்விருப்பம் இல்லை என்று அர்த்தம், இதனால் ஒருவரின் காலின் மற்றொருவரை காலை தொடுவது போல தற்செயலாக நடக்கிறது. மற்றொன்று இதற்கு எதிர்மாறானதாக இருக்கலாம். இது வசதி, தைரியம் அல்லது உறவிற்கு தயாராக இருப்பதன் ரகசியக் குறியீடாக இருக்கும்.

நண்டு நிலை
இது தெளிவற்ற பல அர்த்தங்களை கொண்ட மற்றொரு தூக்க நிலையாகும். நீங்கள் தற்போது உங்கள் உறவில் ஒரு கடினமான நேரத்தை அனுபவித்து வருகிறீர்கள் அல்லது சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தால், உங்கள் துணை தங்களின் கோபத்தை வெளிப்படுத்தும் முறை இதுவாகும். தேவையை உருவாக்குவது மற்றும் அதை ஒப்புக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் விலகிச் செல்வதற்கான வழி இதுவாகும்.



Click it and Unblock the Notifications