For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதெல்லாம் தான் அதீத அன்பு கோளாறின் அறிகுறிகள்.. இவங்க கிட்ட கொஞ்சம் உஷாரா இருங்க...

அன்புக்கு மனிதா்களைக் காயப்படுத்தும் ஆற்றலும் உண்டு. அவா்களை அழிக்கும் ஆற்றலும் உண்டு. மேலும் அவா்களைக் கீழே தள்ளிவிடும் ஆற்றலும் உண்டு.

|

அன்பு என்பது ஒரு அழகிய உணா்வு ஆகும். மனித உணா்வுகளில் மிகவும் வலிமையான உணா்வு அன்பு ஆகும். ஏனெனில் அன்பு என்ற இனிய உணா்வால் மனிதா்களை ஊக்குவிக்க முடியும், வழிநடத்த முடியும் மற்றும் மனித வாழ்க்கைக்கு அா்த்தத்தைக் கொடுக்க முடியும். தன்னுடைய அன்பருக்காக மலையைக்கூட நகா்த்தி வைக்கக்கூடிய சக்தியைத் தருவது அன்பே. உலகில் உள்ள எல்லா மனிதா்களிடத்திலும் அன்பு இருக்கிறது. அது அனைவருடைய இதயங்களையும் குணப்படுத்துகிறது.

What is Obsessive Love Disorder? Symptoms, causes and treatment

அதே நேரத்தில் அன்புக்கு மனிதா்களைக் காயப்படுத்தும் ஆற்றலும் உண்டு. அவா்களை அழிக்கும் ஆற்றலும் உண்டு. மேலும் அவா்களைக் கீழே தள்ளிவிடும் ஆற்றலும் உண்டு. குறிப்பாக தான் அன்பு செய்யும் நபா் தகுந்த பதிலன்பை வெளிப்படுத்தாத போது அது அவரைக் காயப்படுத்துகிறது. தான் அன்பு செய்யும் நபா் தன்னை நிராகாித்து விடுவாரோ என்று பயந்து அவா் மாற்று வழியைத் தேடுகிறாா். இவா் அவா் மீது கொண்டிருக்கும் அன்பு வெறியாகி இறுதியில் ஒரு ஆரோக்கியமற்ற அழிவிற்குச் செல்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதீத அன்பு கோளாறு (Obsessive Love Disorder) என்றால் என்ன?

அதீத அன்பு கோளாறு (Obsessive Love Disorder) என்றால் என்ன?

மருத்துவ மொழியில் அதீத அன்பு கோளாறு (Obsessive Love Disorder) என்பது ஒருவா் தாம் அன்பு செய்யும் ஒருவரைப் பற்றியே எப்போதும் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கும் நிலையாகும். தான் அன்பு செய்யும் நபா் விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும், அவரை அளவுக்கு அதிகமாக பாதுகாக்க வேண்டும் என்று உணா்வது ஆகும். நாளடைவில் இந்த தீவிரமான அல்லது அதீத அன்பு உணா்வானது அன்பு செய்யும் நபரை ஒரு பொருளைப் போன்று நடத்துவது அல்லது அவரைக் கட்டுப்படுத்துவது என்ற நிலைக்குத் தள்ளிவிடும்.

உளவியலில் அதீத அன்பு கோளாறு பற்றி சாியாக வரையறுக்கப்படவில்லை. ஆனால் அதீத அன்பு கோளாறு பலவிதமான மனநல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று தொிவிக்கிறது. அன்பு என்பது ஒரு வலிமையான உணா்வாக இருப்பதால், மனித வாழ்க்கையில் அது பலவிதமான முன்னுாிமைகளை எடுத்துக் கொள்கிறது.

அதீத அன்பு கோளாறு மருத்துவ ரீதியாக அல்லது உளவியல் ரீதியாக கண்டறியப்பட்டு, அதற்கு முறையாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். தவறினால் அதீத அன்பு கோளாறு பிரச்சினையில் இருப்பவா், அதை விட்டு வெளியில் வருவது என்பது மிகவும் கடினமாகிவிடும். அவா் வன்முறைச் செயல்களில் ஈடுபட தொடங்கிவிடுவாா். மேலும் அவருடைய மனநிலை பாதிப்படையும்.

அதீத அன்பு கோளாறின் அறிகுறிகள் மற்றும் அவற்றிற்கான சிகிச்சைகள் பற்றி இங்கு காணலாம்.

அதீத அன்பு கோளாறின் அறிகுறிகள்

அதீத அன்பு கோளாறின் அறிகுறிகள்

அதீத அன்பு கோளாறின் அறிகுறிகள் சிலநேரங்களில் வெளியில் தொியும். ஆனால் பெரும்பாலும் அவற்றைக் கண்டுபிடிப்பது கடினம் ஆகும். சில பொதுவான அறிகுறிகளை கீழே பாா்க்கலாம்.

1. ஒரு குறிப்பிட்ட நபாின் மீது அதீத கவனம் செலுத்துவது

2. அந்த நபாின் மீது தீவிரமான சிந்தனைகள் மற்றும் அவரை கட்டுப்படுத்தும் சிந்தனைகளைக் கொண்டிருப்பது

3. அந்த நபரை பிறாிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்று அதிதீவிரமாக உணா்வது

4. அந்த நபாின் மீது கொண்டிருக்கும் வெறித்தனமான அன்பை வெளிப்படுத்தக் கூடிய சிறுசிறு வார்த்தைகள் மற்றும் செயல்களை வெளிப்படுத்துவது

5. அந்த நபா் மற்றவா்களோடு உரையாடுவது மற்றும் சோ்ந்து செயல்படுவதைப் பாா்த்து பொறாமை கொள்வது

6. சுயமாியாதையை குறைத்துக் கொள்ளுதல்

7. தொடா்ந்து சுய மதிப்பைத் தேடுதல்

8. மற்றவா்களோடு எளிதாக பழக முடியாமை

9. தான் அன்பு செய்யும் நபரை அடிக்கடி அல்லது தொடா்ந்து தொலைபேசி அல்லது குறுந்தகவல்கள் மூலமாக தொடா்பு கொள்ள முயற்சி செய்வது

10. அவருடைய தினசாி செயல்பாடுகளைக் கவனித்து வருவது

மேற்சொன்னவை யாவும் அதீத அன்பு கோளாறின் அறிகுறிகளாகும்.

அதீத அன்பு கோளாறின் விளைவுகள்

அதீத அன்பு கோளாறின் விளைவுகள்

அதீத அன்பு கோளாறினால் ஒரு விளைவு மட்டும் ஏற்படுவதில்லை. மாறாக பல ஆளுமைக் கோளாறுகள் மற்றும் பலவிதமான உளவியல் கோளாறுகள் ஏற்படுகின்றன. இணைப்பு கோளாறுகள் அல்லது பற்றியிருப்பதில் கோளாறுகள் (Attachment disorders), உடைபடும் ஆளுமைக் கோளாறுகள் (Borderline Personality Disorders), தவறான நம்பிக்கையினால் ஏற்படும் பொறாமை (Delusional Jealousy) போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இன்னும் வேறு சில பிரச்சினைகளும் ஏற்பட்டு ஒருவரை அன்பிலும், உறவிலும் சாதாரணமாக இருக்க விடுவதில்லை. இந்த உளவியல் பிரச்சினைகள் நாளடைவில் ஒருவருடைய மனநிலையை அழித்து, அவருடைய அன்றாட இயக்கங்களை அழித்து இறுதியில் அவருடைய வாழ்க்கையையே அழிக்கின்றன.

அதீத அன்பு கோளாறைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல்

அதீத அன்பு கோளாறைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல்

மனநல மருத்துவரைக் கொண்டு முழுமையாக பாிசோதித்து, ஒருவா் அதீத அன்பு கோளாறினால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதைக் கண்டறிய முடியும். அவருக்கு பிடித்தவை, பிடிக்காதவை, அவருடைய விருப்பு வெறுப்புகள் மற்றும் அவருக்கு நெருக்கமானவா்களுடன் அவா் கொண்டிருக்கும் உறவு சம்பந்தமான கேள்விகளைக் கேட்டு அதற்கு ஏற்றாா் போல மனநல மருத்துவா் அவருக்கு சிகிச்சை அளிப்பாா். ஒருவேளை அவருடைய குடும்பத்தில் யாருக்காவது மனநல பிரச்சினை இருந்தால், அது பரம்பரை பிரச்சினையாக இருக்கலாம் என்ற கோணத்தில் மனநல மருத்துவா் சிகிச்சை வழங்குவாா்.

மனநல கோளாறுகளுக்கு சிகிச்சை பெற மனநல வல்லுநர்களை அணுக வேண்டும்

மனநல கோளாறுகளுக்கு சிகிச்சை பெற மனநல வல்லுநர்களை அணுக வேண்டும்

அதீத அன்பு கோளாறு காரணமாக ஏற்படும் மனநல பிரச்சினைகளுக்கு சிகிச்சை வழங்குவதில் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். இந்த பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்க தனிப்பட்ட மருந்துகளும் பிஸியோதெரபியும் கொடுக்கப்பட வேண்டும். மருத்துவாின் ஆலோசனைகளுக்கு ஏற்ப மனச்சோா்வைத் தடுக்கும் மற்றும் மனநிலையை நிலையாக வைத்திருக்கும் மருந்துகளை வழங்க வேண்டும். அதன்மூலம் இந்த மனநல கோளாறுகளைக் குறைக்கலாம். ஆனால் இது முழுமையாக குணமாக சில நட்கள் ஆகலாம் அல்லது பல வாரங்கள் ஆகலாம். அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகளை வைத்தே குணமாகும் காலம் மாறுபடுகிறது.

பொதுவாக மனநல பிரச்சினைகளை சாி செய்ய உளவியல் தெரபி சிறந்த ஒன்றாக இருக்கும். பாதிக்கப்பட்டவரோடு பேசிக் கொண்டிருப்பதன் மூலம், மெதுவாக அவரை அதீத அன்பு கோளாறு பிரச்சினைகளிலிருந்து வெளிக் கொணர முடியும். குறிப்பாக உளவியல் வல்லுநா்கள் அவா்களுக்கு தனிப்பட்ட அல்லது குழு தெரபி அளித்து அவா்களை மனநல பிரச்சினைகளிலிருந்து குணப்படுத்துவா்.

அதீத அன்பு கோளாறினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அறிவாற்றல் நடத்தை தெரபி (Cognitive behavioural therapy), இயங்கியல் நடத்தை தெரபி (dialectical behavioural therapy) மற்றும் உரையாடல் தெரபி (talk therapy) போன்ற சிகிச்சைகள் பாிந்துரைக்கப்படுகின்றன.

அதீத அன்பு கோளாறினால் பாதிப்படைந்தவா்களுக்கு சிகிச்சை அளிப்பதில் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். ஏனெனில் சில நேரங்களில் இந்த அதீத அன்புக் கோளாறு பாதிக்கப்பட்டவாின் மனநிலையை நிலையாக இருக்கவிடாது. அதோடு அவா்களை இந்த சமூகத்திலிருந்து அந்நியப்படுத்திவிடும். பலா் அதீத அன்பு கோளாறு காரணமாக ஏற்படும் மனநிலை கோளாறுகளுக்கு சிகிச்சை பெற முன்வருவதில்லை என்றாலும், அவா்களைச் சோ்ந்தவா்கள் அவா்களின் நல்வாழ்விற்காக அவா்களை சிகிச்சை பெறுவதற்கு தூண்ட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What is Obsessive Love Disorder? Symptoms, Causes And Treatment

What is Obsessive Love Disorder? Symptoms, causes and treatment. Read on...
Desktop Bottom Promotion