For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்... நோய் தீரும் ஆயுள் கூடும் - ஆய்வு சொல்லுதுங்க

|

உலகம் அன்பால் நிறைந்தது. வாழ்க்கை துணையை அன்போது காதலோடு அணுகினால் மனதில் மகிழ்ச்சியும் உடலில் ஆரோக்கியமும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். தம்பதியர் இடையேயான புரிதலும் உறவின் போதான தொடுதலும் அப்போது சுரக்கும் ஹார்மோன்களும்தான் உடலில் ஏற்படும் வலிகளையும் மன வலிகளையும் போக்கும் அருமருந்தாக திகழ்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.

திருமணம் என்பது ஒரு சுமையல்ல சுகமான பயணம். அதை தம்பதியர் இருவருமே இணைந்து அழகானதாக்க வேண்டும். திருமண பந்தத்தில் சின்னச் சின்ன சங்கடங்கள் நேரிட்டாலும் அதை எளிதாக சமாளித்து இல்லறத்தில் சந்தோசமாக பயணத்தை தொடரவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

அன்பும் நேசமான பேச்சும், பாசமான பார்வையும், காதலோடு கூடிய ஸ்பரிசமும்தான் தாம்பத்யத்தை ருசியானதாக மாற்றுகிறது.

காதல் ரசாயன மாற்றங்களால் நிறைந்தது. ஒவ்வொரு முறையும் ஒருவிதமான ரசாயனங்களால் தூண்டப்படுகிறது. மனசுக்கு பிடிச்சவங்களை பார்த்தாலோ அவர்களுடன் பேசினாலோ ஒருவித மணியடிக்கும். மூளையில் ஒருவித உற்சாக ஹார்மோன் சுரக்கும். இதெல்லாம் காதல் செய்யும் மாயம்தான். உறவின் உச்சத்தில் வெளியாகும் எண்டோர்பின் ஹார்மோன்தான் உடல் வலியை போக்குவதோடு, ஆரோக்கியத்திற்கும் வலிவகுக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அன்பான உறவு

அன்பான உறவு

ஆரோக்கியம் தரும் அன்பான உறவு

காதலர் மற்றும் தம்பதியர் இடையேயான அன்பான உறவு ஒரு சர்வரோக நிவாரணி என்றெல்லாம் கூட நிறைய உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். பாலியல் சிந்தனைகள் மனிதர்களின் மூளையை உற்சாகமூட்டுகிறதாம். நினைவுத்திறனை அதிகரிக்கிறது என்றெல்லாம் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. காரணம் காதல் ஹார்மோன்கள் நிகழ்த்தும் மாயாஜாலம்தான்.

காதல் ஹார்மோன்கள்

காதல் ஹார்மோன்கள்

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஹார்மோன்கள்

பாலியல் ஹார்மோன்களான டெஸ்டொஸ்டீரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஆகியவற்றால் பாலியல் உணர்வு தூண்டப்படுகிறது. இந்த ஹர்மோன்கள் பாலியல் உணர்வுகளிலும் பெரும் பங்கு வகிப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. தம்பதியர் இடையே நிகழும் தாம்பத்ய உறவின் மூலம் சுரக்கும் ஹார்மோன்களால் மனஅழுத்தம். வேலை, குடும்பப்பிரச்சினை மற்றும் இன்னபிற பல்வேறு பிரச்சினைகளால் உண்டாகும் மன உளைச்சலும், மன அழுத்தமும் குறைக்கப்பட்டு ரிலாக்ஸான உணர்வை அளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நோய் நிவாரணி

நோய் நிவாரணி

வலி நிவாரணி

பாலியல் எண்ணங்களை உணர்வுகளை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். தாம்பத்ய உறவின் மூலம் உடலில் நோய்கள் சரியாகிறது. தலைவலி, சளி என தாக்கினாலும் உடனடியாக

சரியாகிவிடுமாம்.

உடலுக்கு ஆரோக்கியம்

உடலுக்கு ஆரோக்கியம்

மனதிற்கு ஆரோக்கியம்

முதுகுவலி, மைக்ரேன், மூட்டுவலி, போன்றவைகளுக்கு வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதை விட உங்கள் துணையோடு ஆரோக்கியமான உறவில் ஈடுபடுங்கள் வலி பறந்து போய்விடும் என்கின்றனர் நிபுணர்கள். தம்பதிகள் தங்களின் தனியாக சந்தர்ப்பங்களில் அடிக்கடி கட்டிப்பிடிப்பதும் கூட உடலுக்கும், மனதிற்கும் ஆரோக்கியம் தரும் என்கின்றனர் நிபுணர்கள்.

இளமை புதுமை

இளமை புதுமை

இளமை தரும் ஹர்மோன்கள்

தாம்பத்ய உறவின் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அபரிதமாக அதிகரிப்பதே இதற்குக் காரணம் என்கின்றனர். உறவுக்கு முன்பும், பின்பும் விளையாடப்படும் விளையாட்டுக்கள், கொஞ்சல்கள் மூலம் உடலை இளமையாக்கும் ஹார்மோன்களை சுரக்கிறதாம். இதன்மூலம் முகத்தை பொலிவாக்கி இளமையை தக்கவைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

ஆக்ஸிடோசின் ஹார்மோன்

ஆக்ஸிடோசின் ஹார்மோன்

அன்பான உறவுக்கு ஹார்மோன்

ஆக்ஸிடோசின் எனப்படும் ஹார்மோன் ஹைபொதலாமஸ் என்ற சுரப்பியால் வெளியிடப்படுகிறது. இது காதலர்கள் உறவு கொள்ளும்போது ஏற்படும் பாலியல் உச்சகட்ட நிலையிலும் வெளியாகிறது. இதுதான் வயது வந்தவர்களுக்கு இடையே பிணைப்பு ஏற்பட உதவுவதாகக் கருதப்படுகிறது.

அதிகம் உடலுறவு கொள்ளக் கொள்ள, தம்பதியருக்கிடையே பிணைப்பு ஆழமாகிறது. இது குழந்தைப் பேறு காலத்தின் போது பெண்களுக்கு சுரக்கிறது. இதுதான் தாய்ப்பால் உருவாக உதவுகிறது. இது தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு பந்தம், பிணைப்பு ஏற்பட உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

புற்றுநோயை தடுக்கும்

அடிக்கடி உறவு கொள்வதன் மூலம் ஆண்களுக்கு வயதானபிறகு வரும் நோய் புரஸ்டேட் கேன்சரை தடுக்கிறதாம். இது பலகட்ட ஆய்வுகளுக்குப்பிறகு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இளவயதில் அதிகமாக உறவு கொள்பவர்களுக்கு வயதானபிறகு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கண்டறியப்பட்டிருக்கிறது.

அன்பை நீடிக்கும்

அன்பை நீடிக்கும்

ஆரோக்கியமான உறவு

பாலியல் உணர்வுகளை அதிகரிக்கும் ஹார்மோன்களை உடற்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்த முடியுமாம். காம உணர்வுகளை அடக்கி வைப்பதன் மூலம் மனநோய், தலைவலி போன்றவை வருமாம். திடீர் ஜுரம், மூட்டுக்களில் வீக்கம், இடுப்புவலி, உடல்பலவீனம், நடுக்கம், மார்புவலி, மயக்கம், போன்றவைகளோடு திடீரென இருதய நோய் கூட வரும் என்கின்றனர் நிபுணர்கள். எனவே தம்பதியர் மாதத்திற்கு ஆறு இரவுகள் உறவில் ஈடுபடுவதோ, அன்பான அணைப்போடு உறங்குவதோ உறவின் பிணைப்பை நீடிக்கச் செய்யும் என்கின்றனர். அப்புறம் என்ன காசா பணமா? அன்பை திகட்ட திகட்ட அள்ளிக்கொடுங்கள். லவ் பண்ணுங்க சார்... எந்த நோயும் எட்டிக்கூட பார்க்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Healing Powers of love starting with oxytocin

Love apparently unleashes a bevy of chemical compounds into the brain, starting with oxytocin, otherwise known as the bonding or cuddle hormone.
Story first published: Tuesday, July 23, 2019, 17:35 [IST]