For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதலர் தின ஸ்பெஷல்: முத்த உரையாடலும் மோகம் கொண்ட முடிவில்லா காதலும் உன்னை நோக்கியே…!

|

உலகம் முழுவதும் காதலால்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. காதலிக்காத மனிதர்களே இவ்வுலகில் இல்லை எனலாம். அந்தளவிற்கு அனைவரும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார். அன்பு ஒன்றுதான் இங்கு அத்தியாவசியம். ஒரு வருடத்தின் முக்கியமான மாதம் என்றால், அது பிப்ரவரி மாதம் என்றுதான் அனைவரும் கூறுவார்கள். உலகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என்றே காதலர் தினத்தை கூறலாம். காதலர் தினம் அன்றுதான் காதலை வெளிபடுத்த வேண்டும் என்று அவசியமில்லை. எல்லா நாளும் நீங்கள் காதலர் தினமாக நினைத்து அன்பு செலுத்தலாம்.

romantic-love-poems-for-valentine-s-day

உங்கள் வாழ்விலும் எல்லாரிடத்தும் அன்பு செலுத்துங்கள். உங்கள் அன்புக்குரியவருக்கு காதலர் தினத்தில் அவர்களின் மனதை தொடும்படி காதல் பரிசு கொடுக்க வேண்டும் என்று சிலர் விரும்புவீர்கள். இந்த காதலர் தினத்தில்தான் சிலர் காதலை வெளிப்படுத்த நினைத்திருப்பார்கள். சிலர் காதல் தோல்வியில் கூட இருப்பார்கள். சிலர் தன் காதலன் அல்லது காதலி யார் என்று தேடிக்கொண்டு இருப்பார்கள். இப்படியாக இந்த காதலர் தினத்தை கொண்டாடும் காதலர்களுக்கு சில கவிதைகளை இங்கே கொடுத்துள்ளோம். காதல் மகிழ்ச்சி, தேடல், பிரிவு மற்றும் வருத்தம் ஆகிய எல்லா தலைப்புகளும் சேர்ந்த கவிதை தொகுப்பு உங்களுக்காக....

கவிதை எழுதியவர்: ரஞ்சிதா ரவி

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜோடி யார்?

ஜோடி யார்?

மாநகரத்தின் முக்கிய சாலையை

மாடிபடிக்கட்டில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன்

சாலையேர மரத்தின் நிழலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த

இருசக்கர வாகனத்தில் சாய்ந்திருந்தாள் அவள்

நிலவொளி அவள் மீது படாதவாறு

அவளுக்கு மிக அருகில் நின்றுகொண்டிருந்தான் அவன்

அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த என் கண்கள்

வியப்பில் மூடிக்கொண்டது

காரணம்

அவனின் உதடு அவளின் கண்ணத்திற்கு சென்றதால்

மீண்டும் திறந்த என் கண்கள்

திறந்தவெளியில் கட்டியணைத்துக்கொண்டிருந்த

அந்த ஜோடியை பார்த்தவாறே

தேடிக்கொண்டிருக்கிறது

தன் ஜோடி யாராக இருக்குமென்று...!

MOST READ: காதலர்களே! காதலர் தினத்துக்கு இந்த ரொமாண்டிக்கான விஷயங்களை செய்து உங்க லவ்வர அசத்துங்க...!

பயணக் காதல்

பயணக் காதல்

பேருந்து இருக்கை முழுவதும்

நிரம்பி இருந்தன

அவனிருக்கும் இருக்கையைத் தவிர

அருகில் சென்று அமர்ந்தேன்

அடுத்த நிறுத்தத்தில்

இனிப்புகளை கண்ட ஈக்கள் போல

பேருந்து எங்கும் நிரம்பி வழிந்தனர் பயணிகள்

நெரிசல் காரணமாக நெருங்கி அமர்ந்தோம்

அப்போது, செயல்பட்டது நியூட்டனின் மூன்றாம் விதி

ஒரு நிமிடம் சபலப்பட்ட மனம்

ஒரு நொடியில் திரும்பியது

காரணம் பொதுவெளி என்பதால்

சைதாப்பேட்டை வந்ததும் ஈக்கள் கூட்டம் முழுவதும் இறங்கி விட்டன

ஆனால் இனிப்பான என்னவன் மட்டும் என் அருகில்

இப்போது எங்களுக்குள் இடைவெளி

இன்னும் சற்று நேரம் ஈக்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றியது

அக்கணம் கண்டேன் அவனை

கண்கள் கூறியது

அடுத்தது என் நிறுத்தம் என்று

வழி விட்டேன் நான்

அவன் சென்ற வழியை பார்வையிட்டவாறே...!

திருந்தாத மனம்

திருந்தாத மனம்

தித்திக்கும் உன் பேச்சிலும்

திக்குமுக்காட வைக்கும் உன் அரவணைப்பிலும்

திகட்டாத உன் அன்பிலும்

திளைத்துதான் போயிருந்தேன்

தினமும் உன்னுடன் இருக்கும்போது

திரும்ப வர முடியாத இடத்திற்கு நீ சென்றது தெரிந்தும்

திரும்பத் திரும்ப உன்னையே எதிர்பார்க்கிறது

திரும்பி நீ வருவாய் என்ற நம்பிக்கையில்

திருந்தாத என் மனம்...!

நன்றாக இருக்கிறாய்

நன்றாக இருக்கிறாய்

நீ நன்றாக இருக்கிறாய் என்ற

நம்பிக்கையில் நானும் இருக்கிறேன்

சில மாதங்கள் ஆகின்றன உன்னிடம் பேசி

உனக்கு ஏதும் பிரச்சனை என்றால்

உடனே எனக்கு சொல்

அப்போதாவது என்னை அழை

உடனே ஓடிவருகிறேன்

என் அன்பை எடுத்துக்கொண்டு

உன்னை காண

ஆனால்,

முன்பு நேசித்ததைபோன்று

இப்போதும் நீ என்னை நேசிக்கிறாயா?

என்பது

எனக்கு தேவையில்லை

நீ அங்கு நன்றாக இருக்கிறாய் என்ற நம்பிக்கையுடன்

நானும் இங்கு நன்றாகதான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை

என்னுள் விதைத்துக்கொண்டு

வாழ்ந்துகொண்டிருக்கிறேன்...!

MOST READ: உங்க ராசிப்படி எந்தமாறி "டேட்டிங்" போனா உங்க காதல் ஜெயிக்கும் தெரியுமா?

முடிவில்லா காதல்

முடிவில்லா காதல்

காற்றில் அசைந்து கொண்டிருந்த

என் முடியை சரி செய்ய முயன்ற போது

சரியாக என்னையே பார்த்துக்கொண்டிருந்த

உன்னைக் கண்டுவிட்டேன்...

உன் கண்களில் தெரிந்த காதலை

சரிசெய்ய நான் முயலவில்லை

ஏனென்றால்

என் முடியின் மீது

நீ கொண்ட காதல்

முடிவில்லாமல் தொடரட்டும் என்று...!

மழை காதல்

மழை காதல்

ஓர் இரவில்

ஆளரவமற்ற தேசிய நெடுஞ்சாலையில்

வரிசையாக மின் விளக்குகள்

அணைந்து அணைந்து எரியும்

மின் விளக்குகளுக்கு மத்தியில்

அணையாமல் எரியும்

நிலவின் ஒளியில்

அவனுடன் ஒரு நடைபயணம்

அப்போதுதான் பேசத் தொடங்கும்

மழலை போல பேசுவதற்கு தடுமாறினோம்

ஆனால்

கண்கள் தடுமாறாமல் பார்த்துக் கொண்டிருந்தன

கைகள் கோர்த்து கால்கள் மெதுவாக

நடை பழகிக் கொண்டிருந்தபோது

நீண்ட ஒரு மௌன உரையாடல்

இப்படியாக சென்ற இரவில்

திடீரென அந்த உரையாடலை

கலைத்தது மழை

வானமாக இருந்த என்னையும்

மண்ணாக இருந்த அவனையும்

இவ்விரவில் இணைத்தது மழை...!

நானாக மாறுகிறேன்

நானாக மாறுகிறேன்

இப்போது எல்லாம் நான் வருத்தப்படுவதே இல்லை

எதையோ இழந்ததைப் போன்று நினைத்துக் கொண்டிருப்பதும் இல்லை

நீ அழைப்பாய் என நான் காத்திருப்பதும் இல்லை

நடு இரவில் விழித்துக் கொண்டு

உன்னுடைய குறுஞ்செய்தி வந்திருக்கிறதா என்று

எதிர்பார்ப்பதும் இல்லை

உன்னிடம் தினமும் பேசாமல் என்னால் இருக்க முடிகிறது

உன்னுடைய குட்மார்னிங் மெசேஜ் இல்லாமல் தொடங்கும் நாட்களை

நான் கடக்க கற்றுக்கொண்டிருக்கிறேன்

உன்னை பற்றி பேசும்போதும்

நினைக்கும்போதும் முன்புவரும் கண்ணீர்

தற்போது சிறு புன்னகையாக மாறியிருக்கிறது

நீயாக மாறியிருந்த நான்

தற்போது நானாக மாறிவருகிறேன்...!

MOST READ: நல்ல காதலிக்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? இந்த மாதிரி காதலி கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...!

முத்த உரையாடல்

முத்த உரையாடல்

குளிர் சாதனப்பெட்டியிலிருந்து வரும் சில்லென்ற காற்று

சிறு இடைவெளியிலும் சின்னதாய் ஒரு ஊடல்

கைகளுக்கு இடையில் என் கூந்தல் அருவியில் மூழ்கிப் போயிருந்த அவனை

நினைவுக்குக் கொண்டுவர

என் மூச்சுக்காற்றை அவனுள் செலுத்தி செய்தேன் ஒரு சிறிய முதலுதவி

முழித்துக்கொண்ட அவனோ உடனே பசியில்

விடாது சுவைத்துக் கொண்டிருந்தான் என் இதழை

முன்பணி இரவில் மூணாறு சாலையில்

முந்திக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு மத்தியில்

முன் நகராமல் நின்றி ருந்த

சிவப்பு வண்ண காரில் அரங்கேறிக் கொண்டிருந்தது

முத்த உரையாடல்...!

உன்னை நோக்கி...

உன்னை நோக்கி...

மொட்டு அவிழ்வதை போன்று அவிழ்க்க விரும்புகிறேன்

உன் ஞாபகங்களை

எவ்வித ஓசையும் சலனமுமின்றி

அவிழ்ந்த உன் ஞாபகங்கள் ஆவியாகி

என் கருமேக கண்களில் சரணாகதியடைந்தபோது

மழைத்துளிகளென பெருக்கெடுக்கும்

கண்ணீர் துளிகள்

யாருக்கும் தெரியாமல் ஓடுகின்றன

அவனிருக்கும் இடத்தை நோக்கி...!

கரு

கரு

பூட்டிய வீட்டினுள்

என்னுள் புதைந்து கிடக்கும்

உன் நினைவுகளை தோண்டி எடுக்க முயல்கிறேன்

இவ்விரவில்

கடப்பாறையை கொண்டோ கல்லை கொண்டோ

எடுக்க முடியாத உன் நினைவுகளை

சிறு ஊசியால் கலைக்க முற்பட்டேன்

ஆனால் தோற்றுப் போகிறேன் முடிவில் உன் நினைவாக

நான் சுமக்கும் கருவை கலைக்க...!

MOST READ: ஆன்லைனில் நிச்சயதார்த்தம் செய்த இந்தியர்!.. இப்படியாவது நடக்குமா? என்ற ஏக்கத்தில் 90கிட்ஸ்...!

மோகம் கொண்ட சிகை

மோகம் கொண்ட சிகை

உன் இதழ் பட்ட இடம் வருட

என்ன வேகம்? என் சிகைக்கு

இமைகள்

கண்கள்

இதழ்

கன்னம்

என முகம் முழுவதும் மோகம் கொண்டு

வருடி வருகிறது...!

முத்தமிட தயார்

முத்தமிட தயார்

என் கன்னத்தை முத்தமிட்டு கொண்டிருந்த

காதோர சிகையை ரசித்தவாறு

சிரித்துக்கொண்டிருந்த உன் இதழை

இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த என் கண்கள்

கண்டுகொண்டன..

என் காதோர சிகையும்

உன் இதழ் மேலுள்ள சிகையும் முத்தமிட்ட

தயாராக உள்ளதை...!

கவிதை தொகுப்பு

கவிதை தொகுப்பு

தொண்டை குழியில் அடைத்திருக்கும்

உமிழ்நீர்போன்ற உன் நியாபகங்களை

முழுவதுமாக உமிழ்ந்துவிட முடியாமலும்

உட்செலுத்த முடியாமலும் தவிக்கிறேன்

வேதனையை தானே தசைபோன்று

வளர்த்துக்கொண்டிருக்கிறேன் என்று தெரிந்தும்

அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்யவில்லை

மகிழ்ச்சியும் கவலையுமாக நீயே கலையான

என் மனதில் கவிதை தொகுப்பாய் இருப்பதால்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Romantic Love Poems for Valentine's Day

Enjoy this beautiful collection of love poems for Valentines Day.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more