For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் இந்த விஷயங்களுக்காக ஒருபோதும் ஆண்களிடம் கெஞ்சவே கூடாதாம்...!

ஆண்களின் பொறுப்பின்மை காதலில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, ஆண்களின் அலட்சியத்தையும், பொறுப்பின்மையையும் சகித்துக் கொண்டு காதலிக்கும் நிலைக்கு பெண்கள் வந்துவிட்டனர்.

|

காலம் முன்னர் போல இப்போது இல்லை, நிறைய விஷயங்கள் மாறிவிட்டது. அப்படி மாறிய பல விஷயங்களில் காதலும் ஒன்றாகும். காதலும் சரி, காதலர்களும் சரி இப்பொழுதும் பல விஷயங்களில் மாறிவிட்டார்கள். காதலில் முன்னர் காலங்களில் ஆண்களே அதிகம் பெண்களை பின்தொடருவார்கள், காதலில் வீழ்த்த, காதலை சொல்ல, பராமரிக்க என அனைத்திலும் ஆண்களின் பங்கே அதிகமாக இருந்தது.

never beg a man for these things

தற்போதைய காலக்கட்டத்தில் ஆண்கள் செய்த அனைத்தையும் பெண்களும் செய்யத் தொடங்கிவிட்டனர். ஆண்களின் பொறுப்பின்மை காதலில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, ஆண்களின் அலட்சியத்தையும், பொறுப்பின்மையையும் சகித்துக் கொண்டு காதலிக்கும் நிலைக்கு பெண்கள் வந்துவிட்டனர். இந்த சூழ்நிலையில் காதலில் சில விஷயங்களுக்காக பெண்கள் ஒருபோதும் கெஞ்சக்கூடாது. ஏனெனில் அவற்றை பெறவேண்டியது அவர்களின் உரிமையாகும். இந்த பதிவில் பெண்கள் எந்தெந்த விஷயங்களுக்காக காதலரிடம் கெஞ்சக்கூடாது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மரியாதை

மரியாதை

பெண்களை அடிப்படையில் மனதில் வைத்துக்கொள்ள வேண்டியது இதைத்தான். ஒருபோதும் உங்களை மரியாதையாக நடத்தும்படி உங்கள் காதலனிடம் கெஞ்சாதீர்கள். ஏனெனில் இப்படி நீங்கள் கெஞ்சுவது அவர்கள் உங்களை நடத்தும் விதத்தை நீங்கள் சகித்துக் கொள்வது போலவும், அவர்கள் உங்களை விட வலிமையானவர்கள் போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும். உங்களுக்கான மரியாதையை பெற வேண்டியது உங்களின் உரிமை, அதற்காக நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். மரியாதைக் கொடுத்து மரியாதை பெற வேண்டியது மற்ற உறவுகளைக் காட்டிலும் காதலுக்கு அதிகம் பொருந்தும்.

மெசேஜ்

மெசேஜ்

உங்களுக்காக அர்த்தமுள்ள சில வாக்கியங்களை உருவாக்கக் கூட உங்கள் காதலனுக்கு திறன் இல்லை என்றால், நீங்கள் அவரின் மெசேஜ்க்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. தினமும் காலை மற்றும் இரவு வாழ்த்து செய்தி அனுப்பாமல் இருப்பது அல்லது உங்களின் மெசேஜை பார்த்தப் பிறகும் அதற்கு பதில் அளிக்காமல் இருப்பது போன்றவை அவரின் ஒரு நிமிடத்திற்கு கூட உங்களுக்கு தகுதி இல்லை என்பதை உணர்த்துகிறது. எனக்கு மெசேஜ் அனுப்பு என்று நீங்கள் ஒருபோதும் அவரிடம் கெஞ்சக்கூடாது.

பாராட்டுக்கள்

பாராட்டுக்கள்

உண்மையானக் காதலன் தன் காதலியின் தோற்றத்தில் ஏற்படும் சின்ன சின்ன மாற்றத்தையும் கவனிப்பவனாகவும், காதலியை பாராட்டக் கூடியவனாகவும் இருப்பான். தங்களின் காதலியை பாராட்டுவதில் அவள் மீது அவர்கள் வைத்திருக்கும் காதலை ஆண்கள் உணர்த்துவார்கள். இது ஒரு நல்ல காதலனுக்கான அடையாளமாகும். ஆனால் இதனை செய்ய வேண்டும் என்று ஒருபோதும் உங்கள் காதலனை கெஞ்சக்கூடாது. இது அவர்களின் கடமையாகும்.

MOST READ: இந்திய வரலாற்றில் இப்படி ஒரு மன்னரை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது... அவர் யார் தெரியுமா?

முன்னுரிமை கொடுக்க வேண்டும்

முன்னுரிமை கொடுக்க வேண்டும்

நீங்கள்தான் அவர்களின் முன்னுரிமையாக எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று ஒருபோதும் நீங்கள் கெஞ்சக்கூடாது. உங்களுக்கான முன்னுரிமையை கெஞ்சிப் பெற வேண்டிய சூழ்நிலையில் உங்களை வைத்திருக்கும் காதலன் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் இருக்க தகுதி இல்லாதவர்கள். அவர் உங்களை தனது முன்னுரிமையாக மாற்றத் தயாராக இல்லை என்றால், நீங்கள் அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துங்கள். அதற்கு பிறகும் அவர்கள் தன்னை மாற்றிக்கொள்ள விட்டால் நீங்கள் உங்கள் காதலைப் பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறீர்கள்.

முன்னாள் காதலியை மறக்க வேண்டும்

முன்னாள் காதலியை மறக்க வேண்டும்

அவர் உங்களைத் தேர்ந்தெடுத்து, தனது கடந்த காலத்தை விட்டுவிட்டு, தனது முன்னாள் காதலியை மறந்துவிட்டு அவர் இன்னும் தயாராக இல்லை என்று உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் அந்த காதலை விட்டு வெளியேற வேண்டிய தருணத்தில் உள்ளீர்கள் என்று அர்த்தம். உங்களை காதலித்துக் கொண்டு முன்னாள் காதலியை மறக்காமல் இருப்பவர்களுக்கு உங்கள் வாழ்க்கையில் இருக்க தகுதியில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

கவனிப்பு

கவனிப்பு

நீங்கள் வேலையிலிருந்து திரும்பி வரும்போதோ அல்லது மோசமான ஏதாவது சம்பவங்களை சந்திக்க நேர்ந்தாலோ உங்கள் காதலன் உங்களை உங்களின் பிரச்சினையை கவனிக்க வேண்டுமென்றோ அல்லது நீங்கள் பேசுவதை கேட்க வேண்டுமென்றோ நீங்கள் கேட்க வேண்டிய அவசியமில்லை. உங்களின் அனைத்து சூழ்நிலைககளிலும் உங்கள் காதலன் உங்களின் மனநிலை குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

MOST READ: உங்க ராசிப்படி உங்களுக்குள் ஒளிந்திருக்கும் பெருமைவாய்ந்த குணம் என்ன தெரியுமா?

நேர்மை

நேர்மை

விசுவாசத்தைப் போலவே மலிவான மக்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்க கூடாத ஒரு விஷயம் நேர்மை ஆகும். சுயநலமும், ஈகோவும், நச்சுத்தன்மையும் கொண்ட ஆண்களிடம் இருந்து ஒருபோதும் நீங்கள் நேர்மையை எதிர்பார்க்க முடியாது. உண்மையான காதலன் உங்களுக்கு எப்பொழுதும் நேர்மையாக இருப்பான், ஒருவேளை ஒருமுறை அவர் உங்களை ஏமாற்றினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு கொடுக்காதீர்கள், ஏனெனில் ஒருமுறை ஏமாற்றியவர்கள் மீண்டும் ஏமாற்ற தயங்க மாட்டார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Never Beg a Man For These Things

Here is the list of things women should never beg from man
Story first published: Tuesday, November 26, 2019, 18:11 [IST]
Desktop Bottom Promotion