Latest Updates
-
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
30 வயதிற்கு பிறகு உங்கள் பாலியல் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா? ரெடியா இருங்க...!
பாலியல் அனுபவம் என்பது எப்போதுமே தனித்துவம் வாய்ந்தது. ஆனால் ஆயுள் முழுவதும் பாலியல் வாழ்க்கை ஒரே மாதிரி இருக்குமா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் கூற வேண்டும்.
பாலியல் அனுபவம் என்பது எப்போதுமே தனித்துவம் வாய்ந்தது. ஆனால் ஆயுள் முழுவதும் பாலியல் வாழ்க்கை ஒரே மாதிரி இருக்குமா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் கூற வேண்டும். நீங்கள் 20, 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களாக இருக்கும்போது உங்கள் பாலியல் அனுபவம் வித்தியாசமானதாக இருக்கும், மேலும் உங்கள் வயது அதிகரிக்கும் போது அது மாறிக்கொண்டே இருக்கும்.

நீங்கள் எப்போது, எப்படி உச்சக்கட்டத்தை அடைய விரும்புகிறீர்கள் என்பதில் பல விஷயங்கள் மாறியிருக்கும். நீங்கள் 30 வயதில் இருந்தால், உங்கள் பாலியல் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. அவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.

பாலியல் ஆசை வலுவானதாக இருக்காது
நீங்கள் 30 வயதை அடைந்தவுடன், நீங்கள் முன்பு ஆர்வத்துடன் உடலுறவில் ஈடுபட்டது போல அதைச் செய்வதற்கான வலுவான விருப்பத்தை நீங்கள் உணரமாட்டிர்கள். சிலர் இது தங்களுக்கு சிறந்த நேரம் என்று நினைக்கிறார்கள் ஆனால் பலர் அவ்வாறு செய்வதில்லை. சில சந்தர்ப்பங்களில் தூண்டுதல் குறையத் தொடங்குகிறது. பொதுவாக குழந்தைகள், குடும்பம், வேலை போன்றவற்றால் ஏற்படும் மன அழுத்தம் அல்லது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது போன்றவற்றால் இருக்கலாம்.

வறட்சி
நீங்கள் பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரையை உட்கொண்டிருந்தால், உடலுறவு கொள்வதற்கான உங்கள் தூண்டுதலும் குறைந்து இருக்கலாம். மாத்திரைகள் அண்டவிடுப்பைத் தடுக்கின்றன, இதனால் டெஸ்டோஸ்டிரோன் குறைகிறது. நீங்கள் பிறப்புறுப்பில் வறட்சியை உணரலாம், நீங்கள் உறவில் ஈடுபடும்போது சௌகரியமாக உணரமாட்டிர்கள். அதனால்தான் நீங்கள் நல்ல லூப்ரிகண்டுகளில் கவனம் செலுத்த நேரிடும். இது குறித்து இருவரும் நிறைய ஆலோசிக்க வேண்டியிருக்கும்.

அதிர்வெண்களில் மாற்றம்
நிச்சயமாக ஆசை அதிகமாக இல்லை என்றால், அதைச் செய்வதற்கான உங்கள் அதிர்வெண்ணும் குறையும். அந்த குறிப்பிட்ட எண்ணிக்கையை வாரத்திற்கு அடைய நீங்கள் அழுத்தத்தை விட்டுவிட வேண்டும். இது திரைப்படம் அல்ல நிஜ வாழ்க்கை என்பதை உணர வேண்டும். எனவே உங்கள் துணையுடன் இதனைப் பற்றி பேசவும், இதனால் நீங்கள் இருவரும் ஒரே அதிர்வெண்ணை கொண்டிருக்க வாய்ப்புள்ளது.

எளிதான உச்சக்கட்டம்
பல பெண்களுக்கு அவர்களின் வயதுக்கு ஏற்ப, அவர்கள் படுக்கையில் என்ன விரும்புகிறார்கள், படுக்கையில் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பது எது என்பது நன்கு தெரியும். பொசிஷன், சரியான இடங்கள் மற்றும் எண்ணங்கள் போன்றவற்றை நன்கு அறிவார்கள். இது அவர்கள் உச்சக்கட்டத்தை அடைவதை எளிதாக்குகிறது. 20 களில் நாம் இன்னும் நம் உடல்கள், நம் விருப்பங்கள் மற்றும் முக்கிய புள்ளிகளைப் பற்றிய தெளிவற்று இருப்போம்.

புதிய முயற்சிகள்
உங்கள் உடலுடன் நீங்கள் மிகவும் வசதியாக இருப்பதால், நீங்கள் இன்னும் அதிகமாக பரிசோதனை செய்யத் தொடங்கியிருப்பீர்கள் என்பதை நீங்கள் விரைவில் உணருவீர்கள். வயது முதிர்ச்சியைக் காட்டும் முதிர்ச்சி பெரும்பாலும் நம் தோற்றத்தில் அமைதியைக் கொண்டுவருகிறது, நம்மால் என்ன செய்ய முடியும் என்பதைக் கண்டுபிடிக்க உதவுகிறது மற்றும் அதற்கேற்ப பரிசோதனை செய்கிறது. நாம் யார், நம் தேவைகள் என்ன என்பதற்காக நம்மை நாமே தழுவிக் கொள்வதால் சில கூச்சம் போய்விடும். இதனால் உடலுறவு உங்களுக்கு மிகவும் எளிதானதாக மாறியிருக்கும்.



Click it and Unblock the Notifications