For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களை ஏன் பெண்கள் கொண்டாட வேண்டும்...அதற்கு பின்னல் இருக்கும் காரணத்தை தெரிஞ்சிக்கோங்க!

|

சர்வதேச பெண்கள் தினத்தை உலகமே சேர்ந்து கொண்டாடும். ஆனால், ஆண்கள் தினம் என்ன தேதியென்று இங்கு நிறைய ஆண்களுக்கே தெரிவதில்லை. அந்த அளவிற்கு இருக்கிறது ஆண்களின் நிலைமை என்கிறார்கள் சில ஆண்கள்.

உலகில் உள்ள ஆண்களை கௌரவப்படுத்தும் விதமாகவும், ஆண்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருதியும் ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இச்சமூகத்தில் ஆண்களின் பங்கு என்பது மிகமிக முக்கியம்.

International Men’s Day: Importance, History and How to Celebrate In Tamil

மகத்தான பல தியாகங்களை குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் செய்து வரும் ஆண்களின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் அதை நினைவுபடுத்தும் நாளாக விளங்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்வதேச ஆண்கள் தினம்

சர்வதேச ஆண்கள் தினம்

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 ஆம் தேதி உலக ஆண்கள் தினம் (International Men's Day) கொண்டாடப்பட்டு வருகிறது. 1999 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் உள்ள ட்ரினிடாட் & டொபாகோவில் இது தொடங்கப்பட்டது. ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இந்த தினம் விளங்குகிறது. உலகெங்கிலும் 60 நாடுகளில் ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா, ஹங்கேரி போன்றவற்றை உள்ளடக்கிய உலகின் 70 க்கும் மேற்பட்ட நாடுகளால் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

ஆண்களுக்கு ஏன் தினம் கொண்டாட வேண்டும்?

ஆண்களுக்கு ஏன் தினம் கொண்டாட வேண்டும்?

ஆண்கள் என்பவர் பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு பாதுகாவலனாக இருக்க வேண்டும். வீரம் நிறைந்தவனாக இருக்க வேண்டும். குடும்பத்தினருடைய தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைக்கும் பொறுப்பு ஆண்களுக்கு அதிகம். மேலும் அலுவலகத்தில் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஏராளம். வீட்டில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் அதைவிட ஏராளம் என எண்ணும் போது அவர்களுடைய மனம் மற்றும் உடல் மிகுந்த அளவில் பாதிக்கப்படுகிறது.

அலுவலகம், குடும்பம் என பல்வேறு இடங்களில் ஏற்படும் பிரச்சினைகளால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு முயல்கிறார்கள் ஆண்கள். ஆண்களுக்கான பிரச்சினைகளை களைவதற்கும், அவர்களின் மனம் மற்றும் உடல் நலத்தை பேண ஊக்குவிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது. ஆண்கள் தங்களுக்காகக் கொண்டாடப்படும் இந்த நாளில் அனைத்து கவலைகளும் மறந்து கொண்டாட ஏற்படுத்தப்பட்டது.

MOST READ: டயட்டே இல்லாமல் உங்கள் தொப்பையை குறைக்க உதவும் இயற்கை முறை...!

இயந்திரமா ஆண்கள்?

இயந்திரமா ஆண்கள்?

பொதுவாக எல்லா பெண்களும் கூறுவது, 'உனக்கு என்னப்பா நீ ஆம்பளையா பொறந்துட்ட, உனக்கு என்ன கவலை. நீயெல்லாம் ஜாலியா இருக்கலாம்' என்பதுதான். ஆனால், இந்த சமூகம் ஆண்களை எவ்வாறு மதிப்பிடுகிறது என்பது அவசியம். ஆண், பெண் இருவரும் சமம் என்றாலும், பொதுவாக இந்த சமூகம் அவர்களை எப்படி பார்க்கிறது என்பது இங்கு மிக முக்கியம்.

பெண்கள் என்றால் அழகு, ஆண்கள் என்றால் சம்பாத்தியம். இதுதான் இந்த பொதுச்சமூகம் சொல்வது. ஒரு ஆண் சம்பாதிக்காமல் இருந்து விட்டால் அவனை ஆணாகவே பார்க்க மறுக்கிறது. இதில் உத்தியோகம் புருஷ லட்சணம் என்ற பழமொழி வேறு தேய்ந்த ரோடியோ போன்று எல்லாருடைய வீட்டிலும் ஓடிக்கொண்டிருக்கும். அதுப்போல ஓட ஆண்கள் என்ன இயந்திரமா? அவர்களும் மனிதர்களே...

"அன்பு காட்டத் தெரியாதவன் ஆண் அல்ல... அன்பைக் காட்ட நேரமில்லாமல் குடும்பத்திற்காக உழைக்கும் ஒரு ஜீவன்". ஆண்கள் என்பவர்கள் இயந்திரம் அல்ல அவர்களும் சாதாரண மனிதர்களே. ஆனால், தன் குடும்பத்தின் தேவைக்காக தன்னையே அழித்துக்கொள்பவர் ஆண்கள்.

அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஆண்களே

அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஆண்களே

உலக சுகாதார நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில், உலக அளவில் பெண்களை விட ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பெண்களுக்கு அதிகளவு மன அழுத்தம் இருந்தாலும், ஆண்களே அதிகளவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம்.

பெண்கள் தங்களுடைய கவலைகளைப் புலம்பிவிடுவார்கள். ஆண்கள் அவ்வாறு செய்வதில்லை. காரணம். ஆண்கள் என்றால் கவலைகளை வெளியே காட்டிக் கொள்ளக் கூடாது, அழக்கூடாது என்று அவர்களுடைய உணர்ச்சிகளை வெளியில் காட்டமுடியாத படி நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். ஆண்கள் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று வரையறை வேறு.

பதற்றம், கவலை எல்லாமே ஆண்களுக்கும் உண்டு. உணர்ச்சிகள் என்பது மனித இயல்பு. உணர்ச்சிகள் என்பது பெண்களுக்கு மட்டுமே சொந்தமல்ல. ஆண்களின் உணர்ச்சிகளையும் புரிந்து கொண்டு, அதனையும் இந்த சமூகம் ஏற்றுக் கொள்ள பழக வேண்டும்.

ஆண்களுக்கும் பாலியல் தொந்தரவுகள்

ஆண்களுக்கும் பாலியல் தொந்தரவுகள்

பெண்களுக்கு எதிராக இங்கு நடக்கும் பாலியல் வன்முறைகள் அதிகம். அதேபோல ஆண்களுக்கு எதிராகவும் இங்கு நிறைய பாலியல் வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஆனால், அவை பெரும்பான்மையாக வெளியில் தெரிவதில்லை. எங்கு அதை வெளிப்படுத்தினால், தான் வலிமையற்றவனாகத் தெரிந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் ஆண்கள் பலர் வெளியே சொல்லத் தயங்குகிறார்கள்.

பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை குறித்து புகார் அளிப்பது பெரிதாகப் பேசப்படுவதும் மற்றும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதும் போல, ஆண்களின் புகார்களும் இங்கு பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆண்கள் மீது திணிக்கப்படும் எதிர்பார்ப்புகள்

ஆண்கள் மீது திணிக்கப்படும் எதிர்பார்ப்புகள்

வளர்ந்து வரும் நவீன உலகில் ஆண்களும், பெண்களும் வேலைக்கு செல்கிறார்கள், சம்பாதிக்கிறார்கள். இருவருக்கும் பொறுப்பு உண்டு. ஆனால், இன்றும் திருமணத்திற்கு மாப்பிளை தேடும் போது, பெண்ணை விட ஆண் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அந்த பெண்ணுக்கும் பெற்றோர்களுக்கும் இருக்கிறது.

எதிர்பார்ப்புகள் ஆண்கள் மீது திணிக்கப்படுகின்றன. இவ்வாறு ஆண்கள் மீது இந்த சமூகம் வைக்கும் எல்லா எதிர்பார்ப்புகளையும், எல்லா ஆண்களாலும் சமாளிக்க முடியாது என்பது நிதர்சனம். ஆனால், அவர்கள் சமாளிக்க முயல்வார்கள்.

பெண்கள் கொண்டாட வேண்டும்

பெண்கள் கொண்டாட வேண்டும்

பெண்கள் தினத்தை ஆண்கள் எவ்வளவு மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்களோ, அதேப் போன்று ஆண்கள் தினத்தை எல்லா பெண்களும் கொண்டாடவேண்டும். எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

* கடிதம்

* விரும்பிய உணவைச் சமைத்து கொடுப்பது

* அவர்கள் விருப்பப்படுவதை நிறைவேற்றுங்கள்

* சிறப்பு பரிசளியுங்கள்

* ஆண்கள் தினம் குறித்து நிகழ்ச்சி நடத்துங்கள்

அப்பா, கணவர், அண்ணன், தம்பி என்ற எந்த உறவு முறையாக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு கடித்ததின் மூலம் வாழ்த்து சொல்லுங்கள். அவர்கள் பற்றிய குறிப்போ, எதோ ஒரு விஷயமோ அவர்களுக்காக எழுதி நீங்கள் கொடுக்கும் போது, அது ஆண்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

MOST READ: இந்த இலை புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்கும் தெரியுமா?

ஆண்கள் தின வாழ்த்துக்கள்

ஆண்கள் தின வாழ்த்துக்கள்

தற்போதைய காலங்களில் ஆண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொது மக்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாகப் பல நிகழ்வுகள் நடக்கக்கூடும். அந்த நிகழ்வுக்கு அவர்களை அழைத்து செல்லுங்கள். இல்லையென்றால் நீங்களே ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க உதவுங்கள்.

அன்பை வெளிப்படுத்துவது சிறப்பு என்றால், அந்த அன்பை ஒரு சிறப்பு நாளில் வெளிப்படுத்துவது இன்னும் சிறப்பாக இருக்கும். நம் வாழ்க்கையில் தொடர்புடைய எல்லா ஆண்களுக்கும் ஆண்கள் தின வாழ்த்துக்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

International Men’s Day: Importance, History and How to Celebrate In Tamil

Read to know the International men’s day - importance, history and how to celebrate.
Desktop Bottom Promotion