For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க பேசுற புரளியால ஒரு பொண்ணோட வாழ்க்கை எப்படி எல்லாம் பாதிக்கப்படுது தெரியுமா... - My Story #327

By Staff
|
Real Life Story: This is How Gossips Around Us Parted Our Love!

எனக்கும், அவனுக்கும் 5 வயசு வித்தியாசம். எனக்கு அதுதான் ஃபர்ஸ்ட் ஜாப். அப்பா, அம்மா வற்புறுத்தல் காரணமா பிடிக்காத சப்ஜெக்ட் படிச்சாலும், எப்படியோ என்னோட திறமை, முயற்சினால எனக்கு பிடிச்ச வேலையில ஜாயின் பண்ணேன். எழுத்து, அது தான் எனக்கு பிடிச்ச வேலை, ஹாபி, டைம் பாஸ், வாழ்க்கை எல்லாமே.

என்னால எழுதாம இருக்க முடியாது. கண்டன்ட் ரைட்டரா எனக்கு ஒரு விளம்பர கம்பெனியில வேலை கிடைச்சது. அங்க அவன் ஸ்க்ரிப்ட் சூப்பர்வைசர். தன்னோட வேலைன்னு மட்டுமில்லாம மத்தவங்க வேலையிலயும் நிறையா உதவி பண்ணுவான். எல்லா சீனியரும் கொஞ்சம் கர்வமா நடந்துக்கும் போது, இவன் மட்டும் தான் ரொம்ப ஃபிரெண்ட்லியா எல்லாரையும் ஹாண்டில் பண்ணுவான்.

என்னமோ தெரியல.. அவனோட அந்த ஃபிரெண்ட்லி பிஹேவியர் தான் எல்லாரும் அவன விரும்ப காரணமா இருந்துச்சு. ஆனா, நான் ஒருபடி மேல போய் அவன காதலிக்க ஆரம்பிச்சேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொதுவானவை...

பொதுவானவை...

எழுத்துங்கிறத தாண்டி, எனக்கும் அவனுக்கும் நடுவுல நிறையா ஒற்றுமைகள் இருந்துச்சு. முக்கியமா எங்க ரெண்டு பேருக்கும் மத்தியிலான விருப்பங்கள் ஒரே மாதிரியானதா இருந்துச்சு. சாப்பாடு, சினிமா, பாட்டு, ஸ்போர்ட்ஸ்னு.... தல தோனியில இருந்து, தலைவர் ரஜினி வரைக்கும் எங்களுக்குள்ளான விருப்பங்கள் நேர் கோட்டுல இருந்துச்சு.

ஒண்ணா....

ஒண்ணா....

இதனால... குறிப்பிட்ட குறுகிய காலத்துல நாங்க ரொம்ப குளோஸ் ஃபிரெண்ட்ஸ் ஆனோம். கிரேசி மோகன் நாடகம்னா எங்களுக்கும் ரொம்பவே பிடிக்கும். குத்துப் பாட்டுக்கு வெட்கமே இல்லாம ஆபீஸ்ல டான்ஸ் ஆடியிருக்கோம். ரொம்ப காலமா இது வெறும் நட்பா தான் தொடர்ந்துச்சு. ஆனா, எப்ப இது காதலா மாறுச்சுன்னு எனக்கும் தெரியாது, அவனுக்கும் தெரியாது. சொல்லாமலே நாங்க காதலிக்க ஆரம்பிச்சோம்.

3 வருஷம்...

3 வருஷம்...

ஒரு கட்டத்துல ஆபீஸ்ல அரசால் புரசலா எங்கள பத்தி பேச ஆரம்பிச்சாங்க. நாங்க காதலிக்கிறோம்னு பேசி இருந்தா அதுல எந்த பிரச்சனையும் இல்ல... ஆனா, எங்களுக்குள்ள ஏதோ இல்லீகல் ரிலேஷன்ஷிப் இருக்குற மாதிரி பேச ஆரம்பிச்சாங்க. என் கூட தங்கி இருந்த பொண்ணே, என்ன பத்தி தப்பா பேசினா. இதெல்லாம் தான் என்னால தாங்கிக்க முடியல.

ராஜினாமா...

ராஜினாமா...

வேலைய ராஜினாமா பண்ணிடலாம்னு கூட தோணுச்சு. ஆனா, அவங்க பேச்சுக்கு காதுக் கொடுத்து ராஜினாமா பண்றது, அவங்க பேசினது உண்மைன்னு நாமலே ஒத்துக்கிட்ட மாதிரி ஆயிடும்னு ராஜினாமா பண்ண வேண்டாம்னு நாங்க முடிவு பண்ணோம். அதுமட்டுமில்லாம, அந்த யூஸ்லஸ் காஸிப் காரணமா வெச்சு, எங்க ராஜினாமாவ அக்ஸப்ட் பண்ண எங்க பாஸ்க்கும் விருப்பம் இல்ல...

இமேஜ்!

இமேஜ்!

பொதுவாவே ஆபீஸ், காலேஜ், ஃபிரெண்ட்ஸ் மத்தியில ஒரு பழக்கம் இருக்கும். ஒரு பையன் நிறையா பொண்ணுக கூட பழகுனலோ, ஒரு பொண்ணு நிறையா பசங்க கூட பழகுனாலோ அவங்க கேரக்டர் மோசம்னு புரளி பேச ஆரம்பிப்பாங்க. சிலர் சீரியஸா பேசுவாங்க. சிலர் காமெடி பண்ணுவாங்க. இந்த வகையில, அந்த பையனோ, பொண்ணோ எதாச்சும் காஸிப்ல சிக்கிட்டா... அவங்க பேரு இன்னும் மோசமா டேமேஜ் ஆகும். உதாரணமா சொல்லனும்னா.. அவன் எல்லா பொண்ணுக கூட இப்படி தான் பழகுறான், அவன் கேரக்ட்டரே இப்படி தான் பேச ஆரம்பிச்சுடுவாங்க.

தலைவலி!

தலைவலி!

அவனுக்கும் இந்த பிரச்சனை வந்துச்சு. ஏற்கனவே அவன் ஒரு சீனியர் மாதிரி பிஹேவ் பண்றது இல்லன்னு நிறைய பேர் பேசிட்டு இருந்தாங்க. அவனுக்கு நிறையா பொண்ணுங்க ஃபிரெண்ட்ஸ் இருந்தாங்க. நடுவுல எங்க லவ் மேட்டர் ஏதோ இல்லீகல் ரிலேஷன்ஷிப் மாதிரி உருவெடுக்க... அவன் எல்லா பொண்ணுக கிட்டயும் இப்படி தான் பழகுறான்னு... புரளி பேச ஆரம்பிச்சாங்க.

போதும்!

போதும்!

ஒரு நாள், ரெண்டு நாள்னா பரவாயில்ல... தொடர்ந்து ஆறேழு மாசமா இதே வேலையா தான் இருந்தாங்க. அவன் மேல இருந்த பார்வை, பேச்சு, மரியாதை எல்லாமே மாறிடுச்சு. இதுக்கு நானும், எங்களுக்குள்ள இருந்த காதலும் தான் காரணம்னு அவன் சொல்லாட்டியும்., எனக்கு நல்லாவே புரிஞ்சது. அதிகமா பார்த்தா... எங்களுக்குள்ள ஒரு ஒன்றரை வருஷமா தான் இந்த காதல், ஒண்ணா சேர்ந்து வெளிய போறது எல்லாம். ஆனா, ஆபீஸ்ல, இந்த ஃபீல்டுல அவன் இந்த இடத்துக்கு வர பல வருஷம் உழைச்சிருக்கான். அத அவன் இழக்க நான் காரணாமா இருக்க விரும்பல.

நான் மட்டும்...

நான் மட்டும்...

அவனுக்கே தெரியாம நான் மட்டும் வேலைய ராஜினாமா பண்ணேன். என்னோட கடைசி வர்கிங் டே அன்னிக்கி தான்... நான் அங்க இருந்து கிளம்புறேன்னு சொன்னேன். ஏன்னா, இல்லாட்டி அவனும் அங்க இருந்து கிளம்புறேன்னு அடம் பிடிப்பான். அவன் இப்ப இருக்குற பொஷிஷன இழக்க நான் விரும்புல. அதே சமயம்... அங்க இருக்குற யாரும்.. நான் அங்க இருக்க வரைக்கும் இந்த புரளி பேசுறத நிறுத்த போறதும் இல்ல. அதான் இந்த முடிவு எடுத்தேன்.

இப்பவும்...

இப்பவும்...

ஒண்ணாவே இருந்து அவதி படுறதுக்கு பதிலா, பிரிஞ்சு இருந்து சந்தோசமா இருக்கலாம். அது தான் நான் எடுத்த முடிவு. இப்ப நான் பெங்களூர்ல ஒரு கம்பெனியில கண்டன்ட் ரைட்டரா வேலை பண்ணிட்டு வரேன். ஒரு வாரம் நான் சென்னை போவேன், ஒரு வாரம் அவன் பெங்களூர் வருவான். இன்னும் ஒரு வருஷத்துல நாங்க கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்.

புரளி பேசுங்க!

புரளி பேசுங்க!

எங்க மேல பொறாமைப்பட்ட சிலர் தான் இந்த புரளிய ஆரம்பிச்சு வெச்சாங்க. ஆரம்பத்துல நாங்க நிறையா மனக்கசப்பான நிகழ்வுகள எதிர்கொள்ள நேரிட்டாலும், இப்ப ரொம்பவே சந்தோஷமா தான் இருக்கோம். ரெண்டு பேருக்குமே நல்ல வேலை, நல்ல சம்பளம்... எல்லாத்தையும் தாண்டி இந்த லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்... எங்க காதல இன்னும் பன் மடங்கு உயர்த்தியிருக்கு... நாங்க இன்னும் நெருக்கமா பழக, ஒருத்தர, ஒருத்தர் நேசிக்க காரணமா இருந்திருக்கு. புரளி பேசின அந்த எல்லாருக்கும் என்னோட மனமார்ந்த நன்றி...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: This is How Gossips Around Us Parted Our Love!

We're in a great relationship. We loved each other crazily. But, simply gossips that spread-ed between us parted our love life.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more