மனைவியிடம் ‘வீட்ல சும்மாதான இருக்க’என்றதால் கணவர் சந்தித்த வினை!

Subscribe to Boldsky

குடும்பத்தை தாங்கிச் செல்லக்கூடிய ஓர் பிம்பம் அப்பா என்றால் அதனை கட்டுக்கோப்பாக வழி நடத்துவது அம்மாவாகத்தான் இருக்க முடியும். குடும்பம் என்ற அமைப்பு உருவானதே இதை வைத்துத் தானே ஒருவர் பொருள் ஈட்டுவார் இன்னொருவர் குடும்ப உறுப்பினர்களையும் குடும்பத்தையும் நிர்வகிப்பார். இந்த நிர்வாகம் என்பது எவ்வளவு சிக்கலானது என்பது அம்மாக்களிடம் கேட்டால் மட்டுமே தெரியும்.

அதிலும் பொருளாதார ரீதியாகவும் துணை நிற்கக்கூடிய அம்மாக்கள் என்றால் அவர்களது பணிச்சுமை இரட்டிப்பாகும். ஒரே நேரத்தில் வீடு அலுவலகம் இரண்டையும் பேலன்ஸ் செய்வது அவர்களது வேலையாக இருக்கும்.

 Women shares what is love

அம்மாக்களுடைய இந்த உலகம் எப்படியிருக்கிறது என்று எட்ட நின்று பார்ப்பதில் யாருக்குமே அதன் முழுவீரியம் தெரியப்போவதில்லை அதற்காகவே சில அம்மாக்களிடம் பேச்சுக் கொடுத்தோம்... பகிர்ந்த விஷயங்கள் நிச்சயம் உங்களை சிந்திக்க வைக்கும். உங்களை யோசிக்க வைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடும்பம் :

குடும்பம் :

குடும்பம் என்ற அமைப்பே அம்மாவைக் கொண்டு தான் நிலைத்து நிற்கிறது என்று சொல்வேன். நிச்சயமாக, இதை யாருமே மறுக்க முடியாது. வெளியில் சென்று களைப்பாக திரும்பும் போது அவர்களை வரவேற்க ஓர் வீடும், பார்த்து பார்த்து தேவைகளை செய்ய அம்மாவும் இருக்கிறார் என்பது தான் வீடு என்ற உணர்வைத் தருகிறது.

தேடல் :

தேடல் :

வெளியில் சென்று விட்டு அல்லது பள்ளி சென்று வீடு வரும் குழந்தைகள் முதலில் தேடுவது அம்மாவைத் தான். அம்மாவிடம் தான் அவர்கள் மிகவும் அன்னியோன்னியமாக பேச நினைக்கிறார்கள்.

தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கிறார்கள்.

வீட்டு வேலை :

வீட்டு வேலை :

இது நான் மட்டுமல்ல பெரும்பாலான பெண்கள் சந்திக்கிற பேச்சு இது. நான் வெளிய போய் சம்பாதிக்கிறேன்... நீ வீட்ல சும்மாதான உக்காந்திருக்க என்ற கேள்வியை எதிர்கொள்ளாத தாய்மார்கள் யாருமே இல்லையென்றே சொல்லலாம்.

என்னதான் பதில் சொன்னாலும் அவர்களுக்கு புரியப்போவதில்லை என்று பல பெண்கள் என்னென்ன வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்பதையே மறந்து இது தான் என் கடமை... நான் தாயல்லவா... நான் மனைவியல்லவா எனக்கு பொறுப்புகள் அதிகம். இவையெல்லாம் நான் தான் செய்ய வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.

இத்தனையும் :

இத்தனையும் :

சரி.... எங்களுக்காகவாவது அம்மாக்கள் வீட்டில் என்ன செய்வீர்கள். 24 மணி நேரத்தை பிரித்து பட்டியலிடுங்கள் என்று கேட்டோம். அவர்கள் பெரும்பாலோனோர் சொன்னது இந்த பதில் தான். இவை உங்களில் சிலருக்கும் பொருந்தலாம்.

காலைல ஐஞ்சு மணிக்கு எந்திரிப்போம். வாசத்தெளிச்சு கோலம் போட்டுருவேன். பால் கொதிக்க வச்சு டீ போடணும். குழந்தைங்க குளிக்க வெந்நீ... போட்டு வைக்கணும். அப்பறம் காலைல சாப்ட இட்லி ஊத்திட்டு சட்னிக்கு வெங்காய்ம் தக்காளி நறுக்கி வச்சிட்டு புள்ளைங்கள எழுப்புவேன்.

பெரியவன் அவனா எல்லா வேலையும் பண்ணிப்பான் சின்னதுக்கு எல்லாம் நம்ம தான் செய்யணும். எழுப்பி விட்டு பல் தேய்க்க வச்சு இரண்டுக்கும் டீ போட்டு கொடுப்பேன்.

அப்பா என்ற கேரக்டர் இப்போதான் நுழைவார் :

அப்பா என்ற கேரக்டர் இப்போதான் நுழைவார் :

டீ குடிச்சதும் ரெண்டும் சுறுசுறுப்பாகி அடிச்சு பிடிச்சு விளையாட ஆரம்பிக்குங்களா அந்த சத்தத்துல வீட்டுக்காரர் எந்திருச்சு ரெடியாகிடுவார். அதுக்குள்ள நானு சோறும் ஒரு கொழம்பும் வச்சிடுவேன்.

அப்பறம் சின்னவன குளிக்க வச்சு டிரஸ் மாட்டி விட்ருவேன். அவனுக்கு டை ,பெல்ட் மாட்டி விட்றது, சாக்ஸ் ஷூ எல்லாம் வீட்டுக்காரர் வேலை.

கிளப்புதல் :

கிளப்புதல் :

அதுக்குள்ள ரெண்டு பசங்களுக்கு வீட்டுக்காரருக்கு லன்ச் பேக் பண்ணிடுவேன். எல்லாரும் கிளம்பிணும் தான் எங்களுக்கு பெண்டு நிமிர்ற வேலையிருக்கும். கழட்டிப் போட்ட ஈரத்துண்டுல இருந்து சாப்ட்டு மிச்சம் வச்ச தட்டு வரைக்கும் எல்லாத்தையும் எடுத்து ஒழுங்குப்படுத்தணும் கூட்டி பெருக்கி சுத்தம் பண்ணனும்.

அப்பறம் பாத்தரம் கழுவுறது, துணி துவைக்கிறது,காயப்போடறது, பழைய துணிய மடிச்சு வைக்கிறது. மறுநாள் வீட்டுக்காரருக்கு சட்ட அயர்ன் பண்ணி வைக்கன்னு நாலு மணியாகிடும். இன்னும் கொஞ்ச நேரத்துல புள்ளைங்க வந்திடுமேன்னு நிம்மதியா தூங்க கூட முடியாது.

எடுபிடி வேலை :

எடுபிடி வேலை :

சில பேரெல்லாம் குழந்தைங்கள ஸ்கூல்ல போய் விட்டுட்டு கூட்டிட்டும் வருவாங்க... அப்பறம் நைட் சாப்பாடு வேலை. குழந்தைங்களுக்கு ஸ்கூல் வொர்க் ஆல்பம் வொர்க் அது இதுன்னு அவங்களுக்கு நிறைய எடுபிடி வேலை செய்யணும்..

எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா மறு நாளுக்கு வாங்க வேண்டிய காய்கறி, வெளிய கோவில்,பலசரக்கடை, சொந்தக்காரங்கன்னு எதாவது வேலை இருந்துட்டேயிருக்கும்.

நல்ல நாளும் அதுவுமா வீடு தொடைக்கலையா... பூஜை பண்ணலயான்னு வேறு கேப்பாங்க அதையும் பாக்கணும்.

புகார்கள் :

புகார்கள் :

பட்டியல் வாசிக்க ஆரம்பித்த பிறகு தான்.... அட ஆமால்ல நம்ம சாப்ட்டு தட்ட அப்டியே போட்டுட்டு கிளம்பி அவசரத்துக்கு காலைல ஓடுறோம். போட்டது போட்டபடி வீடே பரப்பிக் கிடக்கும். சாய்ந்திரம் போகும் போது வீடு அவ்ளோ க்ளீனா இருக்குமேன்னு நினைக்கவே தோணுது.

இதெல்லாம் அம்மாவோட கடமைன்னு யாருமே சொல்லல நாங்களாத்தான் பண்றோம். இது நம்ம குடும்பம் நம்ம தான செய்யணும்ன்ற ஓர் எண்ணம் தான் எல்லாத்துக்கும் காரணம். இத்தனையும் செய்த பிறகும் எங்களுக்கு கிடைக்கும் பெயர்கள் என்னவோ சும்மாதான இருக்க என்பது தான்.

அலுவலகம் செல்வோர் :

அலுவலகம் செல்வோர் :

ஆபிஸ் போற அம்மாக்களோட லைஃப் இன்னும் பரபரப்பா இருக்கும். கொஞ்சம் வசதியானவங்கன்னா வீட்டு வேலைக்கு பாத்திரம் கழுவ, கூட்டி தொடைக்கன்னு ஆள் தனியா வச்சிப்பாங்க ஆனா எல்லாருக்கும் அப்படியான வசதி வாய்ப்பு இருக்குன்னு சொல்ல முடியாதுல்ல.

டபுள் வொர்க் இருக்கும். அவங்கள கிளப்புறதோட நம்மலும் கிளம்பணும்.அரக்க பரக்க கிளம்பி ஆஃபிஸ் போன அங்க நிம்மதியா உக்காந்து ரிலேக்ஸா வேல பாக்க முடியுமா? டார்கெட் இன்னும் அச்சீவ் பண்ணல வொர்க்ல சாட்டிஸ்ஃபேக்‌ஷன் இல்லன்னு கத்த நம்ம பரபரப்பா ஓடணும்.

நீ வச்ச குழம்பு நல்லாயில்ல :

நீ வச்ச குழம்பு நல்லாயில்ல :

ஸ்கூலுக்கு போற பசங்க அவங்க ஃபிரண்ட்ஸ் கொண்டு வர்ற லன்ச், அவங்கள பிக்கப் பண்ணிக்க வர்ற அம்மாக்கள பாத்துட்டு நீ ஏன் வர்ல... நீ ஏன் இத செஞ்சு குடுக்கல டெய்லி ஒரே சாப்பாடு தர்ற இது எல்லாம் வேணாம்.

பேரண்ட்ஸ் மீட்டிங் வச்சா எல்லாருக்கும் அவங்க அம்மா தான் வர்றாங்க நீ வரவே மாட்ற எல்லாரும் கேக்குறாங்கன்னு நம்மல கேள்வி கேக்கும் போது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.

தூது :

தூது :

இத எல்லா அம்மாவும் செஞ்சிருப்பாங்க அவங்க அப்பாக்கும் பசங்களுக்கும் இடையில தூது நாங்க தான். ரிப்போர்ட் கார்ட்ல சைன் வாங்குறதுல இருந்து செலவுக்கு பணம் கேட்டு தர்றது வரைக்கும்.

இங்குட்டு பையன் நின்னுட்டு நீ போய் கேளும்மா.... நான் கேட்டா கொடுக்கமாட்டாருன்னு அணத்தி அனுப்புவான். அங்க போனா.... ஏன் துறை வந்து கேக்க மாட்டாறோ.... அவனுக்கு என்ன நீ வாயா அவன் எல்லாம் உருப்பட மாட்டான். இப்டி எல்லாத்துலையும் பெயிலான எங்க வேல கிடைக்கும்ன்னு கரிச்சு கொட்ட...

அடுத்த தடவ நல்லா படிப்பான் நேத்து கூட புது புக்கு வாங்கிட்டு எழுதிட்டு இருந்தான்னு நம்மலா ஒரு பிட்ட ரெடி பண்ணி அவுத்துடணும்.

இனி மாமியார் பதவி :

இனி மாமியார் பதவி :

இருபத்தியோரு வயசுல கல்யாணமாகி வந்ததுலயிருந்து சாகுற வரைக்கும் ரெஸ்ட்ன்றதே பொண்ணுங்களுக்கு கிடைக்கிறதில்ல. மருமக வந்துருவா அவ நமக்கு நல்ல ருசியா சமச்சு போடுவா... வீட்டு வேலையெல்லாம் அவ பாத்துப்பா நம்ம நிம்மதியா ரெஸ்ட் எடுக்கலாம்னு நினச்சா இங்க நம்மல மாதியான முட்டாளு வேறு யாருமே இல்ல

தெளிவான பிள்ளைங்க :

தெளிவான பிள்ளைங்க :

இப்போ இருக்குற பிள்ளைக எல்லாம் ரொம்பத் தெளிவா இருக்காங்க.... இது தான் என்னோட விருப்பம் இப்டி தான் நான் இருப்பேன் என்னைய யாரும் டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுன்னு கல்யாணத்துக்கு முன்னாடியே கறாரா பேசிட்டு தான் சம்மதிக்கவே செய்றாங்க.

இன்னும் சில இடத்துல எல்லாம் மாமியார் வீட்டுக்கு வரக்கூடாது. கல்யாணம் முடிஞ்ச கையோட தனிக்குடித்தனம் போய்டணும்னு சொல்றாங்க. இவங்க கிட்டபோய் நம்ம என்ன எதிர்ப்பார்க்க.

பெயரன் பெயரத்தி... :

பெயரன் பெயரத்தி... :

ரெண்டு பேரும் வேலைக்கு போறாங்க குழந்தைங்கள பாத்துக்கணும்னு ஒரு சூழ்நிலையிருந்தா நம்ம அவங்க வீட்டுக்கு போகலாம். அப்பயும் போய் அங்க ரெஸ்ட் எடுக்க முடியாது. பசங்கள பாத்துக்கணும். வேலைக்கு போற பையனுக்கும் மருமகளுக்கும் சமையல்லயிருந்து எல்லாத்துலயும் உதவியா இருக்கணும்.

குழந்தைக்கு ஊட்றதுலயிருந்து வீடு சுத்தம் பண்ற வரைக்கும் எல்லா வேலையும் நம்ம மேல விழும் கொஞ்சம் டீசண்ட்டா சொல்லணும்னா மரியாதையான வேலைக்காரி.

வெறுப்பு :

வெறுப்பு :

அத்தனையும் செஞ்சும் நமக்கு எந்த பாராட்டு பத்திரமும் வாசிக்கப் போறதில்ல... அதவிட சண்ட தான் வரும்.... உங்க அம்மா இதப்பணியிருக்கலாம்.இதசொல்லியிருக்கலாம்னு ஒரு பேச்சும் ஏம்மா நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகக்கூடாதா சின்ன புள்ள மாதிரி போட்டி போட்றன்னு பேச்சு வரும்.

ஒரு கட்டதுல என்னடா இந்த வாழ்க்கையினு வெறுப்பு சூழும் போது எங்க மனுசுல தோன்ற ஒரே விஷயம். இது நம்ம குடும்பம் என்னோட பசங்க.... இத நான் தான் பண்ணனும்.

இத என்னவிட வேறு யாராலயும் சிறப்பா பண்ணிட முடியாதுன்னு தோணும். கோபமெல்லாம் மறஞ்சு ஃபிரஸ்ஸாகிடுவோம். இந்த குடும்பத்து மேலையும் இந்த குடும்ப உறுப்பினர்கள் மேலையும் நாங்க வச்சிருக்கிற விலை மதிப்பில்லாத அன்பு தான் எல்லாத்துக்கும் மூலக்காரணம்.

அம்மானா சும்மாயில்லடா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Women shares what is love

    Women shares what is love
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more