For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அந்த பொண்ணுக்கு உங்கள பிடிச்சுப் போச்சுன்னா, இந்த 11 சில்லித்தனமான விஷயங்கள் செய்வாங்க!

|

இப்ப எல்லாம் ஃபேஸ்புக் ரெக்வஸ்ட், டிண்டர் டேட்டிங்ல தொடங்குற காதல் வாட்ஸ்-அப் ப்ளாக்ல முடிஞ்சிடுது. இதோட சதவிதம் ரொம்பவே கம்மி தான். ஆனாலும், இந்த கால தலைமுறை மேல பலரும் சுமத்துற குத்தம் இதுதான்.

இவங்களுக்கு எல்லாம் காதல் நான் என்னன்னே தெரியாது, இவங்க காமத்த காதல்ன்னு நம்பி ஏமாந்துட்டு இருக்காங்க.. கண்டிப்பா நாமலே குறைந்தபட்சம் பத்து தடவையாவது சொல்லி இருப்போம்.

Silly Things Girls Do, When They Like a Men Secretly!

இதெல்லாம் நடக்கவே இல்லன்னு நாம மறுக்க முடியாது. ஆனா, இன்னைக்கும் தான் காதலிக்கிற பொண்ணு, பையன் கிட்ட லவ்வ சொல்ல தெரியாம வெக்டப்பட்டுக்கிட்டு தயங்கி, தயங்கி அவங்களோட வெறும் ஃபிரெண்ட்ஷிப்போட மட்டும் வாழ்ந்துட்டு வர அப்பாவி ஜீவன்களும் வாழ்ந்துட்டு வராங்க.

என்ன அப்ப லவ் லெட்டர் எழுதி வெச்சு அத கொடுக்காம வெச்சுட்டு இருந்தோம்... இப்போ ரெக்வஸ்ட் கொடுக்காம ஃபாலோ மட்டும் மன்றது, ஃபிரெண்ட்ஷிப் ரெக்வஸ்ட் அக்ஸப்ட் பண்ணாலும் பேச தயங்கி லைக்ஸ் மட்டும் போடுறதுன்னு சுத்திட்டு இருக்காங்க.

இந்த காலக்கட்டத்துல... ஒரு பொண்ணுக்கு ஒரு பையன பிடிச்சிருந்தா... (ஒரு பையனுக்கு ஒரு பொண்ண பிடிச்சிருந்தாலும்) அவங்க அத வெளிப்படையா சொல்லாம என்னவெல்லாம் சில்லித்தனமான காரியங்கள் செய்வாங்கன்னு இந்த தொகுப்புல பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

நீங்க மரண மொக்கை போட்டாலும், சுத்தி இருக்க ஃபிரெண்ட்ஸ் எல்லாம் #Shrooovvvv கரண் மாதிரி முறைச்சு பார்த்தாலும்.. இவங்க மட்டும் சூரி ஜோக்குக்கு விழுந்து, விழுந்து சிரிக்கிற அப்பாவி கூட்டத்த போல வாய்விட்டு சிரிச்சுட்டு இருப்பாங்க.

#2

#2

முதல் வேலையா உங்க ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ப்ரொபைல் எல்லாம் தேடித் பிடிச்சு.. இன்னையில இருந்து, நீங்க அக்கவுண்ட் ஆரம்பிச்ச ஆதிகாலம் வரைக்கும் ஆழமா உள்ள போய் என்னெல்லாம் போஸ்ட் போட்டிருக்கீங்க... நீங்க எப்படிப்பட்ட ஆளுன்னு நோண்டி நொங்கேடுப்பாங்க.

#3

#3

உங்க கூட வாட்ஸ்-அப், மெசேஞ்சர்ல சாட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்கன்னா (இன்னும் அவங்க உங்கள விரும்புறது உங்ககிட்ட சொல்லலங்கிற பட்சத்தில்) அத ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அவங்களோட நெருங்கிய தோழிக்கி அனுப்புவாங்க... இல்ல நேரடியா காமிப்பாங்க.

#4

#4

உங்க கூட எடுத்துக்கிட்ட போட்டோவ வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஸ்டேடஸ்ல வெச்சுப்பாங்க... சாதாரணமா காட்டிலும், உங்க படம் வெக்கும் போது அவங்க கிட்ட ஒரு உற்சாகம் தென்படும்.

Most Read: ஒரு ஆண் கருவளத்துடன் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிய சில அறிகுறிகள்!!!

#5

#5

பிடிச்சாலும், பிடிக்காட்டியும், புரிஞ்சாலும், புரியாட்டியும் நீங்க போடுற எல்லா போஸ்ட்க்கும் அவங்கக்கிட்ட இருந்து லைக்ஸ் வந்து குவியும்.

#6

#6

குட் மார்னிங் மெசேஜ்ல இருந்து குட் நைட் மெசேஜ் வரைக்கும் அவங்க அனுப்புற அந்த போட்டோ மெசேஜ்ல பொருந்தாத ஒரு காதல் கவிதை இல்ல Quote இடம் பெற்றிருக்கும். நீங்க அத சாதாரணமான குட் மார்னிங் மெசேஜ்னு எடுத்துக்கிட்டா உங்களைவிட முட்டாள் வேற யாரும் இந்த உலகத்துல இருக்க மாட்டாங்க.

#7

#7

சுத்தி ஃபிரெண்ட்ஸ் கூட சேர்ந்து ஒண்ணா டைம் ஸ்பென்ட் பண்ணும் போது முடிஞ்ச வரைக்கும் காதல் பத்தின பேச்சு எடுக்க மாட்டாங்க. ஏன் அவங்க வைல இருந்து கூட அந்த வார்த்தை வராது. ஆனால், உங்க கூட மட்டும் தனியா டைம் ஸ்பென்ட் பண்ணும் போது அப்பப்போ காதல் பத்தின பேச்சு வந்து போகும்.

#8

#8

உங்க மேல பிரியம் இருந்தாலுமே கூட, எங்க தன்னோட காதல சொன்னா அவனுக்கு நம்மள பிடிக்காம போயிடுமோ.. இல்ல அவனுக்கு நம்ம மேல காதல் இருக்காதோங்கிற ஒரு பயத்துலயே காதல வெளிப்படுத்தாம இருப்பாங்க.

Most Read: உடல் உறவு கொள்வது பற்றி ஆண்களே அறியாத விஷயங்கள்..!

#9

#9

உங்களுக்கு ஏதாவது ஒரு பொண்ண பிடிச்சிருக்குன்னு (காதல்னு கூட வேண்டாம்.. சும்மா லுக் பிடிச்சிருக்கு, ட்ரெஸ் பிடிச்சிருக்குன்னு சொன்னாலே போதும்) சொல்லிட்டா போதும்.. அவங்க மேல எப்பவுமே ஒரு கண்ணு வெச்சிருப்பாங்க. முடிஞ்ச வரைக்கும் அந்த நபர பத்தி பேச்செடுக்க விடாம தடுப்பாங்க. அப்படியே பேசினாலும் அவங்கள பத்தி இன்ட்ரஸ்ட் இல்லாம தான் பேசுவாங்க. சிலர் திட்டவும், கோவிச்சுக்கவும் கூட செய்யலாம்.

#10

#10

உங்க கூட என்ன சண்டை போட்டாலும், பேசாமலே இருந்தாலுமே கூட உங்க சமூக தள போஸ்ட்களுக்கு லைக்ஸ் மட்டும் வந்துட்டே இருக்கும். சாதாரண ஃபிரெண்ட் இல்ல,காதலியா இருந்தா இந்த போர்கால நடவடிக்கை காலக்கட்டத்துல லைக்ஸ் எல்லாம் வராது.

ஆனால், லவ் இருந்தும் வெளிப்படுத்த முடியாம தயங்குற அந்த மதில் மேல் பூனையா உங்கள விரும்புற அந்த பெண் நிச்சயமா லைக்ஸ் போடுவாங்க. (இது அந்தந்த சண்டை மற்றும் சண்டைக்கான சூழல் மற்றும் காரணத்திற்கு ஏற்றார் போல மாறுபட வாய்ப்புகள் உண்டு. அதாகப்பட்டது டேர்ம்ஸ் அன்ட் கண்டிஷன்ஸ் அப்ளை)

#11

#11

இதெல்லாம் வெச்சு நீங்க போய் அவங்கக்கிட்ட நமக்குள்ள என்ன ரிலேஷன்ஷிப்... இல்ல இது வெறும் ஃபிரெண்ட்ஷிப் மட்டும் தானான்னு நீங்க ஏதாவது கேள்வி கேட்டீங்கன்னா... கண்டிப்பா... இல்லையே... ஒன்னும் இல்லையே.. ஜஸ்ட் ஃபிரெண்ட்ஷிப் தானே.. வேற என்னனு உங்க கிட்டே கேள்வி கேட்பாங்க... நீங்களா கண்டுப்பிடிச்சு.. உங்களுக்கும் பிடிச்சிருந்தா.. நீங்களே கன்ஃபார்ம் பண்ணி பிரபோஸ் பண்ணிடுங்க... இல்ல இன்ட்ரஸ்ட் இல்லன்னா... அதற்கு அடுத்து உங்க விருப்பம் போல் முடிவு எடுங்க!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Silly Things Girls Do, When They Like a Men Secretly!

Girls will do these silly things, when they like you secretly. Check out the crazy things they do.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more