இதுவும் ஒருவகையில் பிராத்தல் தான். ஆனால், இங்கே ஆண்கள் பெறுவது வேறு! #SexSurrogate

Posted By: Staff
Subscribe to Boldsky

இதுவரை பாலியல் தொழிலாளிகள் மற்றும் அவர்களது வாழ்க்கை என்று நாம் அறிந்தவை, படித்தவை, கேட்டவை அனைத்தும் அவர்கள் வாழ்வில் நடந்த கொடுமைகள், இழப்பு, வலி, ஏமாற்றம் என்பவையாக இருந்திருக்கும். ஆனால், இது கொஞ்சம் வேறுபட்ட ஒன்று. இங்கே இவர்கள் ஆண்களுக்கு கொடுப்பது வெறும் செக்ஸ் மட்டுமல்ல, மேலும், இவர்கள் ஆண்களுக்காக மட்டும் வேலை செய்பவர்களும் அல்ல.

Sex Surrogates? A Controversial Sex Therapy Which is Slightly like Brothel!

ஆண்களிடம் இருக்கும் விறைப்பு பிரச்சனை, விந்து துள்ளல் எனப்படும் முன் கூட்டி வெளிப்படும் விந்து பிரச்சனை மற்றும் தாம்பத்தியம் சார்ந்த தீண்டல் பற்றிய போதிய தெளிவின்மை என இவர்கள் ஒருவகையில் செக்ஸ் கற்பிக்கும் நபர்களாகவும், தவறுகளை திருத்தும் நபர்களாகவும் இருக்கிறார்கள்.

இவர்களை ஆங்கிலத்தில் செக்ஸ் சரோகேட் (Sex Surrogate) என்று அழைக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டேனியல் கோலே!

டேனியல் கோலே!

ஆஸ்திரேலியாவில் செக்ஸ் சுரோகேட்டாக வேலை செய்து வருகிறார் டேனியல் கோலே. அவர் இந்த வேலை எத்தகையது, தங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் எப்படி நடந்துக் கொள்கிறார்கள், நாங்கள் அவர்களுக்கு எப்படியான அறிவுரை மற்றும் தகுந்த ஆலோசனைகளை தியரியாக மற்றும் பிராக்டிகலாக கூறுகிறோம் என்று தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.

ஹோட்டல் அறையில்!

ஹோட்டல் அறையில்!

நான் எனது வாடிக்கையாளருக்காக ஏதேனும் ஒரு ஹோட்டல் அறையில் தான் காத்திருப்பேன். அவர்கள் என் முகத்தை காண இயலாதபடி அறையின் ஒளி அமைப்பு இருக்கும். முடிந்த வரை ஏசி அதிகமாக இருக்காது. மிதமான வெட்பத்தில் இருக்கும்படியான சூழலில் தான் அறையை பராமரிக்க செய்வோம். இது அவர்களை சௌகரியமாக இருக்க செய்யும்.

யார் அவர்?

யார் அவர்?

வரும் நபர் யார், அவரது உண்மை பெயர், அடையாளம் என எதுவும் எனக்கு தெரியாது. அவர் எனது அன்றைய வாடிக்கையாளர் என்பதை மட்டுமே நான் அறிவேன்.

பெரும்பாலும் என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் அவர்கள் இல்லற வாழ்வில் தாக்கம் ஏற்பட்டோ, தாம்பத்திய பிரச்சனைகள், விறைப்பு கோளாறு மற்றும் முன்கூட்டி வெளிப்படும் விந்து பிரச்சனை போன்றவற்றுடன் தான் வருவார்கள்.

மன அழுத்தம்!

மன அழுத்தம்!

என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் தாம்பத்திய வாழ்வில் போதிய அளவு இன்பம் கிடைக்காமல், தங்களால் சரியாக இயங்க முடியாத நிலையால் மன அழுத்தத்துடன் தான் வருவார்கள்.

சிலர் மன வருத்ததுடன் வருவதும் உண்டு. நான் அவர்களுக்கு தொடுதல் முறை மற்றும் அவர்களது செக்சுவல் பிரச்சனைகளில் இருந்து எப்படி வெளிவரலாம் என்று ஆலோசனை வழங்குவேன்.

உளவியலாளர்கள்!

உளவியலாளர்கள்!

எங்களை ஆன்லைன் அல்லது வேறு ஏதேனும் விளம்பரங்கள் மூலம் தொடர்புக் கொள்ள முடியாது. என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் எல்லாம் உளவியலாளர் மூலமாக தொடர்பு கொள்பவர்கள் ஆவர். நாங்கள் முதல் அமர்வில் பேசி புரியவைப்போம். அதில் சரியாகாத பட்சத்தில் தொடுதல் முறையை பின்பற்றுவோம்.

சுய இன்பம்!

சுய இன்பம்!

எங்கள் அமர்வில் சுய இன்பம் காணும் வாடிக்கையாளர்களும் உண்டு. சில சமயம் இது உடலுறவிலும் கூட முடியும். ஆனால், உடலுறவு என்பது கடைசி ஆப்ஷனாக மட்டுமே இருக்கும். என்னிடம் ஆண்கள் மட்டுமே வருவதில்லை, பெண்களும் வருகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் அளிப்பது செக்ஸ் அல்ல, செக்ஸ் பிரச்சனைகளுக்கான தீர்வு.

எங்கே?

எங்கே?

செக்ஸ் சரோகோட் எனப்படும் இந்த முறை இஸ்ரேலில் வெளிப்படையாகவே நடக்கிறது. ஆனால், ஆஸ்திரேலியாவில் இன்றும் இரகசியமாக இயங்கி வருகிறது. இதை ஒரு சர்ச்சையான செக்ஸ் தெரப்பியாக காண்கிறார்கள்.

இது செக்ஸ் குறித்த ஈடுபாடு அல்ல. பெண்களிடம் எப்படி பழக வேண்டும், அவர்களை எப்படி இணங்க செய்ய வேண்டும் என்று கற்பிக்கும் முறை ஆகும். அவர்களுக்கு தெரியாத, அவர்களை பொறுத்தவரையில் மர்மமாக திகழும் விஷயங்களுக்கு நாங்கள் தெளிவு அளிக்கிறோம் என்று கூறுகிறார் டேனியல் கோலே.

சர்ச்சை!

சர்ச்சை!

சர்ச்சைக்குள்ளான இந்த செக்ஸ் தெரப்பி முறை, மெல்ல மெல்ல உலக நாடுகளில் பிரபலம் அடைந்து வருகிறது. ஒரு செக்சுவல் ரீதியான அச்சம் மற்றும் போதிய தெளிவின்மையை சரி செய்துக் கொள்ள உதவுவதால் மக்கள் இதுப் போன்ற தீர்வு முறையை கையாள முனைகின்றனர்.

செக்ஸ் சரோகேட்டாக பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்று தவறாக கருதுவதுண்டு. ஆனால், இதில் ஆண் செக்ஸ் சரோகேட்களும் இருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Sex Surrogates? A Controversial Sex Therapy Which is Slightly like Brothel!

Do You Know About Sex Surrogates? A Controversial Sex Therapy Which is Slightly like Brothel!