TRENDING ON ONEINDIA
-
எல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்
-
லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...
-
LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்!
-
இந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க
-
"கடவுள் இல்லை" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்!
-
கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்!
-
இந்தியாவின் முதுகில் குத்திய சீனா..? புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..?
-
பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது
பலே, பலே! நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் கற்பிக்கும் உறவுப் பாடங்கள்!
சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தங்கள் காதலை ஏகபோகமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான்.
இவர்கள் வாய் திறந்து தாங்கள் காதலிக்கிறோம் என்று சொல்லாவிட்டாலும், இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக இவர்கள் பதிவிடும் படங்களை வைத்துக் கண்டுப்பிடித்துவிடலாம்.
அதிலும் நயன்தாரா தங்கள் ஒவ்வொரு செல்ஃபி படங்களிலும் விக்னேஷ் சிவனை அணைத்து கொடுக்கும் போஸ்களை வைத்தே நயன்தார எத்தகைய காதல் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்துக் கொள்ள இயல்கிறது.
வெறுமென காதல் என்று மட்டுமில்லாமல், தங்கள் வேலையிலும் இவர்கள் ஒருவரை ஒருவர் அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல நிறைய உதவிக் கொள்கிறார்கள்., ஒருவர் மற்றொருவருடைய உதவியில் பங்கெடுத்துக் கொள்கிறார்.
இவர்களது இந்த உறவில் இருந்து நிறைய பாடங்கள் மற்றும் ரிலேஷன்ஷிப் கோல்ஸ் நாம் காண முடிகிறது....
|
பிறந்தநாள் சர்பரைஸ்!
எது பண்றீங்களோ இல்லையோ நிச்சயமா நீங்க வருஷத்துக்கு ஒருமுறையாவது பண்ணிட வேண்டியது இதுதான்.. ஆமாங்க! பிறந்தநாள் அன்னிக்கி சர்ப்ரைஸ் கொடுங்கள். அட்லீஸ்ட் சின்ன கிப்ட் இல்ல உங்களோட காதலையாவது அதிகமா வெளிப்படுத்துங்க. அதவிட பெருசா பொண்ணுங்க எதையும் எதிர்பார்த்திட மாட்டாங்க.
|
அடிக்கடி செல்ஃபி!
அப்பப்ப செல்ஃபி எடுங்க பாஸ்... செல்ஃபி எடுக்கவில்லை என்றால் கூட, உனக்கு முன்ன மாதிரி என்மேல பாசம் இல்லன்னு புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க... ஆனா, இந்த தங்கம் அப்படி எல்லாம் புலம்பாது.. இது நல்ல தங்கம்!
|
வெற்றியில் உறுதுணை!
உங்கள் துணை வெற்றிப்பெற ஊக்கம் அளிப்பதோடு, அவர்கள் வெற்றிப்பெற உறுதுணையாகவும் இருக்க வேண்டும். அவர்கள் சோர்ந்து போகும் போது உடனிருந்து தட்டிகொடுக்க வேண்டும்.
|
பாராட்டுதல்!
உங்கள் துணையின் வெற்றி, அவர்களது புதிய பிராஜக்ட், வேலை அல்லது அவர்கள் முன்னெடுத்து வைக்கும் அடிகளை பாராட்டுங்கள். அவர்களது முயற்சிக்கு ஊக்கம் அளியுங்கள். இதுவே அவர்களை பாதி வெற்றியடைய பெருமளவு உதவும்.
|
ஜெயிக்க வைத்து ரசிப்பது!
காதல் என்பது நீயா, நானா போட்டி அல்ல. தங்கள் துணையை ஜெயிக்க வைத்து அழகு பார்ப்பது. தங்கள் துணையின் வெற்றியை கொண்டாடுவது. இங்க பாருங்களேன்.. இந்த சந்தோஷம் வேற எதுல கிடைக்கும்...
|
பிடித்த இடங்களுக்கு அழைத்து செல்தல்!
எப்போது பார்த்தாலும் ஒருவருக்கு பிடித்த விஷயங்களையும் மட்டும் செய்துக் கொண்டே இருக்காமல். எந்த ஒரு விஷயத்தில் முடிவெடுக்கும் போதும், இருவரும் சேர்ந்து முடிவு எடுக்க வேண்டியது அவசியம். முக்கியமாக, ஆண்கள் காதலிக்கு பிடித்தவை வாங்கி தருவது, அவர்களுக்கு பிடித்த இடங்களுக்கு அழைத்து செல்வது எல்லாம் காதலை பெருக செய்யும்.
|
சீரான இடைவேளையில் ட்ரிப்!
சிலர் காதலிக்க ஆரமபித்த காலத்தில் ஒவ்வொரு வீக்கென்ட்களிலும் எங்காவது போகலாம் என்று திட்டமிடுவார்கள். ஆனால், காதலித்த ஓரிரு ஆண்டுகளில் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள். அப்படி இல்லாமல் சீரான இடைவேளையில் ட்ரிப் சென்று வருதல் அவசியம்.
|
அவர்கள் நட்பையும் மதிப்பது!
காதலில் அவ்வப்போது சண்டை வருவதற்கு காரணமே, காதலித்த பிறகு, காதலன் / காதலியை அவரவர் நட்புகளுடன் நேரம் செலவழிக்க விடாமல் தடுப்பது தான். அதற்கு பதிலாக, அவர்களுடைய நட்பையும் உங்கள் நட்பாக ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குள் காதல் இன்னும் பலமடங்கு உயரும்.
|
ரொமாண்டிக்!
காதலும் ரொமான்ஸும் ஒரு சரியான கலவையாக இருத்தல் அவசியம். ரொமான்ஸ் மட்டும் அதிகமாக இருந்து, காதலும் அக்கறையும் குறைவாக இருந்தால், அந்த உறவுக்கு பெயர் வேற. எனவே, அடிக்கடி சீராக ரொமான்ஸ் விஷயங்களிலும் ஈடுபட வேண்டும். அட்லீஸ்ட் இப்படியான போட்டோஸ் ஆவது எடுத்துக் கொள்ள வேண்டும். என்ன நான் சொல்றது?
|
சமூக தளங்களில்...
நேரில் முகத்திற்கு நேராக தனிமையில் இருக்கும் போது மட்டும் பாராட்டி விட்டு மற்றவர்கள் முன் கேலி, கிண்டல் எல்லாம் ஆகாது. எப்போதாவது என்றால் பரவாயில்லை. எப்போதுமே என்றால் அது சரியாகாது. எனவே, சமூக தளங்களிலும், சமூகத்திலும் கூட உங்கள் துணையின் வெற்றி மற்றும் பெருமைகள் குறித்து பகிர வேண்டும்.
|
இன்ட்ரஸ்டிங்!
அவ்வப்போது இன்ட்ரஸ்டிங்காக எதையாவது செய்ய வேண்டும் அது, உங்கள் துணைக்கும் பிடிக்க வேண்டும். ஒரே மாதிரியான உடை, கிங், குயின் என்பது போன்ற டிசைன் ஷர்ட், இதோ! அவரவர் முதல் எழுத்தில் கேப் என்று நயன், விக்னேஷ் அசத்துவது போல ஏதாவது புதுமையாக யோசித்து காதலன் / காதலியை அசத்த வேண்டும்.
|
கொண்டாட்டம்!
காதல் எவ்வளவு முக்கியமோ, அதே காதலில் நட்பும், கொண்டாட்டமும் மிகவும் முக்கியம். ஒருவரை ஒருவர் மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டிருந்தாள் மட்டும் போதாது. வாழ்க்கையை அவ்வப்போது கொண்டாடவும் அறிந்திருக்க வேண்டும். கொண்டாட்டங்கள் தான் நம் வாழ்வில் நிறைய நல்ல நினைவுகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.