For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எங்கள தப்பு பண்ண தூண்டுனதே அப்பா தான்... - My Story #295

எங்கள தப்பு பண்ண தூண்டுனதே அப்பா தான்... - My Story #295

By Staff
|

நான் ஏற்கனவே ஒரு காதல் தோல்வியில் துவண்டி போயிருந்தவன். என் நண்பர்களை பொறுத்தவரை அதுவொரு மழலை காதல் என்று கூறி கேலி, கிண்டல் செய்ய உதவும் கதை. ஆனால், என்னை பொறுத்தவரையில் அது என் முதல் காதல்... என் இதயத்தில் பூத்து, பிடுங்கி எறியப்பட்ட முதல் செடி.

Real Life Story: We are the perfect example of half girlfriend!

அப்போதே தீர்மானம் செய்தேன், இனிமேல் என் வாழ்வில் காதல், கீதல் என எதற்கும் இடம் இல்லை என்று. ஆனால், இந்த பதின்வயதி மிகவும் கொடூரமானது. மூளை என்ன சொன்னாலும் கேட்காமல், மனம் போகும் பாதையில் ஆட்டம் போடும். ஏற்கனவே, என் கால்களும் நன்கு ஆடும் என்பதால்... என் மனம் என் தீர்மானத்தை உடைத்து எறிந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்லூரி வாசல்...

கல்லூரி வாசல்...

நான் கல்லூரி சென்றதும் என் பாடங்களை நன்கு அறிந்தேனோ இல்லையோ.. அவளை நன்கு அறிந்தேன்.. (அவள் பெயரை தவிர...). நான் தமிழ்நாடு, அவள் கேரளா. இருவருக்கும் மத்தியில் நிறையவே கலாச்சார வேறுபாடுகள் இருந்தன. என் வாழ்வில் நான் கடந்த பெண்களிலேயே அவள் தான் மிகவும் அழகானவள். முதல் முறை பார்த்த போதே ஆசை பெருக்கெடுக்க துவங்கிவிட்டது. அவள் மீதான ஆசை, மோகமாகி, காதலாக மலர்ந்தது.

முரண்பாடு!

முரண்பாடு!

நான் அவள் மீது காதல் கொண்டிருக்க... என் மீதான அவள் பார்வையோ முற்றிலும் மாறுபட்டு இருந்தது. நான் எப்போதும் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டிருக்கும் நபர். நான் அதை கெத்து, ஸ்டைல் என்று நினைத்திருக்க, அவளோ நான் கோபக்காரன், ரவுடி என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

அவளை பொறுத்தவரையில் நான் ஒரு திமிர் பிடித்த ஆள். எங்கள் இருவருக்கும் மத்தியிலான ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த உணர்வே ஒருவேறு கோடுகளாக இருந்தன. சரி! இந்த இரண்டு வெவ்வேறு கோடுகளில் காதல் என்ற தொடர் வண்டி பயணிக்கும் என்று நம்பினேன்.

டான்சர்

டான்சர்

எங்கள் கல்லூரியில் காலேஜ் பிரபுதேவா என்று அழைக்கும் அளவிற்கு நான் ஒரு சிறந்த டான்சர். கல்லூரியின் சிறப்பு விழாக்கள் மற்றும், கல்லூரி சார்பாக பிற கல்லூரி போட்டிகளில் கலந்துக் கொள்ளவும் நானே முதல் ஆளாக இருந்தேன். ஆகையால், கல்ச்சுரல் ஆக்டிவிட்டி நாட்களில் மட்டும் அவளை அருகே சந்தித்து பேசும் வாய்ப்புகள் கொஞ்சம் அமைந்தன.

ஒரே துறை!

ஒரே துறை!

நான் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேஷன், அவள் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டல். அவள் டிப்பார்ட்மெண்ட் டாப்பர், நான் அரியர் வைக்காமல் ஜஸ்ட் பாஸ் மார்க் வாங்கும் ஆசாமி. எனக்கு நடனம், அவளுக்கு பாடல். இப்படி எதை எடுத்தாலும் எதிரும் புதிராக இருந்தோம். அந்தாண்டு எங்கள் கல்லூரி கல்ச்சுரல் நடைப்பெறும் நாள் நெருங்கியது. பிற கல்லூரிகளில் இருந்து நிறைய பேரு கலந்துக் கொள்ள வருகை தருவார்கள். அதுவொரு பெரிய ஈவண்ட்.

கமிட்டி!

கமிட்டி!

எங்கள் கல்லூரியில் அந்தாண்டு அமைக்கப்பட்ட கல்ச்சுரல் கமிட்டியில் நானும், அவளும் இடம் பெற்றிருந்தோம். அந்த சமயத்தில் தான் நானும், அவளும் ஒன்றாக வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவளது மொபைல் எண் கிடைத்தது. ஃபேஸ்புக்கிலும் அன்றே நண்பர்களானோம். என் காதலின் முதல் படி அங்கே தான் துவங்கியது. நம்பர் வாங்கிய முகல் நாளில் இருந்தே இரவு முழுக்க சாட் செய்ய ஆரம்பித்தேன். அவளும் பேசினாள்.

இரண்டு மாதங்கள்...

இரண்டு மாதங்கள்...

இரண்டு மாதங்கள் உருண்டோடின... ஒரு நாள் மாலை தனியாக டான்ஸ் பிராக்டிஸ் செய்துக் கொண்டிருந்த போது, அவள் அங்கே வந்திருந்தாள்.

ஹாஸ்டலில் இருந்து வந்தவள்... நான் ஆடிக் கொண்டிருப்பதை கண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்... என்ன நினைத்தேனோ தெரியவில்லை.. சரியாக பாடல் முடியும் நேரத்தில், அவள் முன் மண்டியிட்டு லவ் பிரபோஸ் செய்தேன்.

ஒரு வாரம்.

ஒரு வாரம்.

அதன் பிறகு ஒரு வாரம் அவளிடம் இருந்தே எந்த பதிலும் இல்லை. ஒரு வாரம் கழித்து அவளாக வந்து காதலை ஏற்றுக் கொண்டதாக பதில் கூறி சென்றாள். இப்போது அவள் என் அதிகாரப்பூர்வ காதலி. என் அப்பா, அம்மா மிகவும் நேசமுடையவர்கள். எனவே, உடனே அவர்களிடம் என் காதலை குறித்து கூறினேன். அவர்கள் என் காதலை ஏற்றனர்.

ஒவ்வொரு மாதமும், எங்கள் காதல் பூத்த நாளான இரண்டாம் தேதி அன்று இருவரும் பரிசுகள் பரிமாறிக் கொள்வோம்.

உதவி!

உதவி!

படிப்பில் எனக்கு நிறைய உதவி செய்தாள். பரிச்சைக்கு முன் எனக்கு பாடம் கற்பிப்பது, சந்தேகங்கள் தீர்ப்பது என நிறைய உதவினாள். இதனால், ஜஸ்ட் பாசில் இருந்து எவரேஜ் ஸ்டூடண்டாக மாறினேன். அந்த சமயத்தில் தான் சம்மர் ஹாலிடேஸ் வந்தது. இரண்டரை மாதங்கள் பிரிந்திருக்க வேண்டும்.

முதலில் என் அப்பா, அம்மாவிற்கு அவளை அறிமுகம் செய்ய விரும்பினேன். இருவருக்கும் அவளை பிடித்திருந்தது.

அவள் வீட்டில்..

அவள் வீட்டில்..

அவள் வீட்டில் அம்மா மற்றும் சகோதரி என்னை பற்றி அறிவார்கள். அவர்களுக்கும் என்னை பிடித்திருந்தது. அவள் வீட்டுக்கு சென்றவுடன் இரவு சீக்கிரம் தூங்கிவிடுவாள், அதிகாலை சீக்கிரம் எழுந்துவிடுவாள். ஆனால், நான் அப்படியே நேர்மாறாக இருந்தேன். ஆயினும், மாலையில் இருவரும் பேசிக் கொள்வதை தொடர்ந்து வந்தோம்.

ஒரு நாள் நானும், அவளும் பேசிக் கொண்டிருந்த போது, அவளது அப்பா கண்டுபிடித்துவிட்டார்.

அழுகை!

அழுகை!

எப்போதும் பெண் காதலிப்பதை அறிந்தால், அம்மா தான் அழுவார். ஆனால், இங்கே அவளது அப்பா அழுதார். அவருக்கு கௌரவ பிரச்சனை. தன் மகள் காதலித்துவிட்டாள் என்பதை அறிந்து வருந்தினார். ஏதோ கொலை செய்தது போல அழுதார். என் காதலியின் முகத்தை பார்ப்பதை கூட தவிர்த்தார்.

மிகவும் மன வருத்ததுடன் காணப்பட்டார். அவள் வீட்டில் அனைவரும் எத்தனையோ எடுத்து கூறியும் அவர் எங்கள் காதலை ஏற்க சம்மதம் தெரிவிக்கவில்லை.

மீண்டும்...

மீண்டும்...

எது நடக்க கூடாது என்று நினைத்தேனோ அது நடந்தது. அவளாலும் தன் அப்பா தினமும் மனம் வருத்ததுடன் இருப்பதை காண இயலவில்லை. ஒன்று அப்பாவை மீறி என்னை காதலிக்க வேண்டும், அல்லது என் காதலை தவிர்த்து அப்பாவின் வருத்தத்தை போக்க வேண்டும்.

மகள்கள் எப்போதும் அப்பா செல்லம் ஆயிற்றே. அப்பா பக்கம் சாய்ந்தால். அவளை நாம் குற்றம் கூட விரும்பவில்லை. அவள் எடுத்த முடிவு சரியானது தான்.

இன்றும்...

இன்றும்...

இன்றும் நானும் அவளும் தினமும் குறுஞ்செய்தி மூலம் பேசி கொண்டு தான் இருக்கிறோம். நான் ஐ லவ் யு சொல்வதும், அதற்கு அவள் ஐ லவ் யு டூ என்று ரிப்ளை செய்வதுமாக தான் எங்கள் சாட்டிங் தொடர்கிறது. ஆனால், அன்று அவள் என் காதலி, எங்களுக்கு ஒரு உறவு இருந்தது. ஆனால், இன்று எங்களுக்குள் அந்த உறவு இல்லை.

இன்னும் கல்லூரி முடிவடைய ஓராண்டு காலமே இருக்கிறது. நல்லப்படியாக படித்து முடித்து, அவள் அப்பா முன் நல்ல நிலையில் நான் இருப்பதை காட்டி.. நிச்சயம் என்னை போன்ற ஒரு மாப்பிளை அவராக தேடினாலும் கிடைக்க மாட்டன் என்று அவருக்கு உணர்த்த வேண்டும்.

தவறு எங்கள் மீதல்ல...

தவறு எங்கள் மீதல்ல...

காதலிக்கும் போதே கூடி குலவி அனைத்தும் முடிந்துவிட்டால் கௌரவம் போய்விடும் என்று பயந்து... காதலித்தனர், சேர்த்து வைத்துவிட்டோம் என்று கூறி திருமணம் செய்து வைத்து விடுவார்கள். இதுவே, நேர்மையாக காதலித்து, சம்மதம் கேட்டாள்.. அதே கௌரவம் பறிபோய்விடும் என்று கூறி காதலை பிரிக்க பார்ப்பார்கள். தவறு காதலிப்பவர்கள் மீதல்ல, அவர்களை உதாசீனம் செய்வோரிடம் தான் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: We are the perfect example of half girlfriend!

We both say "I love you" and "I love you too" at the end of every conversation but we are not in a relationship. A perfect example of half girlfriend.
Desktop Bottom Promotion