For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  எங்கள் உறவில் ரொமான்ஸ் இல்லை. ஆனால், ததும்பி வழியும் காதல் உண்டு - My Story #286

  |

  சில கதைகளுக்கு முடிவில்லாத முடிவு தான் நல்லதொரு முடிவாய் அமைகிறது. என் கதையும் அப்படியான ஒன்று தான்.

  கல்லூரி முடிந்தாயிற்று... அந்த உணர்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்று யாராலும் கூற முடியாது. நண்பர்களுடனான அந்த மகிழ்ச்சியான தருணங்களையும் விட்டுக்கொடுக்க முடியாது. கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாய் மனதுக்குள் கட்டி வைத்த கனவு கோட்டையை அடைய பயணத்தை துவங்காமலும் இருக்க முடியாது.

  நல்ல நட்பும், நல்ல ஆசானும் கிடைத்த ஒவ்வொருவரின் கல்லூரி வாழ்க்கையும் ஒரு சிறந்த அனுபவம் தான். அந்த வகையில் நான் அந்த நான்கு ஆண்டுகளில் ஒரு சிறந்த அனுபவத்தை பெற்றதாக உணர்ந்தேன். ஆனால், அங்கு தான் என் வாழ்க்கை ஒரு திருப்புனையை வைத்திருந்தது... எனக்கான வாழ்க்கை பாடம் அதற்கு பிறகு தான் அமைந்திருந்தது.

  என் வாழ்வில் முக்கியமான அனுபவத்தை நான் எனது முதல் வேலை இடத்தில் தான் பெற்றேன்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  அவன்!

  அவன்!

  புதிய இடம், புதிய ஊர், புதிய மக்கள், புதிய பாஷை என அனைத்தும் புதியதாய் இருந்தது... ஆனால், அவன் மட்டும் ஏனோ நீண்ட நாள் பழகியது போன்ற நபராய் தெரிந்தான். அவன் எனக்கு முற்றிலும் பரிச்சயம் இல்லாதவன் தான். அதற்கு முன் அவனை நான் என் வாழ்வில் கண்டதே இல்லை. ஆனாலும், நிறைய நாள் பழகியது போன்ற ஒரு உணர்வு.

  அழகா?

  அழகா?

  அவன் அப்படி ஒன்றும் அழகும் இல்லை. அவனை கண்டால் பெண்கள் மயங்கும் வண்ணம் ஏதேனும் செய்பவனும் இல்லை. ஒருவேளை அவன் யாரையும் பெரிதாய் கண்டுகொள்ளாமல் தானுண்டு, தன் வேலை உண்டு என்றிருக்கும் குணம் தான் என்னை அவனுக்காக விழ வைத்ததோஎன்றும் நான் கருதியதுண்டு. சுமாரான முகம், யாரிடமும் பெரிதாக பேசவும் மாட்டான். ஆனால், அவனுடன் பேச வேண்டும் என்று அத்தனை ஆவல் என்னுள்.

  தேவதை கதை!

  தேவதை கதை!

  நாம் அனைவரும் நமது குழந்தை பருவத்தில் ஒரு தேவதை கதை படித்திருப்போம். அதில் அந்த தேவதைக்கு ஒரு அழகான காதல் கதை இருக்கும். அப்படியான ஒரு அற்புதமான, அழகான காதல் கதையாக எங்களுடையது அமையும் என்ற ஆசை எண்ணம் அதிகமாக ஊற்றெடுத்துக் கொண்டிருந்தது.

  வயிற்றில் பட்டாம்ப்பூச்சிகள் பறப்பதும், அவன் எதிரே வரும் போதெல்லாம், தேவதைகள் என்னை சுற்றி ஆட்டம் போடுவதமாக இருந்தனர். அவன் என்னிடம் வந்து பேசும் போதெல்லாம், எங்கிருந்தோ இசைஞானி இசைப்பது போன்ற சப்தம் காதுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கும்.

  கட்டிப்போட்டுக் கொண்டேன்!

  கட்டிப்போட்டுக் கொண்டேன்!

  ஏனோ தெரியவில்லை... அவன் மீது எல்லைக் கடந்த காதல் இருந்தும்.. அவன் என்னை கடக்கும் போது கண்கள் வெடுக்கென திரும்பிக் கொள்ளும். அவனிடம் பேச தைரியத்தை மூட்டை, மூட்டையாய் கட்டிக்கொண்டு சென்றாலும், கட்டவிழக்க முடியாதபடி நாக்கு சுருண்டுக் கொள்ளும். அவனது கண்களை பார்த்தாலே, ஊமையாகிவிடும் ஜீவனாய் நான் இருந்தேன்.

  ஆயிரம் கனவுகள்!

  ஆயிரம் கனவுகள்!

  எண்ணற்ற கனவுகள்... நானும் அவனும் சேர்ந்து வருங்காலத்தில் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று. இதயம் முழுக்க அவனது நினைவுகளே சேமித்து வைத்திருந்தேன். ஆனால், என் வாழ்விலும் ஒரு திருப்பம் உண்டானது.

  சினிமாக்களில் வருவது போல... என் காதலும் ஒரு முக்கோண காதல் கதையானது. நான் அவனை விரும்ப, அவன் வேறொரு பெண்ணை விரும்பி வந்தான். அவர்கள் இருவரும் மூன்று ஆண்டுகளுக்குள் மேலாக ஒருவரையொருவர் நேசித்து வருவதாக செய்தி அறிந்த நாளில் என் இதயம் சர்வர் டவுனான ஃபேஸ்புக் போல அதன் பின் எதுவும் லோடாகாமல் நின்றுவிட்டது.

  அவ்வளவு தான்...

  அவ்வளவு தான்...

  இனி மேலும், அவனை நினைத்துக் கொண்டிருப்பது வீண் என்று மனது மணிக்கொரு முறை அலார்ம் அடித்துக் கூறிக்கொண்டே இருந்தது. சில நாட்களில் இதயம் அதை கேட்டு, கேட்டு... ஆம்! அவ்வளவு தான் நமது கனவு கோட்டைகள் எல்லாம். இனிமேலும், அவனையே நினைத்துக் கொண்டிருப்பது அநாவசியமானது என்று ஒப்புக்கொண்டது. ஆனால், அவன் இல்லாத என் எதிர்காலம் குறித்த அச்சம் என்னுள் அதிகமாக இருந்தது. அதிலிருந்து தான் என்னால் அவ்வளவு சீக்கிரம் வெளிவரவே முடியவில்லை.

  சிக்கல்!

  சிக்கல்!

  என் வாழ்க்கையை நானே சிக்கலாக்கி கொள்ள தயாராக இல்லை. எனவே, முடிந்த வரை அவனை சார்ந்து நான் இன்ஸ்டால் செய்து வைத்திருந்த கனவுகள் அனைத்தையும் நானே டெலிட் செய்ய ஆரம்பித்தேன்.

  ஒன் சைடு லவ்வுக்கு என்ன இவ்வளவு ஃபீல் என்று நிறைய தோழிகள், நண்பர்களை கல்லூரி காலத்தில் கலாய்த்தது உண்டு. ஆனால், அது நம் வாழ்வில் எட்டிப் பார்க்கும் போதுதான், எத்தனை ரணமானது என்பதை உணர முடிகிறது.

  ஒரு நாள்...

  ஒரு நாள்...

  இனி அவன் என் வாழ்வில் இல்லை என்று மிதமான வேகத்தில் என் வாழ்க்கை பயணத்தை நகர்த்திக் கொண்டிருந்தேன். அப்போது தான், அவன் மூன்று வருடமாக காதலித்து வந்த பெண், அவனுக்கு துரோகம் செய்துவிட்டாள் என்று அறிந்தேன்.

  இது தான் எனக்கான நல்ல வாய்ப்பு என்று பயன்படுத்திக்கொள்ள மனம் மறுத்தது. காதல் ஏற்படுத்தும் வலியை நாம் உணர்ந்துவிட்டேன். அதிலும், அவர் டபிள் சைடு லவ். அது இன்னும் வேதனையானது. ஆகையால், அவனுடன் உடனே என் காதலை பற்றி பேச நான் தயாராக இல்லை.

  நொறுங்கி போயிருந்தான்!

  நொறுங்கி போயிருந்தான்!

  அவனை அதற்கு முன் அத்தனை சோகமாக நான் பார்த்ததே இல்லை. அவனுடன் அமர்ந்து ஆறுதலாக சில வார்த்தை பேச கூட என்னுள் தயக்கம். நிச்சயம் ஏதேனும் தருணத்தில் நான் அவனை காதலித்ததை கூறிவிடுவேனோ என்ற அச்சம் தான். அதனால் அவன் என்னிடம் முற்றிலும் பேசாமல் போய்விட்டால்.. அதை விட கொடிய தண்டனை வேறேதும் இல்லை. ஏனோ, அத்தனை விஷயத்திலும் தைரியமாக செயற்படும் என்னால் இந்த காதலில் மட்டும் எதுவும் செய்ய முடியவில்லை.

  ஃபேக் மெசேஜ்!

  ஃபேக் மெசேஜ்!

  இந்த காலக்கட்டத்தில் தான் ஒரு ஃபேக் மெசேஜ் மொபைல் செயலி மிகவும் வைரலாக பரவ துவங்கியது. சரி! அவன் மீதிருக்கும் என் காதலை இதிலாவது கூறிவிடலாம் என்று கருதி, என் காதல் மொத்தத்தையும் நான் அவனுக்கு அதில் கூறினேன். ஆனால், அவன் அந்த செய்தியை படித்தானா, இல்லையா என்று அறிந்துக் கொள்ள முடியவில்லை. இன்றும், நான் நேரில் அவனிடம் என் காதலை குறித்து பேச மிகவும் அஞ்சுகிறேன்.

  குறைந்த பட்சம் இந்த கதையை படித்தாவது, இந்த கதையில் வரும் கதாபாத்திரம் நானும், அவனும் தான் என்பதை அறிந்துக் கொள்வானா? என்ற ஏக்கம் என்னுள் இருக்கிறது.

  அவனை விரும்பும் பலர் இருக்கிறார்கள். ஆனால், நான் விரும்பும் ஒரே நபர் அவன் தான். அழகு என்பதில் முகத்தில் இல்லை அகத்தில் இருக்கிறது என்பதை எனக்கு முதன் முதலில் பயிற்றுவித்தவன் அவன் தான். அவனை நான் மிகவும் நேசிக்கிறேன். இந்த கதையில் துவக்கம் மட்டுமே இருக்கிறது தவிர, முடிவே இல்லை. ஆனால், இந்த கதைக்குசோகமான முடிவு மட்டும் அமைந்துவிடக் கூடாது என பிரார்த்தனை செய்து வருகிறேன்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Real Life Story: He was Already in a Relationship with Another Girl.

  I dont that he was already in a relationship with another girl for the past three years. So, I just myself killed my thousands of dreams that i had on him. And The end was not yet written.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more