For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ராம் (எம்.ஜி.ஆர்) - ஜானு (ஜானகி) காதல் கதை பற்றி உங்களுக்கு தெரியுமா?

By John
|

கடந்த சில தினங்களாக ராமு - ஜானு காதல் தான் இன்டர்நெட் முழுக்க பெரும் பேச்சாக இருக்கிறது. 96 படத்தில் விஜய் சேதுபதி - திரிஷா மற்றும் அவர்களது அந்த பள்ளிக் கால காதல் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

திரையுலகில் நடிகர், நடிகையாக நடித்து... திரையைத் தாண்டி, ரியல் லைஃபிலும் கரம் கோர்த்து இல்லற பந்தத்தில் இணைந்த காதல் ஜோடிகளை, பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் இருந்து, இன்றைய டிஜிட்டல் யுகம் வரை நிறையவே நாம் பார்த்திருக்கிறோம்.

சரி! இப்போது ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கும் ராம் - ஜானு போலவே, அந்த காலத்தில் ஒரு ராம் (எம்.ஜி. ராமச்சந்திரன்) ஜானு (வி.என். ஜானகி) காதல் கதை ஒன்று இருந்தது. அதை பற்றி அலச இதுவே தகுந்த நேரமாக தோன்றியது.

90ஸ் கிட்ஸ்களிலயே சிலருக்கு இது கொஞ்சம் பரிச்சயம் இல்லாத காதல் கதை தான். நிச்சயமாக 2K கிட்ஸ்கள் இந்த காதல் கதை குறித்து அறிந்திருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வி.என். ஜானகி!

வி.என். ஜானகி!

வி.என் ஜானகி (வைகோம் நாராயணி ஜானகி) தனது பதின் வயதிலேயே நாட்டியக்கலா சேவா எனும் நடன குழுவில் இடம்பெற்றிருந்தார். அந்த காலத்தில் இந்த நடன குழு நாடு முழுக்க பிரபலமானதாக அறியப்பட்டிருக்கிறது.

ஜானகியின் அப்பா ராஜகோபலா ஐயர் அவர்களின் பூர்வீகம் மத்திய கேரளாவில் அமைந்திருக்கும் வைகோம் எனும் பகுதி ராஜகோபலா ஐயர் அக்காலத்தில் பிரபலமாக அறியப்பட்ட இசை அமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் பாபநாசம் சிவம் என்பவரின் சகோதரர் என அறியப்படுகிறார்.

நடன கலைஞர்!

நடன கலைஞர்!

ஜானகி ஒரு சிறந்த நடன கலைஞர். இவர் மன்மத விஜயம் (1939) என்ற படத்தின் மூலமாக திரையில் நடன கலைஞராக அறிமுகமானார். இவர் நடிகையாக நடித்த முதல் திரைப்படம் ஜுபிடர் ஃபிலிம்ஸின் மோகினி (1948). இதில் இவர் எம்.ஜி ஆருடன் ஜோடியாக நடித்திருந்தார்.

மருதநாட்டு இளவரசி!

மருதநாட்டு இளவரசி!

மோகினி திரைப்படத்தை தொடர்ந்து இவர் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த திரைப்படம் மருதநாட்டு இளவரசி. இந்த திரைப்படம் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. மேலும், எம்.ஜி.ஆருடன் இவர் நாம் என்ற திரைப்படத்திலும் ஜோடியாக நடித்திருந்தார்.

வி.என். ஜானகி அவர்களின் பெரிய வெற்றிப்படமாக அறியப்படுவது ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி ஆகும். இந்த படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

முதல் கணவர்!

முதல் கணவர்!

முக்தி, வேலைக்காரி போன்ற படங்களில் தொடர்ந்து நடித்த வி.என். ஜானகி மெல்ல, மெல்ல திரையில் இருந்து விலகினார். ஜானகி தனது இளம் வயதிலேயே கணபதி என்பவரை திருமணம் செய்திருந்தார். இவரும் சினிமா துறையில் பணிபுரிந்து வந்தவர் தான்.

Most Read: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-ன் சுவாரஸ்யமான காதல் கதை!

ஈர்ப்பு!

ஈர்ப்பு!

மருதநாட்டு இளவரசி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் எம்.ஜி.ஆருக்கு வி.என். ஜானகி அவர்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி இளம் வயதிலேயே இறந்துவிட்டார். இரண்டாவது மனைவி சதானந்தவதியும் உடல்நல குறைப்பாட்டுடன் இருந்தார் என்று அறியப்படுகிறது.

ஒப்பந்தம்!

ஒப்பந்தம்!

மருநாட்டு இளவரசி திரைப்படத்தின் படப்பிடிப்பின் முன்பே, ஜானகியை ஒரு போட்டோவில் முதல் முறை கண்ட போது எம்.ஜி.ஆர் ... அவர் காண தனது இரண்டாம் மனைவியின் தோற்ற சாயலில் இருப்பதை கண்டு வியந்தார். இந்த காரணத்தை வைத்து தான் மருதநாட்டு இளவரசி திரைப்படத்தில் அவரை நாயகியாக ஒப்பந்தம் செய்தார் என்றும் சில தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.

பிரிவு!

பிரிவு!

ஒரு சண்டையின் காரணாமாக வி.என். ஜானகியும் அவரது முதல் கணவர் கணபதி அவர்களும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். அப்போது எம்.ஜி.ஆரின் கண்காணிப்பில் தான் ஜானகி தன் மகன் அப்புவுடன் வாசித்து வந்தார். அப்போதிருந்தே இவர்கள் காதலித்து வந்ததாகவும் அறியப்படுகிறது.

Google

மரணம்!

மரணம்!

ஜானகியின் சகோதரர் JR ஸ்டூடியோ என்ற போட்டோ ஸ்டூடியோவை நடத்திருக்கிறார். இதற்கு அர்த்தம் ஜானகி ராமச்சந்திரன் என்றும் கூறுகிறார்கள். கணபதி 1961ம் ஆண்டு மரணம் அடைந்தார். எம்.ஜி. ஆரின் இரண்டாவது மனைவி சதானந்தவதி 1962ம் ஆண்டு மரணம் அடைந்தார்.

Most Read: பலரும் அறியாத தளபதி விஜய் - சங்கீதாவின் மெர்சல் காதல் கதை!

திருமணம்!

திருமணம்!

1963ம் ஆண்டு எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களும், ஜானகி அவர்களும் திருமண பந்தத்தில் இணைந்தனர். இதன் பிறகும் எம்.ஜி.ஆருடன் பல நடிகைகளின் பெயர்கள் காதல் கிசுகிசுக்களில் அந்த காலத்தில் அடிப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எம். ஜி. ஆரை அதன் பிறகு இறக்கும் வரை அக்கறையுடன் பார்த்துக் கொண்டவர் ஜானகி அவர்கள் தான். அவர்களது மகன் அப்புவையும் எம்.ஜி.ஆர் தத்தெடுத்துக் கொண்டார்.

அரசியல்!

அரசியல்!

எம்.ஜி.ஆர் இறந்த (1987) பிறகு ஜானகி அதிமுக, ஜெயலலிதா அதிமுக என கட்சி உடைந்தது. அப்போது, எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு ஜானகி 24 நாட்கள் முதல்வர் பதவி வகித்தார். பிறகு பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு அதிமுக மீண்டும் ஜெயலலிதா அவர்கள் வசம் வந்தது.

1996ம் ஆண்டில் ஜானகி ராமச்சந்திரன் சென்னையில் இருந்த தனது வீட்டில் 72வது அகவையில் மரணம் அடைந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

MG Ramachandhran and Janaki Love Story!

Here We have shared the love story of famous actor and former politician of MG Ramachandhran and Janaki.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more