For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  புதிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் காதல் லீலைகள் - ஸ்டோரி ஆப் ப்ளேபாய்!

  |

  செல்வந்தரான சிவில் என்ஜினியருக்கு ஒரே மகனாக பிறந்த செல்லப்பிள்ளை. ஆக்ஸ்போர்டு கெபில் கல்லூரியில் அரசியல், பொருளியல் (பொருளாதாரம்) மற்றும் தத்துவவியல் பிரவில் மூன்றாம் வகுப்பில் தேர்ச்சிபெற்றவர்.

  கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்டிருந்த காரணத்தால், படித்து முடித்த கையுடன் மைதானத்தில் களமிறங்கினார்.... முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டனும், புதியதாக பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்று இருக்கும் இம்ரான் கான்.

  Love Affairs, Relationship, Marriage Failure and Play Boy Image of Imran Khan!

  இவர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் முன்னரே, பல இளம் பெண்களின் வாழ்க்கையில் விளையாடியவர். செய்திகளில் அடிபடும் அளவிற்கு ஒரு ப்ளேபாய் வாழ்கையை லண்டனில் வாழ்ந்து வந்தார்.

  அழகான இளம் பெண்களுடன் தொடர்பு, காதல், தோல்வியுற்ற திருமண வாழ்க்கை என்று உறவில் மோசமான அனுபவம் கொண்டவர் இம்ரான் கான்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  பார்ட்டி கலாச்சாரம்!

  பார்ட்டி கலாச்சாரம்!

  80களில் சசெக்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார் இம்ரான் கான். லண்டனில் இருந்த அந்த உயர்மட்ட மக்களிடம் காணப்பட்ட ஒழுக்கமில்லாத வகையில் நடந்துக் கொள்ளும் பார்ட்டி கலாச்சாரத்தில் மயக்கம் கொண்டார் இம்ரான் கான்.

  இம்ரான் கான் தனது இளம் வயதில் ராக்ஸ்டார் போன்ற தோற்றம் கொண்டிருந்தார். அவரது தோற்றத்தினாலேயே அவர் மீது காதல் கொண்ட பெண்கள் நிறைய பேர் இருந்தார்களாம்.

  தீராத விளையாட்டு பிள்ளை!

  தீராத விளையாட்டு பிள்ளை!

  லண்டனில் வசித்து வந்த போது, பல இளம் பெண்கள், மாடல் பெண்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார் இம்ரான் கான். இம்ரான் கான் பயன்படுத்தும் செண்டின் வாசனைக்கே பல பெண்கள் மயங்குவார்கள் என்று சிலர் கருத்தும் தெரிவித்திருக்கிறார்கள். பத்திரிகைகளில் கிசுகிசு பக்கங்களில் இம்ரான் கானின் பெயர் அடிக்கடி இடம்பெற்றிருக்கிறது.

  வெளிப்படியான கருத்து!

  வெளிப்படியான கருத்து!

  1984ம் ஆண்டு ஒரு நாளேடுக்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தானில் சிங்கிளாக பெண்களை காண்பதே அரிது. அங்கே மதுபான கடைகள், டிஸ்கோத்தே, ஏன் தனியாக பெண்களை சந்திக்க இடமே கிடையாது. பெண்களை சந்தித்து பழகுவது என்பது வாழ்க்கையின் ஒரு அலாதியான இன்பம். அதை தான் நான் விரும்புகிறேன் என்று ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்திருந்தார் இம்ரான் கான்.

  90s

  90s

  1990களில் தான் இந்த ப்ளேபாய் இமேஜை தன்மீதிருந்து அகற்ற வேண்டும் என்று கருதினார் இம்ரான் கான். மற்றொரு பேட்டியின் போது, நான் பெண்கள் பின் சுற்றும் பொறுக்கி எல்லாம் கிடையாது என்ற கருத்தை பதிவு செய்திருந்தார். அதுவரை இம்ரான் கான் சிங்கிளாக தான் வாழ்ந்து வந்தார்.

  முதல் திருமணம்!

  முதல் திருமணம்!

  1995ல் தனது 42வது வயதில் முதல் திருமணம் செய்துக் கொண்டார் இம்ரான் கான். இவர் ஜெமிமா கோல்ட்ஸ்மித் எனும், யூத பில்லியினரான சர் ஜேம்ஸ் கோல்ட்ஸ்மித் என்பவரின் மகளை திருமணம் செய்துக் கொண்டார்.

  இம்ரான் கானுக்கும், ஜெமிமாவுக்கும் இடையே 22 வயது வித்தியாசம். ஜெமிமா இம்ரான் கானை திருமணம் செய்துக் கொண்ட போது 20 வயதே நிரம்பிய இளம் பெண்ணாக இருந்தார்.

  பிரிவு!

  பிரிவு!

  இதன் பிறகு, அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறி, உருது பேசவும் கற்றுக் கொண்டார். மேலும், இஸ்லாமாபாத்திற்கும் இடம்பெயர்ந்து சென்றார். இந்த தம்பதிகளுக்கு சுலைமான் இசா கான் மற்றும் குவாஸிம் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனது உடல்நல பிரச்சனை காரணமாக ஜெமிமா பெரும்பாலான நாட்களை இங்கிலாந்தில் கழிக்க வேண்டிய கட்டாயம் உண்டானது.

  மேலும், இவர் மேற்படிப்பும் படித்து வந்தார். ஏறத்தாழ திருமணமாகி பத்து ஆண்டுகளான நிலையில் 2004ம் ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து செய்துக் கொண்டனர்.

  இரண்டாம் திருமணம்!

  இரண்டாம் திருமணம்!

  முதல் மனைவியுடன் பிரிவு ஏற்பட்டு பத்து ஆண்டுகளுக்கு பிறகு, பிபிசி தொலைக்காட்சியில் வெதர் கேர்ளாக பணிப்புரிந்து வந்த ரெஹாம் கான் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் இம்ரான் கான். ஆனால், இவர்களது இல்லற பந்தம் பத்து மாதங்கள் கூட நீடிக்கவில்லை.

  இம்ரான் கான் தன் வாழ்க்கையையே நாசம் செய்துவிட்டார். அவர் தன்னை ஒரு கடவுள் போல உருவகப்படுத்திக் கொள்கிறார். அவரிடம் நிறைய ஈகோ இருக்கிறது. மேலும், திருமணமல்லாத கள்ளத் தொடர்பு மூலமாக அவருக்கு ஐந்து குழந்தைகள் இருக்கிறார்கள் என்று கூறி இம்ரானை பிரிந்தார் ரெஹாம் கான்.

  மூன்றாம் திருமணம்!

  மூன்றாம் திருமணம்!

  இந்தாண்டு பிப்ரவரி மாதம் இம்ரான் கான் புஷ்ரா மேனகா எனும் 39 வயதுமிக்க பெண்மணியை மூன்றாவதாக திருமணம் செய்துக் கொண்டார். புஷ்ரா மேனகா ஏற்கனவே திருமணமாகி ஐந்து குழந்தைகள் பெற்றவர் ஆவார்.

  புஷ்ரா முழுவதுமாக புர்கா அணியும் பழக்கம் கொண்டிருந்தவர். ஆகையால், இம்ரான் கான் திருமணம் முடியும் வரை புஷ்ராவின் முகத்தை பார்க்கவே இல்லை. அவரை புகைப்படத்தில் மட்டும் தான் கண்டிருந்தார்.

  நாட்டை காப்பாரா?

  நாட்டை காப்பாரா?

  இப்படி உறவுகளில் பல கசப்பான சூழல்களை கடந்து வந்திருப்பவர் இம்ரான் கான். இப்போது பாகிஸ்தான் பிரதமராக தேர்வாகி இருக்கும் இம்ரான் கானை எதிர்த்து, பல கட்சிகள் கூட்டாக மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்து வருகின்றது. மறுபுறம்... இனிமேல், இவரை தன் அப்பா என்று சொல்லிக் கொண்டு எத்தனை பேர் வரப் போகிறார்களோ என கேலி செய்து வருகிறார்கள்.

  சில தலைவர்கள் இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் முன்னேற்றம் காண வாய்ப்புகள் இருப்பதாகவும் கருத்து கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Love Affairs, Relationship, Marriage Failure and Play Boy Image of Imran Khan!

  Former Pakistan Cricketer and New Prime Minister of Pakistan Imran Khan who is born in silver spoon. Here we gonna see about his relationship affairs and failure marriage relationship in detail.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more