For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பலரும் அறியாத சர் ஜடேஜாவின் ஃபர்ஸ்ட் சைட் லவ் ஸ்டோரி!

|

யுவராஜ் சிங்கிற்கு அடுத்து இந்தியா கண்டெடுத்த ஒரு அற்புதமான மற்றும் கச்சிதமான ஆல்-ரவுண்டர் ப்ளேயர் ரவீந்திர ஜடேஜா. அணிக்கு தேவை எனும் போது, பந்திலும், பேட்டிலும் ஒரு கை பார்க்கும் இவர். ஃபீல்டிங்கில் பாயும் புலி.

தற்போதைய இந்திய அணியில் விராத் கோலி, தோனிக்கு அடுத்து பர்பெக்ட் ஃபிட்னஸ் வெறியர் என்று ஜடேஜாவை கூறலாம். இவரை ரசிகர்கள் சர் ஜடேஜா என்று செல்லமாக அழைப்பதும் உண்டு.

ட்விட்டர் உலகில் சர் ஜடேஜா என்ற இவரது ரசிகரின் அக்கவுண்ட் மிகவும் பிரபலம். அதில், பாரபட்சம் பார்க்கப்படாமல் பலரும் வறுத்தெடுக்கப்படுவதும் உண்டு.

மைதானத்தில் நிறைய சேட்டைகள் செய்யும் ரவீந்திர ஜடேஜா காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் என்றாலே சிலருக்கு வியப்பாக இருக்கும். அதிலும், இவர் ஃபர்ஸ்ட் சைட், ஃபர்ஸ்ட் லவ் என்று கூறினால் இவரது ரசிகர்களுக்கு திகைப்பு ஏற்படுவதில் ஆச்சரியம் இல்லை.

இனி! சர் ஜடேஜாவின் அந்த காதல் கதையை குறித்து தெரிஞ்சுக்கலாம் வாங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ராஜ்புத் குடும்பம்!

ராஜ்புத் குடும்பம்!

ரவீந்திர ஜடேஜா ராஜ்புத் குடும்பத்தை சேர்ந்தவர். 1988ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் நாள் பிறந்தவர் ஜடேஜா. தனது சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மீது பேரார்வம் கொண்டிருந்தார். தனது பதினாறாம் வயதில் இருந்து முறையான பயிற்சி எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார் ஜடேஜா.

2008-09

2008-09

2008ம் ஆண்டு தேசிய போட்டிகளில் தனது திறமைகளை வெளிப்படுத்தி, இந்திய கிரிக்கெட் ஆணையத்தின் தேர்வாளர்கள் கவனத்தில் இடம்பிடித்தார் ஜடேஜா. 2009ம் ஆண்டு ஜடேஜாவிற்கு அவர் எதிர்பார்த்தது போலவே சர்வதேச போட்டிகளில் விளையாட அணியில் இடம் கிடைத்தது.

சாதனை!

சாதனை!

தான் அணியில் தேர்வானதில் இருந்து, பந்து வீசும் ஸ்டைல் மற்றும் ஃபீல்டிங் மூலம் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார் ஜடேஜா. ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை ட்ரிப்பில் செஞ்சுரி அடித்த முதலாவது இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் எட்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார் ஜடேஜா.

பெண் பார்க்கும் படலம்!

பெண் பார்க்கும் படலம்!

அந்த காலக்கட்டத்தில் தான் ஜடேஜாவிற்கு திருமணம் செய்து வைக்க வீட்டார் பெண் பார்த்து வந்தனர். இவரது சகோதரியும், உனக்கான பெண்ணை நீ தேடி வைத்திருக்கிறாயா என்று ஜடேஜாவை கிண்டலடித்து கேட்டுக் கொண்டே இருந்தாலும். கிரிக்கெட்டை தாண்டி அப்போது ஜடேஜாவிற்கு பெரிதாக காதலில் எல்லாம் ஆர்வம் இருக்கவில்லை.

பெண் தேர்வு!

பெண் தேர்வு!

2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜடேஜாவின் குடும்பத்தார் ராஜ்கோட் குடும்பத்தை சேர்ந்த மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்த ஒரு பெண்ணை தேர்வு செய்தனர். அவர் ஜடேஜாவை காட்டிலும் இரண்டு வயது மட்டுமே இளையவர். அவர் பெயர் ரிவாபா சோலங்கி.

ரிவாபாவின் குக்டுமபம்!

ரிவாபாவின் குக்டுமபம்!

ரிவாபாவின் அப்பா ராஜ்கோட்டை சேர்ந்த ஒரு தொழிலதிபர். இவரது அம்மா இந்தியன் ரயில்வே துறையில் வேலை செய்து வந்தார். ரிவாபாவும், ஜடேஜாவின் சகோதரி நைனாவும் ஒருவருக்கு ஒருவர் தெரிந்தவர்கள். இவர் மூலமாக தான் ரிவாபாவை பெண் பார்த்தனர் என்றும் சில தகவல்கள் மூலம் அறியப்படுகிறது. ஒருவழியாக ஜடேஜாவிற்கான ஜோடியை அவரது சகோதரியே தேடிப்பிடித்தார்.

சம்மதம்!

சம்மதம்!

தனது சகோதரி தேர்வு செய்த பெண்ணையே திருமணம் செய்துக் கொள்ள சம்மதம் என தெரிவித்தார் ரவீந்திர ஜடேஜா. ரிவாபாவை முதன் முறையாக நேரில் கண்ட போதுதான், தனக்கான பெண் எப்படி இருக்க வேண்டும் என்று ரவீந்திர ஜடேஜா கனவு கண்டு வைத்திருந்தாரோ, அப்படியே ரிவாபா இருந்ததை அறிந்து வியந்து போனார். உண்மையை சொன்னால், கண்டதும் காதல் என்பார்களே.. அப்படி ஒரு காதலில் தொபக்கடீர் என விழுந்தார்.

கண்டதும் காதல்!

கண்டதும் காதல்!

ரிவாபாவை கண்டதுமே காதலில் விழுந்த ரவீந்திர ஜடேஜா, ஒருமுறை தான் அளித்த பேட்டியில், ரிவாபா மிகவும் ஈர்ப்பானவர், படித்தவர், நல்ல புரிதல் கொண்டவர் என்று கூறி இருந்தார். தனக்கான வாழ்நாள் துணை இப்படியான ஒரு பெண்ணாக தான் இருக்க வேண்டும் என்று நான் திட்டமிட்டு வைத்திருந்தேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

முதல் சந்திப்பிலேயே மொபைல் எண்ணை வாங்கி, காதலிக்க துவங்கிவிட்டார் ஜடேஜா.

திருமணம்!

திருமணம்!

2015ல் இரு குடும்பத்தாரால் முடிவு செய்யப்பட்ட இவர்களது திருமணம். 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிச்சயம் செயப்பட்டு. அதே ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் தேதி காதல் திருமணமாக நடந்து முடிந்தது. இந்த ஜோடிக்கு கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் நித்யானா என்ற பெண் குழந்தை பிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Indian All Rounder Cricketer Ravindara Jadeja Love Story!

Here we have covered about the first sight love story of Indian All Rounder Cricketer Ravindara Jadeja aka Sir Jadeja.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more