For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த அறிகுறிகள் எல்லாம் தெரிஞ்சா உங்கள் லவ் சக்சஸ் தான்!

காதலர்கள் மத்தியில் இருக்கிற முக்கியமான பிரச்சனை நாம் விரும்பும் நபர் மீண்டும் நம்மை காதலிக்கிறீர்களா என்ற சந்தேகம் இருக்குமல்லவா? அதை இந்த அறிகுறிகளைக் கொண்டு நீங்கள் கண்டுபிடிக்கலாம்

|

காதலில் என்றல்லாமல் பொதுவாகவே நம்மிடையே ஒரு பழக்கம் உண்டு, நாம் சொல்லாமல் பிறர் அது காதலனாகவோ அல்லது நண்பராகவோ அல்லது நெருங்கிய உறவினராகவோ இருக்கலாம். அவர்கள் தானாகவே நமது தேவைகளை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம்.

எப்போதாவது அது நிகழலாம், ஆனால் ஒவ்வொரு முறையும் அப்படியே நிகழ வேண்டும் என்று சொல்ல முடியாது அல்லவா? காதல் என்று வரும் போது மற்ற நேரங்களை விட ஏகப்பட்ட தயக்கங்கள் சங்கடங்கள் கலந்தே இருக்கும். அதோடு அங்கே எதிர்ப்பார்ப்புகளும் கூடுதலாக இருப்பதால் இங்கே நாம் சில விஷயங்களை அறிந்து வைத்திருப்பது அவசியம்.

நமக்கு விருப்பம் ஏற்பட்டு பழகுகையில் எதிரில் இருப்பவருக்கும் நம் மீது அன்பு இருக்கிறதா? அவர் நம்மை ஏற்றுக் கொள்வாரா என்ற சந்தேகம் இருக்கும்.... அதை நேரடியாக கேட்டுவிடவும் முடியாமல் தவித்து கொண்டிருப்பவர்களுக்காகத் தான் இந்த கட்டுரை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கனவுகளுக்கு :

கனவுகளுக்கு :

ஒவ்வொருவருக்கும், வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற லட்சியத்தின் இடையே கனவையும் வென்றெடுக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாக இருக்கும். உங்களை விரும்புகிறவர்கள் அந்த கனவுக்கு நிச்சயம் துணை நிற்பார்கள்.

நீங்கள் சோர்ந்து போகும் போதெல்லாம், அந்த கனவை அடைய இன்னும் நீ முயற்சிக்க வேண்டும் என்கிற நம்பிக்கையான வார்த்தைகள் அவரிடம் இருந்து வெளிப்படும்.

சந்தோசம் :

சந்தோசம் :

வெறும் வாய் வார்த்தைகளாக அல்லாமல் உங்களுடன் இருக்கும் போது அவர் சந்தோசமாக உணர்வார். இதை அவர் வார்த்தைகளால் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதை விட அவரின் செய்கைகளாலேயே நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

அந்த மகிழ்ச்சியில் நிச்சயமாக உங்களுக்கான இடமும் பங்களிப்பும் இருக்கும் என்பதால் அந்த காதல் உங்களுக்கு திரும்ப கிடைத்திடும்.

முக்கியம் :

முக்கியம் :

பிறருக்கு நாம் முக்கியமான இடத்தில் இருக்கிறோம் என்பதே நம்மை சந்தோசப்படுத்த உற்சாகப்படுத்தும் ஓர் நிகழ்வாக இருந்திடும். உங்களுடன் பழகும் போது பேசும் போது மட்டுமல்ல பிறரிடமும் அதே முக்கியத்துவத்தை உங்களுக்கு கொடுப்பாரானால் அந்த கொடுப்பினையை தவர விட வேண்டாம்.

இதை ஒவ்வொரு முறை சோதனை செய்து பார்க்க நினைக்காதீர்கள். ஒரு கட்டத்தில் அது இருவருக்குமே சோர்வை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு.

 சின்ன சின்ன விஷயங்கள் :

சின்ன சின்ன விஷயங்கள் :

நாம் சோர்வாக இருக்கும் போது அல்லது உதவி தேடும் செல்லும் போது மட்டுமல்ல நீங்கள் இருக்கிற அல்லது உங்களது பங்களிப்புகள் இருக்கிற சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று சொன்னால் அவரின் அன்பிற்கு நீங்கள் தேர்வாகிவிட்டீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்

அரவணைப்பு :

அரவணைப்பு :

பணமோ பொருளோ கொடுத்து உதவுவதை விட நல்ல வார்த்தைகள், தன்னம்பிக்கையான வார்த்தைகளை சொல்லி நம்மை உற்சாகப் படுத்துபவர்கள் தான் இன்று குறைவு.

பணவ உதவியை அல்லது பிற உதவியை யார் வேண்டுமானாலும் செய்திடலாம். ஆனால் நம்மை தன்னம்பிக்கை ஏற்படுத்த வேண்டுமானால் கண்டிப்பாக நம்மை நேசிப்பவர்களால் தான் முடியும். நம்மால் முடியாது என்று போட்டியிலிருந்து விலக நினைக்கும் போதெல்லாம் இல்லை இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் கண்டிப்பாக உன்னால் முடியும் என்று சொல்வது போல உங்களுடன் இருக்கிறார் என்றால் அவரை ஒரு போது கைவிட்டுவிடாதீர்கள்.

மரியாதை :

மரியாதை :

உங்களுக்கான இடம் மட்டுமல்ல உங்களுடைய கருத்துக்களை சொல்வதற்கான சுதந்திரம் மற்றும் நீங்கள் எத்தகைய கருத்துக்களையும் அவருடன் பகிர்ந்து கொள்ளலாம் என்ற இடம் உங்களுக்கு இருக்கும்.

அந்த மரியாதையும், சுதந்திரமும் எல்லா இடங்களிலும் உங்களுக்கு கிடைத்திராது. அப்படியான சந்தர்ப்பங்கள் அவர் உங்களுக்கு ஏற்படுத்தி கொடுத்தால் அவர் தான் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார் என்பது மறுப்பதற்கில்லை.

 குடும்பம் :

குடும்பம் :

நாம் இருவரும் காதலிக்கிறோம் நாம் சந்தோசமாக இருந்தால் மட்டும் போதும் என்று நினைத்திடாமல் எல்லாரும் சந்தோசமாக இருக்கவேண்டும். நீயும் நானும் மட்டுமல்லாது உன்னுடைய குடும்பம், நண்பர்கள் எல்லாரைப் பற்றிய நல்ல அபிப்ராயம் கொண்டிருந்தால் அவர் நிச்சயமாக உங்களை காதலிக்கிறார் என்று உணர்ந்து கொள்ளலாம்.

விவாதங்கள் :

விவாதங்கள் :

விவாதம் என்று சொன்னாலே சண்டை, சச்சரவு என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். கருத்துப் பரிமாற்றம் என்பது ஆழமான உறவுக்கு அடிப்படையான ஒன்று என்று தான் சொல்ல வேண்டும். நிச்சயமாக அந்த கருத்துக்கள் அவர் மனதை காயப்படுத்தும் என்று சொல்லாமல் தவிர்ப்பதும் இங்கே தவறு தான்.

நீ செய்தது சரி என்று எவ்வளவு தூரம் பாராட்டுகிறீர்களோ அதே நேரத்தில் அவர் தவறு செய்யும் போது அல்லது தவறான முடிவுகளை எடுக்கும் போதும் இது தவறு என்பதை நீங்கள் சுட்டிக்காட்ட வேண்டும்.

அதே போல அவர் சுட்டிக் காட்டும் நேரத்தில் அதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். காதலனாக வரப்போகிறவன் எப்போதும் நம்மை பாராட்டிக் கொண்டேயிருக்க வேண்டும் என்று நினைக்காமல் அவனின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.

நிறைய பேசுங்கள், எது சரி எது தவறு என்பதை விவாதியுங்கள்

எதிர்காலம் :

எதிர்காலம் :

ஒவ்வொருவருக்கும் தங்களுடைய எதிர்காலம் குறித்த திட்டமிடல் இருக்கும், அப்போது நான் வாழ்கிற வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும், அதற்காக எப்படியெல்லாம் உழைக்க வேண்டும் என்பதும் அந்த எதிர்கால திட்டத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். வெறுமனே பகல் கனவு மட்டும் கண்டு கொண்டு இருக்காமல் சரியான முன்னெடுப்பிற்கான இடமாக அது அமைந்திருக்க வேண்டும்.

அந்த எதிர்கால கனவில் நீங்களும் , உங்களுடைய பங்களிப்பும் இடம் பெற்றிருந்தால் நிச்சயமாக அவரின் மனதில் நீங்கள் ஆழமாக இடம்பிடித்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

முன்னுரிமை :

முன்னுரிமை :

நம்மில் பெரும்பாலானோர் இந்த உரிமைக்காத்தான் ஏங்குவோம், எனக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. என்னை விட அவனுக்கு முக்கியமாக வேறு வேலைகள், அல்லது நபர்கள் இருக்கிறார்கள் என்ற மனஸ்தாபம் தான் காதலர்களுக்கு மத்தியில் மனஸ்தபம் ஏற்படுவதர்கான முக்கிய பிரச்சனையாக இருக்கிறது.

அதற்காக எல்லா நேரங்களிலும் அவன் எனக்கு மட்டும் தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள், அப்படி எதிர்ப்பார்ப்பது உங்களை மட்டுமல்ல உங்கள் உறவையும் சிதைத்திடும்.

பெஸ்ட் :

பெஸ்ட் :

ஒவ்வொரு நேரத்திலும் உங்களின் பெஸ்ட்டான பக்கங்கள் மட்டுமே தனக்கு வேண்டும் என்று நினைக்காமல் உங்களின் வெற்றி தோல்வி இரண்டிலும் உடனிருக்க நினைத்தால் அந்த நபரை நிச்சயமாக தவற விட்டுவிடாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Important signs that he loves you back

Important signs that he loves you back
Story first published: Thursday, June 7, 2018, 12:01 [IST]
Desktop Bottom Promotion