Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
நிச்சயத்திற்கு முன் இந்த நடிகருடன் டேட் செய்ய விரும்பினாராம் அம்பானியின் மகள்!
நிச்சயத்திற்கு முன் 'ஒன் நைட் ஸ்டாண்ட்' நடிகருடன் டேட் செய்ய விரும்பினாராம் அம்பானி மகள்!
இந்தியாவின் முதல் மற்றும் மாபெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி. முகேஷ் அம்பானியின் வீட்டில் அடுத்தடுத்து இரண்டு திருமணங்கள் நடக்கவுள்ளன.
ஒன்று அவரது மகன் ஆகாஷின் திருமணம், மற்றொன்று மகள் இஷாவின் திருமணம். இஷா அம்பானிக்கும் தொழிலதிபர் அஜய் பிரமலாவின் மகன் ஆனந்துக்கும் திருமணம் நிச்சயமானது. முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷுக்கும், ஸ்லோகா மேத்தாவிற்கும் கூட நிச்சயம் முடிந்துவிட்டது.

இவ்வருடத்தின் இறுதியில் தனது மகன் மற்றும் மகளின் இரு திருமண வைபவங்களையும் முடித்துவிட திட்டமிட்டுருக்கிறார் முகேஷ் அம்பானி.
அனைவருக்குமே பிரபலங்கள் மீது க்ரஷ் ஏற்படுவது இயல்பு. ஷாருக்கான், மாதவன், ஹ்ரித்திக் மீது கோடிக்கணக்கான பெண்களுக்கு ஈர்ப்பும், க்ரஷ்ம் இருந்துள்ளது. அதே போல தான், கஜோல், சிம்ரன், ஜோதிகா போன்றவர் மீது ஆண்களுக்கும் ஒருவித க்ரஷ் இருந்தது.
அந்த வகையில் அம்பானியின் மகள் என்பதால் இவர் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?

யார் அவர்?
நிச்சயதார்த்தம் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன் இஷா அம்பானி கொடுத்த ஒரு பேட்டியில், தனது ரன்வீர் மீது கொள்ளை பிரியம். நான் அவரது பெரிய ரசிகர். அவரது நடிப்பும், நடிப்பில் அவர் வெளிப்படுத்தும் திறமையும் மிகவும் அற்புதமானது. கிட்டத்தட்ட அவர் மீதிருந்த க்ரஷ் காரணமாக திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு கூட விருப்பம் இருந்ததாக கூறி இருந்தாராம் இஷா அம்பானி.

என்ன செய்கிறார்?
இப்போது ரன்வீர் சிங் பாலிவுட்டின் 'ஹரி' விறுவிறு ஆக்ஷன் டைரக்டர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் சிம்பா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவர் சமீபத்தில் பத்மாவதி படத்தில் வெளிப்படுத்தி இருந்த வில்லத்தனம் இந்தியா முழுக்க பல ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை வாங்கி கொடுத்தது.

கல்யாணம் எப்போ?
ரன்வீர் சிங் நடித்து முடிக்கவிருக்கும் சிம்பா என்ற படம் இந்த வருடத்தின் இறுதியில் டிசம்பர் மாதம் 29ம் தேதி திரைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே காலக்கட்டத்தில் தான் இஷா அம்பானிக்கும் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
க்ரஷ் உடன் டேட் செய்ய முடியவில்லை என்றாலும், இருவர் வாழ்விலும் முக்கியமான நாளை கிட்டத்தட்ட மேட்ச் செய்துக் கொள்ள போகிறார்கள்.

ஒன் நைட் ஸ்டாண்ட்
ரன்வீர் ஒரு ப்ளே பாய் என்றே சொல்லலாம். நாம் என்ன சொல்வது, அவரே அதை ஊர் முழுக்க தம்பட்டம் அடிக்காத குறையாய் அனைத்து பேட்டிகளிலும் கூறி கொண்டு திரிகிறார்.
ஒருமுறை ஆன்லைன் இணையத்திற்கு அளித்த பேட்டியில், ஒன் நைட் ஸ்டாண்ட் உறவில் இருந்ததுண்டா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு... சற்றும் யோசிக்காமல்.. ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இருந்திருக்கிறேன் என்று பளீர் பதில் அளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார் ரன்வீர்.

தீபிகா...
ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் கூடிய விரைவில் திருமண பந்தத்தில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் பல காலமாக காதலித்து வருகிறார்கள். தனது காதலியுடன் வில்லனாக நடித்த இவர்.. நிஜத்திலும் சில முறை உண்மையை கூறுகிறேன் என்று தீபிகா என்ன கூறுவார் என்றே யோசிக்காமல் பதில் அளித்துவிடுகிறார்.
இதெல்லாம் நிஜமாகவே இவர் வாழ்வில் நடந்தது தானா? இல்லை இவராக அடித்துவிடுகிறாரா என்றும் தெரியவில்லை.



Click it and Unblock the Notifications