முதலிரவுக்கு முன்னால் இதை எல்லாம் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்!

Posted By: Dinesh
Subscribe to Boldsky

முதலிரவு அன்றைய உடலுறவு என்பது அனைத்து பெண்களுக்குமே ஒரு நீண்ட நாளைய கனவாக தான் இருக்கும். இந்த முதலிரவு அனுபவமானது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். ஒரு சிலருக்கு முதலிரவு என்பது இனிய ஆச்சரியமான அனுபவமாக இருக்கும் ஒரு சிலருக்கு இது வலியை தரும் அனுபவமாக அமையும். ஆனால் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியமான வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவமாக தான் இருக்கும் என்பதில் எந்தவிதமான ஐய்யமும் இல்லை..

you should learn these things before wedding day night

எதிர்பார்ப்பு, ஆசைகள், கனவுகள் போன்ற அந்த முதலிரவு நாள் அன்று நிறைந்திருக்க தான் செய்யும். ஆனால் மனம் ஒரு குரங்கு போல.. முதலிரவு கனவுகளை எல்லாவற்றையும் இந்த பயம் என்ற ஒன்று வந்து அழித்துவிடும். எனவே முதலிரவு அன்று என்ன தான் பயம் ஒரு புறம் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும் கூட உங்களது நலனுக்காக அந்த பயத்தை வென்றுவிட முயல வேண்டியது அவசியமாகும்.

இந்த பகுதியில் முதலிரவு அன்று நீங்கள் எப்படி தயாராக வேண்டும்... உங்களது பயத்தை போக்குவது எப்படி, முதலிரவு என்றால் எப்படி இருக்கும் என்பது பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமைதியாக இருங்கள்

அமைதியாக இருங்கள்

உண்மையில், நீங்கள் இந்த கடுமையான தருணத்தில் பொருமை காக்க வேண்டியது அவசியமாகும். உங்களது மனதிற்குள் ஆயிரமாயிரம் உணர்ச்சிகள் இருக்கும். அவை எல்லாம் உங்களது உணர்வுகளை கடுமையாக மாற்றும். ஆனால் நீங்கள் அதை எல்லாம் தாண்டி கண்டிப்பாக உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டியது அவசியம். முதல் அனுபவம் என்பதால் உங்களுக்கு நிச்சயமாக பயமாக தான் இருக்கும். ஆனால் நீங்கள் சற்று நேரம் எடுத்துக் கொண்டு உங்களது மனதை தெளிவுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

உதிரப்போக்கு

உதிரப்போக்கு

முதலிரவின் போது உதிரப்போக்கு சிறிதளவு உண்டானால் தான் அந்த பெண் கற்புடையவள் என்று ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் இது உண்மையானது அல்ல... பெண்கள் தற்போது ஓட்டப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற சில வகையான உடல் சம்பந்தப்பட்ட பயிற்சிகளில் ஈடுபடுவதால் இந்த உதிரப்போக்கு அந்த உடல் செயல்பாடுகளின் போது வெளிப்பட்டு விடுகிறது. அதற்காக அந்த பெண் கற்பற்றவள் ஆகிவிட முடியாது அல்லவா... எனவே இது பற்றிய கவலைகள் வேண்டாம்.

சினிமாவை போல இருக்காது

சினிமாவை போல இருக்காது

முதலிரவு என்றால் எப்படி இருக்கும் என்பதை நாம் திரைப்படங்களில் மட்டும் தான் கண்டிருப்போம். ஆனால் உண்மையில் சினிமாவில் வருவது போன்ற ஒரு முற்றிலும் ஒழுங்கான முதலிரை நீங்கள் எதிர்பார்த்திர்கள் என்றால் அது ஏமாற்றத்தில் தான் சென்று முடியும். ஏனெனில் அன்று உள்ள பயத்தில் அனைத்து விஷயங்களும் நேர் மாறாக நடக்க வாய்ப்புகள் உள்ளது. அதனால் முதலிரவு என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற ஒரு வரையறை வேண்டாம்.

சோர்வு இல்லாமல் இருக்கவும்

சோர்வு இல்லாமல் இருக்கவும்

உங்களது திருமண விழாவில் நடந்த கோலகல கொண்டாட்டங்களின் காரணமாக நீங்கள் மிகவும் சோர்வாகவும் களைப்பாகவும் இருக்கலாம். ஆனால் நீங்கள் நன்றாக குளித்து விட்டு உடலில் வியற்வை துர்நாற்றம் எல்லாம் இல்லாதவாறு முதலிரவுக்கு தயாரக வேண்டும். அதிக நறுமணம் வீசும் வாசனை திரவியங்களை தவிர்க்க வேண்டும்.

உச்சமடைதல்

உச்சமடைதல்

உச்சமடைதல் என்பது ஒவ்வொரு தடவை உடலுறவு கொள்ளும் போது நடப்பது என்பது எளிதான விஷயம் அல்ல. எனவே நீங்கள் முதலிரவில் உச்சமடைதலை எதிர்பார்க்காமல் இருப்பது என்பது மிகச்சிறந்தது. நீங்கள் முதலிரவில் உச்சமடையவில்லை என்று மனதை தளரவிடாதீர்கள். இது ஒரு சிலருக்கு மட்டுமே நடக்கும் ஒன்றாகும்.

நடக்காமலும் போகலாம்

நடக்காமலும் போகலாம்

திருமணத்தின் போது உறவினர்களை சந்திப்பது, திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு சரியாக தூங்காமல் இருப்பது போன்றவைகள் உங்களை களைப்படைய செய்யும். இது உங்களது துணையையும் களைப்படைய செய்திருக்கும் என்பதால் அவர் இன்று முதலிரவு வேண்டாம் என்று கூறினால், நீங்கள் மனம் உடைந்து போய்விடாதீர்கள். பலர் முதலிரவு அன்று முதலிரவு வைத்துக் கொள்வதில்லை என்பது தான் உண்மை...

இதையும் செய்யலாம்

இதையும் செய்யலாம்

உடலுறவு கொள்வது என்பது முதலிரவன்று கடினமாக இருக்கிறது என்றால், நீங்கள் வேறு வழிகளிலும் மகிழ்ச்சியை அனுபவிக்கலாம். உங்கள் திருமணத்தில் நடந்த இனிமையான விஷயங்களை பகிர்ந்து கொண்டு உற்சாகமாக இருவரும் சிரித்து மகிழலாம். அல்லது உங்களது வாழ்வில் நடந்த இனிமையான தருணங்களை பேசலாம். இவை எல்லாம் உங்களையும், உங்களது துணையையும் ஒருங்கிணைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

you should learn these things before wedding day night

you should learn these things before wedding day night
Story first published: Monday, November 20, 2017, 18:09 [IST]