Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
ஆண்களைப் பற்றி ஆண்களுக்கே தெரியாத சில உண்மைகள்!
இங்கு ஆண்களைப் பற்றி தெரியாத சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
எப்படி பெண்களின் மனதைப் புரிந்து கொள்வது என்பது கடினமானதோ, அதேப் போல் ஆண்களைப் புரிந்து கொள்வது என்பதும் கடினமானது தான். அதிலும் காதலில் விழுந்த ஆண்களை என்றால், சொல்லவே வேண்டாம். ஆண்களின் நடவடிக்கைகள் அப்படியே மாறிவிடும்.
அந்த அளவில் காதல் ஒருவருக்குள் நுழைந்தால், அதற்கான அறிகுறிகளை ஆண்களிடம் தெள்ளத்தெளிவாக காட்டும். இக்கட்டுரையில் ஆண்களைப் பற்றிய சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

உண்மை #1
ஆண், பெண் இருபாலருமே காதலில் விழுவார்கள். ஆனால் யார் முதலில் அதை வெளிப்படுத்துவார்கள்? புதிய ஆய்வு ஒன்றில், காதலை முதலில் வெளிப்படுத்துவது ஆண்கள் தான் என தெரிய வந்துள்ளது.

உண்மை #2
ஒன்று தெரியுமா? அதிகமாக ஏமாற்றும் ஆண்களின் IQ அளவு குறைவாகத் தான் இருக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. IQ அளவு அதிகம் உள்ள ஆண்கள், எப்போதும் துணையை மதித்து நடத்துவதோடு, எப்போதாவது தான் ஏமாற்றுவார்கள்.

உண்மை #3
ஏன் எப்போதும் ஆண்கள் தன்னை கடந்து செல்லும் பெண்களை ஒருமாதிரி பார்க்கிறார்கள் என்று வியக்கிறீர்களா? ஆய்வு ஒன்றில், ஆண்கள் தங்கள் வாழ்நாளில் குறைந்தது ஒரு வருடத்தை பெண்களைப் பார்க்கவே செலவிடுவதாக தெரிய வந்துள்ளது.

உண்மை #4
மொட்டை அடித்திருக்கும் ஆண்கள் வலிமையானவராகவும், உயரமானவராகவும் காட்சியளிப்பர். அதேப் போல் தாடி வைத்துள்ள ஆண்கள் ஆண்மையுடனும், சக்தி வாய்ந்தவர்கள் போன்றும் காணப்படுவராம்.

உண்மை #5
பொதுவாக ஆண்கள் பெண்களை விட வேகமாக நடப்பார்கள். ஆனால் பெண்களுடன் சேர்ந்து நடப்பதாக இருந்தால், மெதுவாகத் தான் நடப்பார்களாம்.

உண்மை #6
ஆண்கள் தங்கள் வாழ்நாளில் காதலர் தினத்தைக் கொண்டாட செலவழிக்கும் பணம் மட்டும் திருமண நாளன்று செலவழிக்கும் பணத்தை விட அதிகமாக இருக்கும் என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

உண்மை #7
காதல் ஒரு அழகிற உணர்வு. பொதுவாக காதலில் விழுந்த ஆண்களின் உற்பத்தி திறன் குறைவாகவே இருக்குமாம்.



Click it and Unblock the Notifications
