லவ் மேக்கிங்கில் எந்தெந்த ராசி ஆண்கள், என்னென்ன விரும்புவார்கள்?

Posted By:
Subscribe to Boldsky

அனைவருக்கும் திருமணம் ஒரே மாதிரி நடந்தாலும். எல்லாரும் ஒரே மாதிரியான இல்லற வாழ்க்கை தான் வாழ்கிறார்களா? என்றால், இல்லை. இதற்கு காரணம் அவரவர் மனோபக்குவம், அவரவர் குணாதிசயங்கள் மற்றும் சூழ்நிலைகளை கையாளும் திறன்.

குணாதிசயங்கள் என்று வைத்து பார்க்கும் போது. ஒவ்வொரு ராசிக் காரர்களின் பொது குணாதிசயங்கள் என்று சிலவன இருக்கின்றன. ஏறத்தாழ இந்த ராசிக் காரர் இப்படி தான் இருப்பார், இந்தந்த செயலில் இப்படி தான் ரியாக்ட் செய்வார் என அறியப்படுகிறது.

வேலை, படிப்பு, திறன்பாடு, காதல், இல்லறம் என இது வாழ்வின் அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும். இந்த வகையில் இராசியை வைத்து தாம்பத்திய வாழ்க்கையில் ஒரு ஆண் எதை அதிகம் விரும்புவான் என்றும் அறிய முடியுமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

தாம்பத்திய உறவில் பல வகைகளில் ஈடுபட விரும்பும் நபர்களாக இருப்பார்கள். இவர்களது எண்ணங்கள் இதில் மேலோங்கி காணப்படும். இந்த செயலில் இவர்களது முனைப்பும், ஈடுபாடும் அதிகமாக காணப்படும்.

எந்தெந்த ராசியுடன்...

நீண்ட நாள் உறவு: சிம்மம், துலாம், தனுசு, கும்பம், ஜெமினி, மேஷம்.

குறுகிய கால உறவு: ரிஷபம், விருச்சிகம்.

ரிஷபம்

ரிஷபம்

தங்களுக்கு சௌகரியமாக இருந்தால் மட்டுமே உறவில் ஈடுபடுவர்கள். மிகவும் அன்பானவர்கள். வெளிப்படையான குணம் கொண்ட இவர்கள். இதில் அதிக நாட்டம் கொண்டிருக்க மாட்டார்கள். அதிக ரொமான்ஸ் எதிர்பார்க்கும் இவர்கள், குறுகிய கால உறவை விட நீண்ட கால உறவிலேயே இணைய விரும்புவார்கள்.

எந்தெந்த ராசியுடன்...

நீண்ட நாள் உறவு: மீனம், மகர, மிதுனம், கடகம்.

குறுகிய கால உறவு: தனுசு, மேஷம்.

மிதுனம்

மிதுனம்

இந்த விதத்தில் இவர்கள் எப்படி என அறிவது மிகவும் கடினம். இவர்களது மூட் மாறிக் கொண்டே இருக்கும். கற்பனை மற்றும் கேலி நிறைந்த நபர்கள். மிக எளிதாக ஒரு நபர் மீது காதலில் விளுந்திடுவார்கள். இவர்கள் எப்போதுமே உறவில் இணைய விரும்பும் நபர்கள் அல்ல. ஆனால், டச்சிலேயே இருப்பார்கள்.

எந்தெந்த ராசியுடன்...

நீண்ட நாள் உறவு: கும்பம், துலாம், மேஷம், சிம்மம்.

குறுகிய கால உறவு: தனுசு, விருச்சிகம்.

கடகம்

கடகம்

மிக கனிவாக நடந்துக் கொள்ளும் குணம் கொண்டவர்கள். இந்த விஷயத்தில் பணிந்து போவார்கள். தங்கள் துணைக்கு முழு சுதந்திரம் அளிப்பார்கள். தாம்பத்தியத்தில் ஆதிக்கம் செலுத்த மாட்டார்கள். ஆனால், கொஞ்சி குலாவுவதில் கில்லாடியாக இருப்பார்கள்.

எந்தெந்த ராசியுடன்...

நீண்ட நாள் உறவு: மீனம், மிதுனம், விருச்சிகம், ரிஷபம்.

குறுகிய கால உறவு: தனுசு, கும்பம், மகரம்.

சிம்மம்

சிம்மம்

எப்போதும் ஆச்சரியப்படுத்த தவற மாட்டார்கள். தங்கள் துணையை மகிழ்விப்பதில் கெட்டிக்காரர்கள். விருப்பத்திற்கு ஏற்ப நடந்துக் கொள்ளும் நபர்கள்.

எந்தெந்த ராசியுடன்...

நீண்ட நாள் உறவு: துலாம், மிதுனம், தனுசு, மேஷம், கும்பம்.

குறுகிய கால உறவு: கன்னி, மகர, விருச்சிகம்.

கன்னி

கன்னி

தங்கள் வாழ்க்கையை ஆக்ரோஷமாக எடுத்துக் கொள்ளும் நபர்கள் இவர்கள். கன்னி ராசிக்காரர்களில் மட்டும் இரண்டு வகையினர் இருக்கிறார்கள். ஒருவகையினர் மனரீதியாக தாம்பத்தியத்தை ஏற்றுக் கொள்பவர்கள். இன்னொரு வகையினர் தங்கள் வெறுப்பை வெளிப்படுத்துபவர்கள். கோபித்த பிறகு, இவர்களாக பேச வரமாட்டார்கள். துணையே இவர்களை சாந்தப்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.

எந்தெந்த ராசியுடன்...

நீண்ட நாள் உறவு: ரிஷபம், மகர, கடகம், மீனம், விருச்சிகம்.

குறுகிய கால உறவு: மிதுனம், கும்பம், சிம்மம், மேஷம்.

துலாம்

துலாம்

ரொமாண்டிக், செண்டிமெண்டல், பணிந்து போகும் தன்மை கொண்டவர்கள். காதல் உறவில் தங்களை அதிகம் அவர்களாக சம்மந்தப்படுத்திக் கொள்ளும் திறன் கொண்டவர்கள். சுவாசிக்காமல் எப்படி இருக்க முடியாதோ, அப்படி இவர்களால் காதலிக்காமல் இருக்க முடியாது.

எந்தெந்த ராசியுடன்...

நீண்ட நாள் உறவு: மேஷம், மிதுனம், தனுசு, மேஷம், கும்பம், சிம்மம், மீனம், விருச்சிகம், மகரம்.

குறுகிய கால உறவு: விருச்சிகம், மேஷம், தனுசு, மீனம்.

விருச்சிகம்

விருச்சிகம்

தாம்பத்தியத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் இவர்கள். போதுமென்ற மனம் இருக்காது. திகட்ட, திகட்ட வேண்டும் என எண்ணுவார்கள். தாம்பத்திய உறவில் தங்கள் ஆதிக்கத்தை காண்பிப்பார்கள். இந்த வகையில் எளிதாக தனது எதிர்பாலினத்தை ஈர்த்துவிடுவார்கள். ஆனால், அவர்களுக்கு இவர்கள் எப்போதும் ஒரு மர்மமாகவே இருப்பார்கள்.

எந்தெந்த ராசியுடன்...

நீண்ட நாள் உறவு: மீனம், புற்றுநோய், மகர, கன்னி, டாரஸ்.

குறுகிய கால உறவு: மேஷம், விருச்சிகம்.

தனுசு

தனுசு

ஆச்சரியங்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளவர்கள். தனிச்சையாக நடக்கும் நபர்கள். நொடியில் இவர்கள் மூட் மாறிவிடும். எங்கே, எப்போது, எந்த தருணத்தில் இவர்களது மனநிலை மாறும் என அறிந்துக் கொள்ள முடியாது.

எந்தெந்த ராசியுடன்...

நீண்ட நாள் உறவு: துலாம், சிம்ம, மிதுனம், மேஷம், தனுசு, கும்பம்.

குறுகிய கால உறவு: ரிஷபம், கடகம்.

மகரம்

மகரம்

எதையும் பிளான் பண்ணி செய்யும் நபர்கள். இது தாம்பத்திய உறவிற்கும் பொருந்தும். உடலுறவு என்றவுடன் டமால், டுமீல் என பறக்காமல். அதை மற்ற செயல்கள் போல நிதானமாக பார்க்கும் பக்குவம் கொண்ட நபர்கள்.

எந்தெந்த ராசியுடன்...

நீண்ட நாள் உறவு: மீனா, விருச்சிகம், கன்னி, ரிஷபம், கடகம்.

குறுகிய கால உறவு: தனுசு, துலாம்.

கும்பம்

கும்பம்

பெரிதாக தங்கள் ஈடுபாட்டை காட்ட மாட்டார்கள். இவர்கள் அதிகம் நட்பு பாராட்டும் நபர்கள். காதல் என்று வந்துவிட்டால் அதில் மிகவும் நேர்மையாக நடந்துக் கொள்ள வேண்டும் என கருதுவார்கள். இவர்கள் எந்த காரணம் கொண்ட காதலில் விழுகிறார்கள் என்று கணிக்க முடியாது. இவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பதை அறிவது எளிது.

எந்தெந்த ராசியுடன்...

நீண்ட நாள் உறவு: மிதுனம், துலாம், சிம்ம, தனுசு, மேஷம்.

குறுகிய கால உறவு: கடகம்.

மீனம்

மீனம்

முத்தத்திற்கு பெயர்போனவர்களாக இருப்பார்கள். தனது துணையை பிரிந்து இவர்களால் இருக்க முடியாது. பொது இடங்களாக இருந்தாலும் கைகளை பிடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. மிக கனிவான கள்வர்கள். ஒரு கனவு போன்ற ரொமாண்டிக்கான வாழ்வை வாழ விரும்பும் நபர்கள். தங்கள் துணையை எப்போதும் இனிமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு அதிகமாகவே இருக்கும்.

எந்தெந்த ராசியுடன்...

நீண்ட நாள் உறவு: விருச்சிகம், கடகம், மகர, ரிஷபம், கன்னி.

குறுகிய கால உறவு: கடகம், சிம்மம், துலாம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Men From Each Sun Sign Are Like in Bed?

What Men From Each Sun Sign Are Like in Bed?