பாலியல் சிகிச்சையாளர்கள் கூறும் செக்சுவல் அடிக்ஷன் பற்றி ஆண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!

Posted By:
Subscribe to Boldsky

இது வரை எந்த ஒரு ஆய்விலும் தெளிவாக இது செக்சுவல் அடிக்ஷன், இது பார்ன் அடிக்ஷன், இவற்றால் மனநல / மனநிலை பாதிப்புகள் உண்டாகின்றன என கூறப்படவில்லை. அதே போல செக்சுவல் அடிக்ஷனுக்கு இது தான் மருத்துவம், இது தான் தகுந்த மருந்து என்றும் எதுவும் இல்லை.

ஒவ்வொரு நபரின் ஆசை, எண்ணங்கள், குணாதிசயங்கள் சார்ந்து இந்த செக்சுவல் அடிக்ஷன் மாறுபடுகிறது. இது மன ரீதியான மாற்றம் என்பதால் இதற்கு பொதுவான மருந்து, மருத்துவம் என நிலையாக எதுவும் இல்லை. ஆனால், ஒருவரது செக்சுவல் அடிக்ஷன் நிலை, முறை, செயல்பாடுகளை வைத்து அவர் எப்படி பாதிக்கப்பட்டுள்ளார் என அறியலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முன்னேற்றம் - பரிணாமம்!

முன்னேற்றம் - பரிணாமம்!

ஒருசிலர் ஆரம்பத்தில் ஒரு பீர் தான் குடிப்பார்கள். போக, போக பார்ட்டிகளில் அது நான்கு, ஐந்து என அதிகரிக்கும். இது ஒரு வகையான செக்சுவல் அடிக்ஷன். வேறு சிலர் வெவ்வேறு வகையான ஆல்கஹால் வகைகளை அருந்தி பார்க்க வேண்டும் என விரும்புவர்கள். அதாவது புதிய வகைகளில் உடலுறவில் ஈடுபட விரும்புபவர்கள்.

இதில், அதிக எண்ணிக்கையில் உடலுறவில் ஈடுபட விரும்புபவர்களின் நிலை தான் மோசமானது என பாலியல் சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர்.

கட்டுப்பாடு இழப்பு - கட்டுப்பாடு இன்றி!

கட்டுப்பாடு இழப்பு - கட்டுப்பாடு இன்றி!

செக்சுவல் ரீதியாக கட்டுப்பாடு இழப்பவர்கள் உடலுறவை அனுபவித்து கொண்டே இருக்க வேண்டும் என கருபவர்கள். கட்டுப்பாடு இல்லாமல் இருப்பவர்கள் புதியதாக எப்படி எல்லாம் உடலுறவில் ஈடுபடலாம், இதை ஏன் இப்படி முயற்சிக்க கூடாது என உடலுறவில் ஈடுபட புதுமைகளை ஆழமாக ஆராய்ச்சி செய்பவர்கள்.

தோல்வி - நிறுத்த முடியாமல் போவது!

தோல்வி - நிறுத்த முடியாமல் போவது!

செக்சுவல் அடிக்ஷன் கொண்டுள்ள சிலர் அவர்கள் சரியாக ஈடுபட முடியாமல் தோல்வியுற்றாலும். மீண்டும், மீண்டும் கடுமையாக முயற்சி செய்துக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு சண்டையிடும் குணம், கோபம், தீய குணாதிசயங்கள் போன்ற எதிர்மறை தாக்கம் உண்டாகும். இன்னும் சிலர் மத , குடும்ப நிலை, சமூக நிலை போன்றவைற்றை காரணங்களால் மறுக்கவும் முடியாமல், நிறுத்தவும் முடியாமல் மன அழுத்தம் கொள்பவர்கள்.

இவர்கள் மனதுக்குள் அழுத்தம் கொண்டு அதை மனைவியின் மீது காட்டும் நிலை ஏற்படலாம்.

எது நோயியல்!

எது நோயியல்!

செக்சுவல் அடிக்ஷனை இரண்டு வகையாக பிரித்து பார்க்கும் பாலியல் சிகிச்சையாளர்கள் முன்னேற்றம், கட்டுப்பாடு இழப்பு, தோல்வி போன்ற பிரிவுகளுக்குள் வருபவர்கள் தான் நோயியல் சார்ந்தவர்கள். இவர்களது அடிக்ஷன் மன ரீதியாக பல பாதிப்புகளை உண்டாக்கலாம் என கூறுகின்றனர்.

எப்படி சரி செய்வது?

எப்படி சரி செய்வது?

நாம் மேலே கூறியது போலவே, இது ஒவ்வொரு தனி நபர் சார்ந்தும், அவரது எண்ணங்கள், செயல்பாடுகள் குறித்தும் வேறுபாடும்.

எனவே, ஒரு வேலை செக்சுவல் அடிக்ஷனால் தனது வாழ்வில் தீய தாக்கங்கள் ஏற்படுகின்றது, இதனால் கட்டுப்பாடு இழந்து காணப்படுகிறேன் என்பவர்கள் சரியான பாலியல் சிகிச்சை அளிக்கும் மருத்துவரை கண்டு பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things You Should Know About Sexual Addiction

Things You Should Know About Sexual Addiction
Story first published: Wednesday, January 4, 2017, 14:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter