சண்டே நீங்க இதெல்லாம் பண்ணா... உங்க ஒய்ப் வாரம் முழுக்க சந்தோசமா இருப்பாங்க!

Posted By:
Subscribe to Boldsky

பொண்டாட்டியை சிடுசிடுன்னு வைத்துக் கொள்ள எந்த ஆணும் விரும்புவதில்லை.

எல்லாருமே தங்கள் மனைவி முகம் எப்போதும், இப்போது பூத்த மலர் போல தான் வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். ஆனால், அதற்காக நாம் என்ன செய்கிறோம் என்பதில் தான் ரிசல்ட் இருக்கிறது.

100 கலோரிகள் கரைக்க வேண்டும் என்றால் கூட, 1000 மீட்டர் தூரம் ஓட வேண்டி இருக்கும் பட்சத்தில். மனைவி 24x7 வாடாமல் இருக்க வேண்டும் என்றால் நீங்க என்னவெல்லாம் செய்யனும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

காலையில் வாக்கிங் சென்று வீடும் திரும்பும் போது வாரத்திற்கு வீட்டுக்கு தேவையான எல்லா காய்கறி, பழங்களும் வாங்கி வர வேண்டும். (நான்தா வாக்கிங்கே போக மாட்டேனே என்று நழுவ பார்க்க கூடாது)

#2

#2

சண்டே மட்டுமாவது ஸ்பெஷலாக இல்லை எனிலும், மனைவிக்காக ஏதாவது சிறிதாகவாவது சமைத்துக் கொடுத்து அசத்தலாம். (சமைக்க தெரியாதுன்னா விட்டுடுங்க... அப்பறம் வருஷம் முழுக்க அதையே சொல்லி மூஞ்சிய தூக்கி வெச்சுபாங்க)

#3

#3

வாரம் முழுக்க, வேலை, வேலை என்று கட்டிக் கொண்டு அழும் நீங்கள், இன்று முழுவதும் குடும்பத்தை கூட்டிக் கொண்டு எங்கேனும் வெளியே சென்று வரலாம்.

இந்த ஒருநாள் நினைவுகளை வாரம் முழுக்க அக்கம்பக்கத்து பெண்கள், வெளியூரில் இருக்கும் சொந்தம், தோழிகளிடம் கூறி, கூறி மகிழுமாம் பெண் மனம்.

#4

#4

உங்க மனைவிய கூட்டிட்டு அப்படியே காலையில கோவிலுக்கு கூட்டிட்டு போயிட்டு, அவங்க கை பிடிச்சுக்கிட்டு கொஞ்ச தூரம் நடந்து போயிட்டு வந்தீங்கன்னா, உங்க ரெண்டு பேர் மத்தியில இருக்க பிரச்சன மட்டுமில்ல, வீட்டுல இருக்க மொத்த பிரச்சனையும் தீர்ந்திடும். (சாயங்காலம் கூட போலாம் பாஸ்)

#5

#5

உங்க மனைவி சொல்லாமே, வீட்ட சுத்தப்படுத்தும் வீட்டு மேலாண்மை வேலைகளில் இறங்கு பின்னி பெடல் எடுத்தா... மனைவி மனசுல நீங்க எங்கயோ ஒசந்த இடத்துக்கு போயிடுவீங்க.

#6

#6

உங்க மனைவிக்கு பிடித்த எதாவது பொருளை ஆன்லைனில் ஆர்டர் செய்தும், அது சண்டேவில் டெலிவரி ஆகும்படி செய்து அவர்களை அசத்தலாம்.

இது வாராவாரம் முடியாவிட்டாலும், மாதத்திற்கு ஒருமுறையாவது செய்யலாம். (ஆனா, கண்டிப்பா ரிசல்ட் தரும் டிப்ஸ் இது. பரிசை தவிர, வேறு எதை வைத்து மனைவியை கவிழ்க்க முடியும்.)

#7

#7

நீங்க என்ன தான் பிடித்ததை எல்லாம் செய்தாலும், மனைவிக்கு பிடிக்காத ஒரு விசயத்தை செய்து விட்டால் கூட, அது அந்த வாரம் முழுக்க அவர்கள் தீயாய் அனல் கக்க செய்யும். (சோ பீ கேர் புல்!)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

These Seven Sunday Things Will Increase Love in Between Couples!

These Seven Sunday Things Will Increase Love in Between Couples!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter