பலரும் அறியாத கமல் - சரிகாவின் இரகசிய காதல் கதை!

Posted By:
Subscribe to Boldsky

நேசித்த நபருக்காக... தான் வெற்றிகரமாக திகழ்ந்து கொண்டிருந்த துறையை விட்டு வந்தவர். குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே பெரும் வெற்றியை கண்டவர். அப்படி ஒரு குழந்தை நட்சத்திரத்தை இந்திய திரையுலகம் அதன் முன் கண்டதில்லை. அவரது காதலர் தென்னிந்தியாவின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்து பெற்றிருந்த நடிகர்.

இது சரிகா மற்றும் கமலின் இடையே மலர்ந்து, உதிர்ந்த காதல் கதை.

சிறு வயதில் இருந்து கேமராவுடன் கஷ்டத்தை மட்டுமே கண்டு வாழ்ந்து வந்த சரிகாவின் வாழ்க்கை எப்படி துவங்கியது. அவரது தாயிடம் இருந்து பெற்ற ஏமாற்றம் என்ன, அதன் பின் அவரை கடந்து சென்று இரண்டு காதல் கதைகள்... இப்போது அவர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடும்ப சூழல்!

குடும்ப சூழல்!

வளர்ந்த சூழல் என்று காண்கையில் கமல், சரிகா இருவரும் ஒரே மாதிரியான சூழலில் வளர்ந்தவர்கள் தான். ஆனால், பெற்றோர் வளர்ப்பு தான் வெவ்வேறு விதமாக அமைந்திருந்தது. கமலை போலவே சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அசத்தியவர் சரிகா.

தந்தையை பிரிந்து தனியாக தன்னை வளர்த்து வரும் தாய்க்கு தனது நடிப்பின் மூலம் நான்கு வயதில் இருந்து வருமானம் ஈட்டிக் கொடுத்தவர் சரிகா. அந்த சிறு வயதிலேயே லைட்டிங், மேரா, மேக்கப் என அனைத்தையும் கண்டு வளர்ந்தவர். சரிகாவின் நடிப்பு மூலமாக கிடைத்த பணம் தான் அப்போது அவர்களது வீட்டு பொருளாதாரத்தின் பெரும் பங்காக இருந்தது.

கொடுமை!

கொடுமை!

சரிகா தனது தாயால் சிறுவயதில் இருந்தே உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நிறைய கொடுமைகளை அனுபவித்துலாளர் என கூறப்படுகிறது. பல சமயங்களில் இவர்கள் இருவர் மத்தியில் ஏற்படும் வாக்குவாதம் காரணமாக சரிகா காயம் அடைந்துள்ளார்.

இதில் பெரும் கொடுமை என்னவெனில், நடிப்பில் சுட்டியாக இருந்த சரிகாவால், தான் விரும்பிய படிப்பை பெருமளவு கெட்டியாக பிடித்துக் கொள்ள முடியவில்லை. இவர் பள்ளிக்கு செல்லவில்லை. ஒரு டியூஷன் டீச்சர் வீட்டுக்கு வந்த சரிகாவிற்கு பாடம் எடுத்து செல்வார்.

படிப்பு!

படிப்பு!

சரிகாவின் பொதுபோக்கு, பேரார்வங்களில் ஒன்று படிப்பது. புத்தகங்கள் படிப்பதில் அதிக ஈடுபாடு காண்பிப்பார் சரிகா. ஒருமுறை புத்தகங்கள் வாங்க 1500 ரூபாய் (படப்பிடிப்பு தளத்தில் தயாரிப்பாளார் கொடுத்த பணம். இது அவரது தாய்க்கு தெரியாது.) சரிகா செலவு செய்ததற்காக தனது தாயால் வலிமையாக தாக்கப்பட்டுள்ளார்.

தப்பி ஓட்டம்!

தப்பி ஓட்டம்!

இந்த நிகழ்வுக்கு பிறகு தான் தனது சம்பாத்தியத்தில் இருந்து மும்பையில் ஐந்து வீடுகள் வாங்கியுள்ளார் என்றும், அதில் ஒன்று கூட சரிகாவின் பெயரில் இல்லை என்பதும். காரில் புறப்பட்டு சென்ற சரிகா ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நண்பர்களின் வீட்டில் தங்கி, ஆறு நாட்கள் காரிலேயே பயணித்துள்ளார்.

கமல்...

கமல்...

இந்தப்புறம் கமலின் வாழ்க்கை மிகவும் வித்தியாசமானது. தனது தந்தையால் மிகவும் ஊக்கவிக்கப்பட்ட சிறுவன் கமல். தனது தாயுடன் சிறுவயதில் பெரிதாக நேரம் செலவழிக்கவில்லை என வருத்தமும் தெரிவித்துள்ளார்.

சரிகா - கபில் தேவ்!

சரிகா - கபில் தேவ்!

சண்டிகரில் இருந்த போது சரிகாவிற்கும், கபில் தவிர்க்கும் முடிச்சு போட்டு செய்திகள் பல வெளியாகியிருந்தன. கபில் தேவை சரிகா காதலித்ததாகவும், அவருக்கு வேறு காதலி இருந்ததால் அவரை விட்டு விலகிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

சூப்பர்ஸ்டார்!

சூப்பர்ஸ்டார்!

கமல் அப்போது பாலிவுட்டில் கால் பாதிக்கும் முன்னரே, தென்னிந்தியாவில் பெரும் நட்சத்திரமாக வளர்ந்து கொண்டிருந்தார். 80-களில் பல வெற்றி படங்களை கொடுத்திருந்தார் கமல் அப்போது. அந்த சமயத்தில் கமல் ஏற்கனவே வாணியை திருமணம் செய்திருந்தார். வாணி ஒரு சிறந்த நடன கலைஞர்.

விவாகரத்து!

விவாகரத்து!

80-களிலேயே கமல் மற்றும் சரிகா காதலித்து வருகிறார்கள் என கிசுகிசுக்கள் பரவின. அது உண்மை என்றும் தெரிய வந்தது. இந்த காதல் முந்தைய திருமணத்தை விவாகரத்தில் கொண்டு சேர்த்தது.

தன் வாழ்வில் வலிகளை மட்டுமே கண்டு வந்த சரிகாவின் வாழ்வில் கமலின் காதலும், உறவும் வாழ்வின் மற்றொரு பக்கத்தை காண்பித்தது. அதன் பிறகு ஓர் அழகான வாழ்வை வாழ துவங்கினார் சரிகா.

குழந்தை!

குழந்தை!

கமல் - சரிகா திருமணம் செய்துக் கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த சமயத்தில் தான் இவர்களுக்கு முதல் பெண் குழந்தை (ஸ்ருதி) பிறந்தார். அப்போது தான் திருமணத்தை பற்றி இருவரும் சிந்திக்க துவங்கினர். இந்திய சமூகத்தில் திருமணம் செய்துக் கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்வது ஏற்புடையது இல்லை.

இருவரும் திருமணம் செய்துக் கொல்வதற்கு முன்னரே இரண்டாவது குழந்தை அக்ஷாராவும் பிறந்தார். இரண்டு குழந்தைகள் பிறந்து பிறகு 1988ல் இருவரும் சிவாஜி முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்டனர். 28வயதில் தனது காதலுக்காக விருப்பமான துறையை விட்டு விலகி வந்த சரிகா, 43 வயதில் (2004) கமலுடன் விவாகரத்து பெற்றார்.

தற்கொலை முயற்சி!

தற்கொலை முயற்சி!

திருமணம் என்பது திரைப்படம் அல்ல, படம் ஃபிளாப் ஆகிவிட்டால் மறப்பதற்கு. இது மிகுந்த வலி கொண்டது என கமல் ஒருமுறை தனது பேட்டியில் கூறியிருந்தார். விவாகரத்து பெறவிருக்கும் போது சரிகா தற்கொலைக்கு முயற்சித்தார் என கூறப்படுகிறது. கமலின் வாழ்வில் வேறொரு பெண் இருக்கிறார் என்பதை அறிந்து இந்த முடிவுக்கு வந்தார் என சில தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.

தற்கொலை முயற்சியின் போது பலத்தை காயங்கள் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் மூன்று மாதங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார் சரிகா.

பாதிப்பு!

பாதிப்பு!

கணவன் - மனைவி விவாகரத்து என்பது அந்த இருவரை பாதிப்பதை காட்டிலும். அவர்களது பிள்ளைகளை பாதிப்பது தான் அதிகம். தம்பதியின் பிரிவிற்கு பிறகு அவர்களது வாழ்க்கை சூழலே முற்றிலுமாக மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

இந்த சமூகம் அவர்கள் மீது திணிக்கும் பார்வையானது சாதாரண குழந்தைகள், பிரபலங்களின் குழந்தைகள் என பிரித்து பார்ப்பது எல்லாம் இல்லை.

திருமணம் செய்திருக்க கூடாது...

திருமணம் செய்திருக்க கூடாது...

கமல் பிறகு வெளிப்படையாக தான் திருமணம் செய்திருக்க கூடாது என ஒப்புக் கொண்டார். இந்த சமூகத்தின் காரணத்தால் தான் நான் திருமணம் செய்துக் கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகும் கூட நானும், சரிகாவும் ஒரு ஹோட்டலில் ரூம் புக் செய்து தங்கும் நிலை இருக்கவில்லை. என கூறியிருந்தார்.

இப்போது!

இப்போது!

சரிகாவின் மகள்களான ஸ்ருதி மற்றும் அக்ஷரா இருவரும் திரை துறையில் கால் பதித்துவிட்டனர். கமல் எப்போதும் போல நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது அரசியல் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். சரிகா, மும்பையில் தனது அப்பார்ட்மெண்டில் எப்போதும் போல வசித்து வருகிறார்.

காதல் எப்போதுமே தோல்வி அடைவதில்லை, காதலர்கள் தான் தோல்வி அடைகிறார்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Unknown Love Story of Sarika and Kamal Haasan!

The Unknown Love Story of Sarika and Kamal Haasan!