ஆண்களை மூட் அவுட் செய்ய பெண்கள் கைவசம் வைத்திருக்கும் 6 மந்திரங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

இரகசியங்கள் காப்பது, முக பாவனையில் பேசுவது, ஒரு வார்த்தைக்குள் ஆயிரம் அர்த்தங்கள் வைத்திருப்பது என பெண்களின் பேச்சிலும், குறுஞ்செய்தியிலும் நிறைய மர்மங்கள், இரகசியங்கள் இருக்கும்.

"சரி போயிட்டு வா.., எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல..." என்று பதில் வரும். நீங்கள் நண்பருடன் வெளியே சென்று வீடு திரும்பிய பிறகு, "அப்போ என்னவிட, உன் பிரண்ட்ஸ் தான் முக்கியமா போயிட்டாங்கல?" என கேட்பார்கள்.

பயணத்தின் மகிழ்ச்சியை ஒற்றை வாக்கியத்தில் குழித்தோண்டி புதைத்துவிடுவார்கள். இப்படி பெண்கள் ஆண்களின் மகிழ்ச்சியை கொல்வதற்கு, மூட் அவுட் ஆக்குவதற்கு என வைத்திருக்கும் சில வாக்கியங்கள் பற்றி தான் இங்கே காணவுள்ளோம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹ்ம்ம்....!

ஹ்ம்ம்....!

இந்த வார்த்தைக்கு இன்று வரையிலும் பொருளில்லை. ஒரு ரியாக்ஷனாக மட்டுமே கண்டு வருகிறோம். ஆனால், பெண்கள் சொல்லும் ஹ்ம்ம்-ல் பல பொருள் ஒளிந்திருக்கும். அதை கண்டுபிடிக்க கடவுளாலும் முடியாது. காதலியின் ஹ்ம்ம்..., மனைவியின் ஹ்ம்ம்.. என பல்வேறு ஹ்ம்ம்-களும் இருக்கிறது என்பது வேறு கதை.

ஒண்ணுமில்ல...

ஒண்ணுமில்ல...

எனக்கு ஒண்ணுமில்லையே என உங்கள் காதலி கூறினால். தயவு செய்து மன்றாடியாவது என்ன பிரச்சனை அவர்களுக்கு என கேட்டறிந்த பிறகு இடத்தை விட்டு நகருங்கள். அந்த "ஒண்ணுமில்லை" என்ற வார்த்தையில் எத்தனை ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் என அறிந்துக் கொள்ள முடியாது.

இன்னுமா?

இன்னுமா?

மேக்கப் செய்வதற்கும், பல ஆடை கழற்றி மாற்றுவதற்கும் பல மணிநேரம் எடுத்துக் கொள்வார்கள். என்றாவது ஒரு நாள் நாம் ஐந்து நிமிடம் லேட்டாகிவிட்டால், ஏன் இப்படி பண்றீங்க... உங்களுக்கு ஒரு பன்க்சுவாலிட்டியே இல்ல என குமுறும் போதும நமது இதயத்தில் எரிமலை வெடிக்க துவங்கும்.

இந்த ட்ரெஸ் ஓகேவா?

இந்த ட்ரெஸ் ஓகேவா?

நமக்கு ஒரு ஜீன்ஸ் பேன்ட் அல்லது டீ-ஷர்ட் எடுக்க வேண்டுமானால் ஐந்து நிமிடம் பொறுமை காக்க மாட்டார்கள். ஆனால், அவர்களுக்கு புடவை எடுக்கும் போது பல மணிநேரம் செய்வார்கள்.

அட, இதுக்கூட பரவாயில்லை மை லார்ட்... நம்மிடம், "இதுல எது நல்லா இருக்கு..?" என்று கேட்டுவிட்டு, நாம் சொல்வதை ரிஜக்ட் செய்வதெல்லாம் மனிதன்மையற்ற செயலல்லவா...

ஃபைன்!

ஃபைன்!

பெண்கள் சொல்லும் ஃபைனில் 99% ஃபைன், அவர்கள் ஃபைனாக இல்லை என்பதை தான் குறிக்கிறது. "எதுக்கு மா சொல்ற தெளிவா சொல்லு, எனக்கு புரியல" என கெஞ்சி கேட்டாலும், ஒண்ணுமில்ல ஃபைன் என கூறி முற்றிப்புள்ளி வைத்துவிடுவார்கள். ஆனால், அடுத்து வரவிருக்கும் சண்டைக்கு அதுதான் துவக்க புள்ளியாக இருக்கும்.

மேக்கப் ஓவரா இருக்கா?

மேக்கப் ஓவரா இருக்கா?

கம்மியா இருக்கு என நாம் கூற மாட்டோம். மேக்கப் அதிகமாக இருக்கிறது என்றால் கோவித்துக் கொள்வார்கள். இல்லமா கரக்டா இருக்கு அழகா இருக்க என்று சொன்னலும்... அப்போ மேக்கப் பண்றதுனால தான் நான் அழகா இருக்கேன்னு சொல்றியா என்பார்கள். (அம்மா தாயி நாங்க என்ன தான் சொல்றது.) சூப்பர் என செய்கை மட்டும் செய்துவிட்டு அமைதியாக இருந்துக் கொள்ள வேண்டியது தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Six Texts That Turn Every Man Off!

Six Texts That Turn Every Man Off!