எல்லாரும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டிய உடலுறவு சார்ந்த 8 உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

தாம்பத்தியம் என்பது கணவன் - மனைவி சார்ந்த அந்தரங்க விஷயம். ஒருசில விஷயங்களில் தாம்பத்தியம் சார்ந்து மனைவியின் கருத்தோ, உணர்வோ குறித்து கணவனும் ; கணவனின் கருத்தோ, உணர்வு குறித்து மனைவியும் அறியாதிருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

இங்கே, தாம்பத்தியம் சார்ந்தே சந்தேகங்கள் அல்லது கணவன், மனைவி தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள் (ஆய்வு மூலமாக அறியப்பட்ட) சியல் கூறப்பட்டுள்ளன....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேகல் (Kegel) பயிற்சி!

கேகல் (Kegel) பயிற்சி!

பொதுவாக கேகல் பயிற்சியானது பெண்களுக்கானது மட்டும் என சிலர் கருதுகின்றனர். இது ஆண்களுக்கும் இடுப்பு பகுதியில் வலிமை அதிகரிக்க, உணர்சிகளை கட்டுப்படுத்த, சிறந்து செயல்பட உதவுகிறது.

புகை, பகை!

புகை, பகை!

புகைப்பதால் தாம்பத்திய வாழ்க்கை சீர்கெடும் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், அதே சமயத்தில் புகையை கைவிட்ட பிறகு அவர்களிடம் ஆரோக்கியமான விறைப்பு தென்படுகிறது எனவும் சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

பால்வினை நோய்!

பால்வினை நோய்!

பொதுவாக நீங்கள் மருத்துவரிடம் சென்று பொது பரிசோதனை செய்து வந்தால், அதில் பால்வினை தாக்கம் கண்டுபிடித்துவிடலாம் என எண்ண வேண்டாம்.

உங்களுக்கு பால்வினை தொற்று இருந்தால் அதை நீங்கள் அவரிடம் நேரடியாக கூறி, அதற்கான தனி பரிசோதனை செய்தால் மட்டுமே பால்வினை தொற்று இருக்கிறதா? இல்லையா? என அறிய முடியும்.

மது, மாது!

மது, மாது!

சிலர் குடித்துவிட்டு உடலுறவில் ஈடுபடுவார்கள். இதை வேடிக்கையாக செய்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், மது உங்கள் பிறப்புறுப்புக்கு நல்லதல்ல. அது உங்களை முழுமையாக செயல்பட விடாது.

பொய்!

பொய்!

பெண்கள் சில சமயம் தாங்கள் உறவில் உச்சம் கண்டது போல நடிப்பார்கள் என பரவலாக கூறப்படுகிறது. ஓர் ஆய்வில் அமெரிக்காவில் மட்டுமே 30% ஆண்கள் தங்கள் உறவில் முழு திருப்தி அடைந்தது போல நடிக்கிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

மேலும், உலகம் முழுக்கிலும் 6% ஆண்கள் உறவில் உச்சம் காண்பது போல நடிக்க தான் செய்கிறார்கள் என அறியப்பட்டுள்ளது. இதில் பெண்கள் 19% நடிக்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

உணர்வுகள்!

உணர்வுகள்!

சில சமயங்களில் தங்கள் துணை வேதனைப்படக் கூடாது என்பதற்காகவும் உறவில் உச்சம் காண்பது போல நடிப்பதாக கூறுகின்றனர். இது, துணையை திருப்திப்படுத்த என கூறுகிறார்கள்.

பயிற்சி!

பயிற்சி!

"Coregasms" ஆண், பெண் மத்தியில் உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படும் உச்ச உணர்வாகும். இது 10% பேரிடம் தென்படுகிறது. பெண்களுக்கு யோகா மற்றும் உட்கார்ந்து செய்யும் பயிற்சிகளின் போதும், ஆண்களுக்கு புல்லப்ஸ், கிளைம்பிங் பயிற்சிகள் செய்யும் போது தென்படுகிறது.

வாய்வழி செக்ஸ்!

வாய்வழி செக்ஸ்!

வாய்வழி செக்ஸில் ஈடுபடும் போது ஆண்களின் பிறப்புறுப்பு விறைப்பு அதிகரிக்கிறது / பெரிதாகிறது என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Scientific Facts About Intercourse That Every Couple Should Know!

Scientific Facts About Intercourse That Every Couple Should Know!