அக்கா, தங்கச்சி ரெண்டு பேருமே... என்ன நான் செய்ய - My Story #045

Posted By:
Subscribe to Boldsky

சுபாவும் நானும் காதலித்து வருகிறோம். மிக விரைவில் எங்களுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. நாங்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக ஒரே குடியிருப்பில் தான் வாழ்ந்து வருகிறோம். சுபா ஒரு அரசு பணியில் இருக்கிறாள்.

ஒரு நாள் திடீரென, என் தங்கை சௌமியா இங்கே வரவிருக்கிறாள். இங்கு நம்முடன் தான் தங்குகிறாள். அவளுக்கு ஏதோ நுழைவு தேர்விற்கு பயிற்சி எடுக்க வேண்டுமாம். இது பின்னாளில் அவளும் அரசு வேலை பெற உதவும் என கூறினாள்.

இது ஒரு நல்ல முடிவாக எனக்குப்படவில்லை. என்னையும், சுபாவையும் தவிர இங்கே எங்களுடன் யாரும் தங்க எனக்கு விருப்பமில்லை. என் வீட்டாராக இருந்தாலும் சரி, அவள் வீட்டாராக இருந்தாலும் சரி. ஏனெனில் எங்களுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை.

இப்போது சுபாவின் தங்கை சௌமியா இங்கே எங்களுடன் தங்க வருவது எனக்கு அசௌகரியமாக இருந்தது. ஆனால், சுபாவிற்கு எந்த சங்கடமும் இல்லை என்பதால், என்னால் வேண்டாம் என மறுக்க முடியவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சௌமியா!

சௌமியா!

சௌமியா விமான நிலையம் வந்தடைந்தாள். நான் அவளுக்க டாக்ஸி ஒன்று புக் செய்து காத்திருந்தேன். நாங்கள் இருவரும் ஒன்றாக வீடு வந்தடைந்தோம். சுபாவும், நானும் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு. இரண்டு பெட்ரூம் ஃப்ளாட்.

சௌமியா வரும் முன்னரே, சுபாவும் அவளும் ஓர் அறையிலும், நான் தனி அறையிலும் தங்கிக் கொள்ளலாம் என முடிவு செய்துவிட்டோம்.

ஓரிரு நாட்கள்...

ஓரிரு நாட்கள்...

சௌமியா வந்த முதல் ஓரிரு எல்லாம் சௌகரியமாக மாறியது. சௌமியா என்னுடன் இயல்பாக பழக துவங்கினாள். எனக்கு கணிதம் மற்றும் ரீசனிங் (Reasoning) நன்கு வரும் என்பதால், சௌமியா அதுகுறித்து கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் எந்த தயக்குமும் இன்றி விளக்கம் அளிப்பேன். அவளது பாடங்கள் குறித்து அவ்வப்போது உதவுவேன்.

நான், சுபா மற்றும் சௌமியா மெல்ல, மெல்ல மூவரும் மிகவும் நெருக்கமாக துவங்கினோம். ஒரு குடும்பம் போல வாழ்ந்து வந்தோம்.

சுபா பயணம்!

சுபா பயணம்!

திடீரென அலுவல் பயணம் என கூறி சுபா 15 நாட்கள் பெங்களூர் கிளம்ப வேண்டும் என்றாள். அவள் இதை கூறிய மறுநொடி எனக்கு எலக்டிரிக் ஷாக் அடித்தது போல இருந்தது. முதலில் உன் தங்கையிடம் இதை கூறு என்றேன். அதற்கு சுபா, "அதெல்லாம் சொல்லிட்டேன், அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எனக்கும் எந்த பிரச்சனையும் இல்ல." என மிக கேசுவலாக கூறினாள்.

நானும் சௌமியாவும் சுபாவை விமான நிலையத்தில் விட சென்றோம்.

இரவு 8.30

இரவு 8.30

சுபாவை வழியனுப்பிய பிறகு வீட்டிற்கு இரவு 8.30 அளவில் திரும்பினோம். நான் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். சௌமியா ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள். எப்போதுமே சுபா தான் இப்படி செய்வாள்.

சிறிது நேரம் கழித்து, உணவு பரிமாறட்டுமா? என கேட்டாள்.

எனக்கு அப்போது பசி ஏதும் இல்லை. என்பதால். "உனக்கு பசிச்சா சாப்பிடு, நான் பசிக்கும் போது அப்பறமா சாப்பிட்டுக்குறேன்" என பதிலளித்தேன்.

அவளுடன்!

அவளுடன்!

தனியாக உணவருந்த முடியவில்லை. என்னுடன் சேர்ந்து சாப்பிட வாருங்கள் என நச்சரித்தாள் சௌமியா. பிறகு இருவரும் ஒன்றாக உணருந்தினோம். அவளுக்கு ஏதோ சந்தேகம் என புத்தகம் எடுத்துக் கொண்டு வந்தாள். விளக்கம் அளித்துவிட்டு, எனது அறைக்கு சென்று சுபாவுடன் வீடியோ சாட்டிங்கை துவங்கினேன். சிறிது நேரம் அவளுடன் பேசிவிட்டு உறங்க சென்றோம்.

மறுநாள் காலை...

மறுநாள் காலை...

மறுநாள் காலை உணவருந்திக் கொண்டிருந்தேன். அலுவலகம் கிளம்ப நேரமானது. சௌமியா அவளை கோச்சிங் சென்டரில் டிராப் செய்ய கூறினாள். அவளை டிராப் செய்துவிட்டு அலுவலகம் சென்றேன்.

மீண்டும் மாலை அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய போது வீடு பூட்டப்பட்டிருந்தது. சௌமியா எங்கே சென்றால் என தெரியவில்லை. பிறகு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று தெரிய போது சௌமியா அங்கே இருந்தாள்.

"இங்க என்ன பண்ற?"

"எனக்கு வீட்ல தனியா இருக்க பயமா இருந்துச்சு அதான்..."

"சரி ஓகே வா, அதான் நான் இருக்கேன்ல.." என கூறி அழைத்து வந்தேன்.

தனியா தூங்க முடியாது...

தனியா தூங்க முடியாது...

நான் அவளை வீட்டுக்கு அழைத்து வந்து. பிறகு குளித்து முடித்து வந்தேன். சௌமியா எனக்கு தனியாக தூங்க பயமாக இருக்கிறது என கூறினாள். நேற்று இரவும் மிகவும் அச்சமாக தான் இருந்தது. நான் வேண்டுமானால் உங்கள் அறையில் உறங்கி கொள்ளவா என கேட்டாள்.

அதெல்லாம் வேண்டாம். நீ இதெல்லாம் பழகிக் கொள்ள வேண்டும். உன் அறையிலேயே உறங்கு. ஏதேனும் பிரச்சனை என்றால் என்னை கூப்பிடு நான் வருகிறேன் என கூறினேன். ஆனால், அந்த நாள் இரவும் அவளால் சரியாக உறங்க முடியவில்லை.

மூன்றாவது நாள் நான் வீடு திரும்பிய போது சௌமியாவிற்கு காய்ச்சலாக இருந்தது.

மருத்துவமனை!

மருத்துவமனை!

சௌமியாவை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். பிறகு, மருந்து பழங்கள் எல்லாம் வாங்கி வந்து அவளை அறையில் படுக்க வைத்துவிட்டு. அதே அறையில் நானும் தங்கினேன்.

என் தோளில்சாய்ந்து உறங்கினாள். இதை எப்படி உணர்வது, இதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என எனக்கு தெரியவில்லை.

மறுநாள் எனது அலுவலகத்திற்கு லீவ் அப்ளை செய்தேன்.

தலைவலி ஆரம்பம்!

தலைவலி ஆரம்பம்!

சௌமியாவிற்கு காய்ச்சல் குணமாகாத காரனத்தால், வேலைக்கு வவிடுப்பு கூறிவிட்டு அவளை அன்று கவனித்து கொன்னே. காலையில் அவளுக்கு உணவு சமைத்து கொடுத்தேன். அவள் அருகிலேயே அமர்ந்திருந்தேன்.

மதியம் உணவு சாப்பிட பிடிக்காமல் துப்பினால், தலை வலிக்கிறது என கூறினாள். உடல் வலி அதிகமாக இருக்கிறது என்றால். நெற்றியில் தலைவலி தைலம் தேய்த்துவிட்ட பிறகு கொஞ்சம் நன்றாக உணர்வதாக கூறினாள்.

முத்தம்!

முத்தம்!

அப்படியே எனது மடியில் படுத்துக் கொண்டு உறங்கினாள். நான் அவளுக்குள் வலிமையான உணர்வை ஏற்படுத்திவிட்டேனோ என்ற அச்சம் என்னுள். மறுநாள் காலை எழுந்து எனது கன்னத்தில் முத்தமிட்டு ஐ லவ் யூ என்றாள்.

இங்கே என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. நான் மிக சீக்கிரமாக அலுவலகம் சென்றுவிட்டேன். வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. மாலை வேண்டாவெறுப்பாக வீடு திரும்பினேன். வேறு வழியில்லை வீட்டிற்கு சென்றுதானாக வேண்டும்.

நான் வீட்டுக்குள் நுழைந்ததும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். நெற்றியில் முத்தமிட்டாள். நாள் முழுக்க என்ன மிஸ் செய்ததாக பிதற்றினாள்.

எங்களுக்குள் ஏதோ நடக்க போகிறது என்பது மட்டும் ஊர்ஜிதம் ஆனது.

வீடியோ கால்!

வீடியோ கால்!

சரியாக சுபா அப்போது வீடியோ கால் செய்தால். சௌமியா என்னை அழைப்பை ஏற்க வேண்டாம் என கூறினாள். அன்று இரவு முழுக்க பலமுறை சுபா அழைத்தாள். நாங்கள் அழைப்பை ஏற்கவே இல்லை. உறங்கவும் இல்லை.

மறுநாள் காலை சுபாவிற்கு கால் செய்தேன். சௌமியாவிற்கு உடல்நலம் சரியில்லை. அவளை மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதித்திருந்தேன் என்றேன். பிறகு சௌமியாவும் அதற்கு ஏற்றார் போல சுபாவிடம் பேசினாள்.

என்ன உறவு இது?

என்ன உறவு இது?

இங்கே சௌமியா என்னுடன் என்றால், அங்கே பெங்களூரில் சுபாவுடன் அவளது பாலிய பள்ளி நண்பனின் பழக்கம் கிடைத்தது என்றாள். வெகுநாட்கள் கழித்து நாங்கள் சந்தித்துக் கொண்டோம் என கூறினாள்.

அதற்கு பிறகு ஏழு நாட்கள் நானும் சுபாவும் பேசிக் கொள்ளவே இல்லை. 15 நாட்கள் கழித்து பெங்களூரில் இருந்து திரும்பினாள் சுபா. வந்ததுமே, எனக்கு புனேவிற்கு பணியிட மாற்றம் கிடைத்துள்ளது. என்னால் இந்த உறவை நீட்டித்துக் கொள்ள முடியாது என கூறினாள்.

என்ன நடக்குது...

என்ன நடக்குது...

அவள் என்ன கூறுகிறாள், இங்கே என்ன நடக்கிறது என ஒன்றும் புரியவில்லை. சௌமியா இந்த ஊரிலேயே இருந்து நுழைவு தேர்வு பயிற்சி மேற்கொள்ள போவதாக கூறினாள். சுபா அதற்கு அனுமதிக்கவில்லை. அவளையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு புனே விரைந்தாள்.

வெறும் இரண்டு வார பிரிவு! திருமணத்தில் இணைய வேண்டிய எங்கள் உறவை முற்றிலுமாக சிதைத்துவிட்டது. உறவுகள் ஏன் உருவாகின்றன என்ற வியப்பு என்னுள் அதிகரித்தது.

நாம் ஒரு உறவிற்கு நியாயமாக இல்லை எனில், நமக்கு அந்த உறவு நியாயமாக இருக்காது என்பதை புரிந்துக் கொண்டேன்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான். திணை விதைத்தவன் திணை அறுப்பான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Real Story: My Girlfriend And Her Sister Were Both Into Me And It Was Not Messy

Real Story: My Girlfriend And Her Sister Were Both Into Me And It Was Not Messy