Latest Updates
-
Aadi Month Rasipalan 2026: ஆடி மாதத்தில் கோடிகளை குவிக்கப் போகும் 5 ராசிக்காரங்க இவங்க தான்! -
ஜூலை 16-ல் சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், வெற்றியையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
நியூமராலஜி படி இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் தோற்றம் மட்டுமல்ல ஆன்மாவும் அழகானதாக இருக்குமாம் -
உங்க பல் மஞ்சளா இருக்கா? வெள்ளையாக்க இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
1/2 கப் கடலைப்பருப்பு இருந்தா டக்குனு இந்த குருமாவை செய்யுங்க - இட்லி, தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வாழைப்பழமும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
AC ரிமோட்டில் நீங்கள் செய்யும் இந்த தவறு உங்க கரண்ட் பில்லை தாறுமாறா அதிகரிக்குமாம் - கரெக்ட்டா யூஸ் பண்ணுங்க -
ஜூலை 07-ல் வக்ர புதனால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண கஷ்டம் குறைந்து செல்வம் பெருகும்.. -
தமிழ்நாட்டின் இந்த ஒரு மாவட்டத்தை மட்டும் ஆங்கிலேயர்களால் ஆட்சி செய்யவே முடியவில்லையாம் - ஏன் தெரியுமா?
வேலை தேடி போன இடத்தில், வாழ்க்கை தந்த எச்.ஆர் - My Story #41
வேலை தேடி போன இடத்தில், வாழ்க்கை தந்த எச்.ஆர் - My Story #41
"காதல் எப்படி வரும், எப்போ வரும் என யாருக்கும் தெரியாது. ஆனால், வர வேண்டிய நேரத்தில் அதன் பாதையில் அட்டகாசமாக வரும்." - கருத்து கண்ணாயிரம்!
அது தான் எனது வாழ்வில் உண்டான முதல் காதல், பேரார்வம் மற்றும் பெரும் ஈர்ப்பு என கூறலாம். அப்போது நான் யாருடனும் காதலில் விழ தயாராக இல்லை. முதல் பார்வையில் காதல் வரும் என்பார்கள். ஆனால், எனது காதல் முதல் காலில் துவங்கியது.
ஆம்! அது எனது வேலைக்கான கால். இந்த காலில் தான் துவங்கியது எனது காதல். அந்த காலில் பேசும் போது இது எனது காதலின் அச்சாரமாக இருக்கும் என்றோ, என் வாழ்வின் எதிர்காலமாக அமையும் என்றோ நான் கருதவில்லை.

மருந்து நிறுவனம்!
மருந்து நிறுவனம் ஒன்றில் இருந்து எச்.ஆர். நிலைக்கான வேலை வாய்ப்பு தேடி அழைப்பு வந்தது. எனது சி.வி மூலம் ஃபில்டர் செய்து நேரடி தேர்வுக்கு அழைத்தனர். நான் நேரில்சென்று பேசுவதை காட்டிலும், காலிலேயே பேசி முடித்துக் கொள்ளலாம் என எண்ணினேன். ஒரு கன்சல்டன்சி அலுவலகம் சென்று இண்டர்வ்யூ அட்டன்ட் செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதை தவிர்த்து போன் காலில் முடித்துக் கொள்ள திட்டமிட்டிருந்தேன். ஏனெனில், அந்த மீட்டிங் பெரிய ரவுண்ட் எல்லாம் இல்லை. எனது ஊதியம் சார்ந்து முடிவு செய்ய வேண்டியதாக தான் இருந்தது.

அந்த அழைப்பு...
அன்று மாலை, ஒரு தெரியாத நம்பரில் இருந்து அழைப்புப் வந்தது.
ஒரு ஆண்மை நிறைந்த கம்பீரமான குரல். "நான் ரியாவுடன் பேசலாமா?" என்று.
"ஹ்ம்ம், சொல்லுங்க... நான் ரியா தான் பேசுகிறேன்.." என்று சொல்லி முடிக்கும் முன்னேயே அந்த குரலுக்கு சொந்தகாரர் அவரது பொறுமை இழந்து அழைப்பை துண்டித்து.
பிறகு அவரது அலுவலகத்தில் இருந்து தொடர்ந்து மூன்று மணி நேரம் அழைத்துக் கொண்டே இருந்தனர்.
அந்த கம்பீரமான குரல் என்மீது கடுமையான கோபத்தில் இருந்தது. கண்டிப்பாக நாளை காலை பத்து மணிக்கு அலுவலகம் எடுக்க வேண்டும் என உத்தரவு வந்தது.

பிடிக்கவில்லை...
நான் கொஞ்சம் பிரஃபஷனாலான பெண். ஆயினும் எனக்கு பிடிக்கவில்லை எனில் எதற்காகவும் அசைந்துக் கொடுக்க மாட்டேன். பெரிதாக அக்கறை எடுத்துக்கொள்ள மாட்டேன்.
அவர்கள் பேசிய விதம் எனக்கு பிடிக்கவில்லை. அந்த புறத்தில் இருந்து பேசிய குரல் யாருடையதாக இருந்தாலும் சரி. அது தவறு என கருதினேன். அடுத்த நாள் எனது மனதுக்குள் பெரும் சண்டை நிலவியது. சரி போகலாம் என முடிவு செய்து. நண்பகல் வேளையில் கிளம்பினேன்.

கன்சல்டன்சி!
கன்சல்டன்சி சென்றடைந்ததும் என்னை அறிமுகம் செய்துக் கொண்டேன். அவர் "மை குட்னஸ்.., கடைசியாக நான் உன்னை பார்த்துவிட்டேன்" என கூறினார்.
எனது வேலை பற்றியும், ஊதியம் பற்றியும் கலந்தாலோசித்தோம். ஆனால், மிக குறுகிய நேரத்தில் எங்க பேச்சுவார்த்தை பர்சனல் விஷயத்தில் நுழைந்தது. அதுகுறித்து எனக்கு பெரிய ஆச்சரியமும் ஏற்படவில்லை. அன்றைய நாள் முழுவதும் நாங்கள் அந்த கன்சல்டன்சியில் பேசிக் கொண்டிருந்தோம்.

மீண்டும் இரவில்...
மீண்டும் இரவு நாங்கள் சந்தித்து பேசிக் கொண்டோம். அவனுடன் பேசுவது சுவாரஸ்யமாக இருந்தது. சில நாட்களில் நாங்கள் ஒருவர் மேல் ஒருவர் காதலில் விழுந்தோம்.
உங்களது காதல் எங்கே உங்களுக்காக காத்திருக்கிறது என்று உங்களுக்கே தெரியாது. வாழ்க்கை எனும் பேருந்து பயணத்தில், எந்த நிறுத்தத்தில் வேண்டுமானாலும் உங்கள் காதல் ஏறலாம்.
அதன் பிறகு நான் ஒரு 16 வயது பெண் போலவும், வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போன்றும் உணர துவங்கினேன். எனது அலுவல் வேலை முடிந்த பிறகு சாயங்காலம் அவனை காண காத்திருப்பேன்.

முதல் முத்தம்!
அவனுக்காக காத்திருப்பது ஆரம்பத்தில் பெரார்வமாக இருந்ததுள் பின்னாட்களில் சௌகரியமான வேலையாக மாறி போனது.
ஒருநாள் அவனது காரில் அமைந்து பேசிக் கொண்டிருந்தோம். அன்று தான் என் வாழ்வில் முதல் காதல் முத்தம் பெற்றேன். அது ஒரு சொர்க்கம் போன்ற உணவு.
அதன் பிறகு எங்கள் இருவருக்குள்ளுமான உறவில் இன்பம் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. காதல், காதல், காதல் என்ற ஒன்றே அதற்கான காரணமாக இருந்தது.

மூன்று வருடங்கள்!
எங்கள் காதல் உறவு துவங்கி மூன்று வருடங்கள் ஆகிறது. தொடங்கிய நாள் முதல் இன்று வரை எது என்றும் 16 போல இனிமையாக, அழகானதாகவே இருக்கிறது.
காதல் என் கதவை தட்டிய போது, அதை விரட்டியடிக்க என்னால் முடியவில்லை. நாங்கள் இன்று வரையும் ஏதோ, நேற்று பார்த்துக் கொண்டது போல தான் பழகி வருகிறோம்.
எங்களுக்குள்ளான பேரார்வம், இறுக்கம் அப்படியே தான் இருக்கிறது. எங்களால் ஒருவரை ஒருவர் என்றும் இழக்க முடியாது.



Click it and Unblock the Notifications