For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமணத்திற்கு முன்னால் இந்த 7 விஷயங்களை உங்களுக்கு யாரும் சொல்லமாட்டார்கள்!

திருமணத்திற்கு முன்னால் உங்களுக்கு யாரும் சொல்லாத இரகசியங்கள்

|

மத்தவங்களுக்கு எப்பவும் ஹீரோ, ஹீரோயினா இருக்கிங்களானு தெரியாது..! ஆனா உங்க கல்யாணத்துல நீங்க கண்டிப்பா மத்தவங்க முன்னால் ஹீரோ, ஹீரோயினா தான் இருப்பிங்க... அந்த தருணத்தை நினைத்தாலே ஆனந்தமா இருக்கா?

ஆனா முழுமையான ஆனந்தம் வேணும்னா நீங்க கண்டிப்பா கல்யாணத்துக்கு முன்னால ஒரு சில விஷயங்கள பத்தி தெரிஞ்சு வச்சுருக்க வேண்டியது அவசியம். ஆனா இத பத்தி யாருமே உங்களுக்கு சொல்ல மட்டாங்க.. அடடா, இத எல்லாம் செய்யாம விட்டுட்டோமேனு அப்பறம் வருத்தப்படறதுல கொஞ்சம் கூட அர்த்தமே இல்ல... புரியுதா?

அப்படி என்ன தான் இரகசியம்னு தெரிஞ்சுக்க கண்டிப்பா உங்களுக்கு ஆர்வமா தான் இருக்கும்.. இது சின்ன சின்ன விஷயமா இருந்தா கூட, இத எல்லாம் மிஸ் பண்ணிட்டா கல்யாணம் மியூசிக்கே இல்லாத பாட்டு மாதிரி கொஞ்சம் போரிங்கா போயிரும்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. உடல் பருமன்

1. உடல் பருமன்

நீங்கள் குண்டாக இருக்கிறீர்கள் என யாருமே சொல்ல மாட்டார்கள். நீங்கள் தொப்பை தெரிய மணமேடையில் நின்றால் நல்லாவா இருக்கும்? இருக்காது தானே..! எனவே திருமணத்திற்கு முன்னரே சில உடற்பயிற்சிகளை செய்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்..!

2. பேசியல்!

2. பேசியல்!

உங்கள் முகம் எப்படி இருக்கிறது என யாரும் கவனிக்கமாட்டார்கள்.. நீங்கள் பேசியல் செய்தீர்களா? இல்லையா, ஏன் முகம் இவ்வளவு டேனாகி உள்ளது என கவனிக்க யாருக்கும் நேரம் இருக்காது.! உங்களது முகத்தில் உள்ள மாற்றங்கள் உங்களது கண்களுக்கு தான் நன்றாக தெரியும். எனவே முகம், கை, கால்கள், உடல், கூந்தல் என அனைத்தையும் அழகுபடுத்திக்கொள்ள மறக்க வேண்டாம்.

3. அழுகை, கவலை வேண்டாம்!

3. அழுகை, கவலை வேண்டாம்!

திருமணத்திற்கு 5 நாட்கள் முன்னால் வெயிலில் சுத்துவது, மன அழுத்தத்துடன் இருப்பது, அழுகை, தூக்கமின்மை போன்றவை உங்களது முகத்தை அதிகமாக பாதிக்கும். இதனால் திருமணத்தன்று உங்கள் முகம் கலையிழந்து காணப்படும். என்ன தான் மேக்கப் போட்டாலும் உண்மையான அழகு தானே அழகு!

4. திருமண அழைப்பிதல்

4. திருமண அழைப்பிதல்

உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரையும் திருமணத்திற்கு அழைக்க வேண்டும் என்று நினைத்தால், முன் கூட்டியே அவர்களது பெயர்களை மறக்காமல் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்...! இல்லை என்றால் இவ்வளவு நாளாக பழகிவிட்டு என்னை மறந்துட்டியேனு உங்க பிரண்ட்ஸ் கேட்பாங்க ஜாக்கிரதை!

5. விருந்தினர் கவனிப்பு

5. விருந்தினர் கவனிப்பு

உங்கள் திருமணத்திற்கு வந்திருக்கும் விருந்தினர்களை கவனிக்க வேண்டியது உங்களது கடமை. இரவில் அவர்கள் ஓய்வெடுக்க தகுந்த ஏற்பாடு செய்து கொடுங்கள். அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். எந்தவித அசௌகரியங்களும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

6. மகிழ்ச்சியாக இருங்கள்!

6. மகிழ்ச்சியாக இருங்கள்!

உங்கள் திருமணம் முழுக்க முழுக்க உங்களுக்கான ஒன்று. எனவே நீங்கள் உங்களது திருமணத்தன்று சந்தோஷமாக இருங்கள். உங்களுக்கு பிடித்தவற்றை செய்யுங்கள். மனம் திறந்து உற்சாகமாக பறக்க வேண்டியது உங்களது கடமையாகும்.

7. நன்றி சொல்லுங்கள்

7. நன்றி சொல்லுங்கள்

உங்களது திருமணத்திற்கு பலர் உதவி செய்து இருப்பார்கள். உடைகளை வடிவமைப்பது, உங்களுக்கு மேக்கப் செய்வது என உங்களது சொந்தங்களும், நண்பர்களும் பல உதவிகளை செய்து இருப்பார்கள். அவர்களுக்கு எல்லாம் நன்றி தெரிவித்து ஒரு கடிதம் அல்லது ஏதேனும் பரிசை கொடுங்கள். இது அவர்களை ஆனந்தப்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

no one tell these seven things before marriage

Here are the seven things no one will tell you before marriage
Desktop Bottom Promotion