அவன் மட்டும் என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால்... என் காதல் கதை - My Story #056

Written By:
Subscribe to Boldsky

நான் அப்போது படித்து முடித்துவிட்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தேன்... எங்களது குடும்பம் மிகச்சிறியது தான்.. என் வீட்டில் நான் ஒரே ஒரு பெண்.. என் வீட்டு செல்லப்பிள்ளையும் கூட... என் குழந்தை பருவத்தில் நான் ஒரு தேவதையை போலவே வளர்க்கப்பட்டேன்.. எதற்கும் பஞ்சம் இல்லாத ஒரு வாழ்க்கை.. ஆனால் எனது பத்து வயதிற்கு மேல் என் வாழ்க்கை அப்படியே தலைகீழானது.. காரணம், என் தந்தையின் அறியாமை மற்றும் முட்டாள் தனம் தான்..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அப்பா..

அப்பா..

என் அப்பாவை சொல்லியும் தவறில்லை.. உதவி என்று யார் வந்தாலும், இரக்கப்பட்டு தன் தகுதிக்கு மீறிய உதவியாக இருந்தாலும் கூட செய்யக் கூடிய குணம்..! வெளியில் கடன் வாங்கி சில வேண்டியவர்களுக்கு உதவி செய்து இருக்கிறார்.. ஆனால் அவர்கள் எல்லோரும் ஏமாற்றிவிடவே கடன் தலைக்கேறியது... கடன் தொல்லை தாங்காமல் என் அப்பா வெளியூர் சென்றுவிட்டார்..! கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வீட்டிற்கு வரவில்லை..!

பட்டினி

பட்டினி

கடன் கொடுத்தவர்கள் எல்லாம் வீட்டிற்கு வந்து சண்டையிட ஆரம்பித்துவிட்டனர்.. இதனால் முழு கடன் பொறுப்பையும் தன் தலையிலேயே போட்டுக் கொண்டார் என் அம்மா... கடன் தொகையோ பல லட்சங்களில் இருந்தது...! என் அப்பா வீட்டில் இல்லாத நாட்கள் எங்களுக்கு மிக கடினமானவை...! பசி என்றால் என்ன என்றே அறியாமல் வளர்ந்த தான்.. என் குடும்பத்தின் சூழ்நிலை கண்டு அந்த பத்து வயதிலேயே, என் பசியை அடக்கிக் கொண்டு பல நாட்கள் பட்டினியாக கிடந்தேன்...!

மிஸ் யூ அப்பா..

மிஸ் யூ அப்பா..

இரவு எவ்வளவு நேரமானலும், என் அப்பா வராமல் சாப்பிட மாட்டேன்.. ஆனால் என் அப்பா வீட்டில் இல்லாத போது, தனியாக சாப்பிட்டேன்.. விழாக்காலங்களில் எனக்கு புத்தாடை வாங்கி தந்து, தன் மகளின் அழகை இரசிக்க அப்பா என்னுடன் இல்லை.. அந்த காலங்கள் எல்லாம் கடுமையானவை.. நான் பக்கத்து வீட்டு பிள்ளைகள் அவர்களுடைய அப்பாவுடன் சேர்ந்து பண்டிகை கொண்டாடுவதை பார்த்து, நாமும் இப்படி தானே இருந்திருப்போம் என்று நினைத்து ஏக்கத்துடன் பார்ப்பேன்..!

தாழ்மை..!

தாழ்மை..!

நமது நிலை சற்று இறங்கினாலே, அனைவரும் நம்மை தாழ்த்தி பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்... எங்கள் வீட்டு பிரச்சனை என்ன என்ன என்று என்னிடம் கேட்பார்கள்.. என்னால் அந்த பத்து வயதில் என்ன சொல்ல முடியும்...? நான் ஒன்றும் பேச மாட்டேன்!

எப்போதும் சண்டை!

எப்போதும் சண்டை!

ஆறு மாதங்கள் கழித்து, என் அப்பா திரும்பி வந்தார்... அவரை பார்க்கவே எனக்கு பயமாக இருந்தது.. இதுவரையில் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் இருந்த அவர், இப்போது குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார்... அந்த ஆறு மாதத்தில் அவர் முழுமையாக மாறிவிட்டார்.. எப்போது பார்த்தாலும் வீட்டில் சண்டை, என் அம்மாவை போட்டு அடிப்பது என்றே தான் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது... என் வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது..!

அனைத்தையும் இழந்தோம்

அனைத்தையும் இழந்தோம்

எங்களது வீட்டை விற்று கூட எனது அப்பா வாங்கிய கடனை கட்டமுடியவில்லை.. என் அப்பா சூழ்நிலை அறிந்து நடக்கவில்லை... எந்த ஒரு தொகையையும் குடும்பத்திற்காக கொடுக்கவில்லை... தான் சம்பாதிப்பதை தானே செலவு செய்து கொள்வார்..! என் அம்மாவின் வருமானம் முழுவதும், கடனை கட்டுவதற்கும், வீட்டு செலவுக்குமே போதாது..!

கல்லூரி காலம்

கல்லூரி காலம்

என் கல்லூரி காலம் வந்தது...! கல்லூரியின் இறுதி இரண்டு ஆண்டுகளில் உலகம் புரிய ஆரம்பித்தது...! கஷ்டங்களை எல்லாம் கடந்து செல்வது தான் வாழ்க்கை என்று புரிந்து கொண்டேன்.. மகிழ்ச்சியான கல்லூரி வாழ்க்கை..! என்னுடம் படிப்பவர்களை எல்லாம் பார்க்கும் போது எனக்கும் அவர்களை போல இருக்க வேண்டும் என்ற ஆசை.. ஆனால் இயலவில்லை.. அப்போது என்னிடம் நான்கு, ஐந்து ஆடைகள் தான் இருக்கும்.. அவையும் கூட ஆங்காங்கே கிழிந்து தான் இருக்கும்... அதை எல்லாம் எப்படியோ மறைத்து, மறைத்து அணிந்து கொண்டு தான் கல்லூரிக்கு செல்வேன்.. எனது ஐந்து ஆண்டு கல்லூரி காலமும் அப்படி தான் முடிந்தது..!

பாவம் அம்மா!

பாவம் அம்மா!

நான் என் அம்மாவிடம் என்ன கேட்டாலும், நீ வேலைக்கு போய் சம்பாதித்து வாங்கி கொள் என்று தான் கூறுவார்.. நானும் கல்லூரி விடுமுறை நாட்களில் கிடைத்த வேலைக்கு செல்வேன்.. மூட்டை கூட தூக்கி இருக்கிறேன்... அது எல்லாம் என்னால் முடியாத வேலை தான்.. வாரம் 300 ரூபாய் சம்பளம் கிடைக்கும்... அதற்காக தான் அந்த வேலைக்கு சென்றேன்.. அந்த சம்பளத்தை எனக்காக செலவு செய்ய என் மனம் கேட்காது.. என் அம்மாவிற்காக ஏதாவது வாங்கி கொடுப்பேன்...!

மனதுக்கு பிடித்த வேலை

மனதுக்கு பிடித்த வேலை

படித்து முடித்தவுடன் வேலைக்கு சென்றே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை.. பல நிறுவனங்களில் வேலை கிடைத்தது.. ஆனால் அவை எல்லாம் 5 இலக்க வருமானத்தை கொடுத்தாலும் மனதுக்கு பிடித்தமான வேலை இல்லை... பின்னர் எனக்கு பிடித்த வேலையை ஒரு ஆரம்பநிலையில் இருக்கும் அலுவகத்தில் கிடைத்தது.. ஆனால் அது வீட்டில் இருந்து பல மையில் தூரம்.. செல்வதற்கே 2 மணிநேரம் ஆகும்...! மனதுக்கு பிடித்தமான வேலை என்பதால் அதில் சேர்ந்து கொண்டேன்.. நாங்கு இலக்க வருமானம் தான்.. அதுவும் சரியாக வராது... ஹாஸ்டலில் தங்கவும் வசதி இல்லை...

கவலை குறைந்தது

கவலை குறைந்தது

அதிகாலையிலேயே வேலைக்காக புறப்படும் நான் வீடு திரும்புவது என்னவோ இரவு பத்து மணிக்கு மேல் தான்...! கிடைக்கும் வருமானம் குறைவாக இருந்தாலும், அது எங்களது குடும்பத்திற்கு உதவியாக இருந்தது.. கவலைகள் குறைந்தது.. அலுவலகத்தில் நன்றாக வேலை செய்ததால், எனக்கு சில மாதங்களியே சம்பளம் இரட்டிப்பானது...! சந்தோஷமாக நகர்ந்தது என் வாழ்க்கை...

பேஸ் புக் காதல்!

பேஸ் புக் காதல்!

வேலை, வீடு, வாரத்தில் ஒரு நாள் நண்பர்களுடன் வெளியில் செல்வது என்று நகர்ந்து கொண்டிருந்தது எனது நாட்கள். அப்போது தான் எனது வாழ்க்கையில் ஒரு திருப்பம் உண்டானது..! எனது முகநூலுக்கு ஒரு மெசேஜ் வந்தது... சாட்டில் இருந்த முகத்தை காண தோனவில்லை.. அந்த சிறிய அளவு புகைப்படத்தை கண்ட போது என்னுடன் படித்த மாணவனை போல தெரிந்ததால் பேசினேன்.. அதுவும், நான் அதிகமாக யாருடனும் பேசாததால், நான் சீன் போடுகிறேன் என்று நினைத்துக் கொள்வார்கள். அப்படி எல்லாம் நான் இல்லை என்பதற்காக தான் பேசினேன்..

தோழன்!

தோழன்!

மூன்று மாதங்கள் ஹாய், குட் மார்னிங் மட்டும் தான்.. ஒரு நாள், நீங்க எங்க வேலைக்கு போறீங்க என்று கேட்டேன்.. அவர் ஒரு பிரபல ஐ.டி நிறுவனத்தை கூறினார்.. என்னால் நம்பவே முடியவில்லை... என்னுடன் இன்டர்வியூ வந்த போது இவன் முதல் ரவுண்டுலயே வெளிய வந்துட்டானே... இவன் சரியான மக்கு தான.. எப்படி இவனுக்கு அந்த கம்பனில வேலை கிடைத்தது என்று யோசித்தேன்... சரி ஏதாவது லக்கா இருக்கும்னு நினைத்து சரி ஒகே என்று சொல்லிவிட்டேன்...

மறந்து விட்டாரா?

மறந்து விட்டாரா?

என்னுடன் படித்த சிலரை பற்றி கேட்டேன்... அவர் என்னவோ, குத்துமதிப்பாக பதில் சொன்னார்... என் கல்லூரி நியாபகங்களை எல்லாம் பற்றி அவரிடம் பேசினேன்.. அவர் எனக்கு நியாபகம் இல்லை.. இல்லை என்று கூறினார்.. நான் உங்க கூட தான் படித்தேன்.. நான் நம்ம காலேஜ்-ல எவ்வளவு ஃபேமஸ் தெரியுமா... என்னை தெரியலையா என்று எல்லாம் கேட்டேன் ஆனால் அவர் எனக்கு தெரியவில்லை என்று கூறிவிட்டார்.... எனக்கு குழப்பமாகவே இருந்தது... தொடர்ந்து பேச நேரமும் இல்லை.. எல்லாவற்றையும் மறந்துவிட்டாரோ என்னவோ என்று விட்டுவிட்டேன்...

நண்பன்!

நண்பன்!

பின்னர், ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை பேச நேரம் கிடைத்தது.. அப்போது தான் அவர் எனக்கு பேசி புரிய வைத்தார்.. நான் உன்னுடன் படித்தவன் இல்லை.. நம்ம ஒரே காலேஜ்.. ஆனா வேற வேற டிபார்ட்மெண்ட் என்பதை... உடனே நான் அவருடைய புரோபைல் பக்கத்திற்கு சென்று அவருடைய புகைப்படத்தை பார்த்தேன்... நான் தவறாக புரிந்து கொண்டது தெரியவந்தது... அவரிடம் சாரி கேட்டேன்... பின் நல்ல நண்பர்களாக இருந்தோம்...

பிடித்தது

பிடித்தது

அவர் என்னுடன் அளவாக பேசுவது, ஆண் அதிகாரம் இல்லாமல் நடந்து கொள்வது இவை அனைத்தும் அவர் மீது ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியது... என்ன தான் நல்ல நண்பர்களாக இருந்தாலும், சில மாதங்கள் போனில் எல்லாம் பேசவில்லை...

அதிர்ந்தேன்

அதிர்ந்தேன்

ஒரு நாள் எனக்கு ஒரு பார்வேர்டு மெசேஜ் வந்தது... நான்கு, அல்லது ஆறு இலக்க எண்களில் இருந்து கால் வந்தால் தயவு செய்து எடுக்க வேண்டாம்... அப்படி எடுத்தால், உங்களது போன் வெடித்துவிடும் என்பது தான் அது.... என்ன மாயமோ தெரியவில்லை... ஒரு இரண்டு மணி நேரத்தில் எனக்கு ஒரு நான்கு இலக்க எண்ணில் இருந்து, போன் வந்து கொண்டே இருந்தது... நான் அதிர்ந்து விட்டேன்... அதை எடுக்காமல் விட்டுவிட்டேன்... பின் தொடர்ந்து போன் கால் வந்து கொண்டே இருந்தது.. என்னை கொல்ல தான் யாரோ இது போன்று செய்கிறார்கள் என்று நானும் என் அலுவலக நண்பர்களும் நினைத்துக் கொண்டோம்....

முட்டாள் தனம்!

முட்டாள் தனம்!

பின்னர் அன்று இரவு நான் பேருந்துக்காக நின்று கொண்டிருக்கும் போது தான் அவரது நம்பரில் இருந்து எனக்கு கால் வந்தது... முதல் முறையாக அவருடன் பேசினேன்... நான் மதியம் நிறைய முறை உங்களுக்கு கால் செய்தேன்.. ஏன் எடுக்கவில்லை என்று கேட்டார்.. அந்த நான்கு இலக்க நம்பரா என்று கேட்டேன் ஆமாம் என்றார்.. சாரி.. எனக்கு நீங்க தான்னு தெரியலனு சொன்னேன்.. அது அவரது அலுவக எண்... அன்று முதல் நாங்கள் இருவரும் போனிலும் பேச ஆரம்பித்தோம்... ஆனால் அதுவும் எப்போதாவது ஒருமுறை மட்டும் தான்...

பிரேமம் ஹீரோ..

பிரேமம் ஹீரோ..

அவருக்கு தாடி இருக்கும்... நீக்க பாக்க பிரேமம் ஹீரோ மாதிரி இருக்கீங்கனு சொன்னேன்.. அது அவருக்கு பிடித்திருந்தது போல... நான் பேசியது அவரை காதலிப்பது போல இருந்ததோ என்னவோ தெரியவில்லை... ஒரு நாள் என் காதலிப்பதை வேறு விதமாக வெளிப்படுத்தினார். அது எனக்கு புரியாதது போல இருந்து விட்டேன்.. பின் அவரே காலையில் என் குடும்ப சூழ்நிலையில் நான் காதலிப்பது எல்லாம் சரியாக வராது என்று கூறினார்.. நானும் சரி என்று கூறிவிட்டேன்..

காதல்..

காதல்..

சிறிது நாட்கள் கழித்து நானே சென்று, காதல் பற்றி பேசினேன்.. அது ஏன் பேசினேன் எதற்காக பேசினேன் என்று எல்லாம் தெரியவில்லை... ஆனால் ஒரு நண்பராக மட்டும் இல்லை... என் வாழ்க்கை முழுவதும் அவர் உடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.. ஆனால் அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.. ஒரிரு நாட்களில் அவர் சம்மதம் தெரிவித்துவிட்டார்... அவர் சம்மதம் சொன்னதும்.. எனக்கு காதல் எல்லாம் சரியா என்று... நாம் இருக்கும் சூழ்நிலைக்கு இது சரியா... இவர் என்னை ஏமாற்றிவிட்டால் என்ன செய்வது... என்று எல்லாம் தோன்றியது.. அந்த காதலில் இருந்து வெளிவர ஏதேதோ செய்தேன்... ஆனால் அவை எல்லாம் உதவவில்லை...

காதல்

காதல்

இந்த காதலில் அவர் உறுதியாக இருந்ததே அதற்கு காரணம்... நானும் முழு மனதுடன் அவரை காதலிக்க ஆரம்பித்தேன்.. அவர் வெளியூரில் வேலை செய்வதால் அவரை காண சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. என் அம்மாவிடம் இந்த காதலை பற்றி மறைக்க கூடாது என்று தோன்றியது... காதலிக்க ஆரம்பித்த முதல் நாளே இது பற்றி அம்மாவிடம் கூறினேன்... அவர் இது எல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டார். பின் அவர் என் அம்மாவிடம் பேசி சம்மதம் வாங்கினார்...

முதல் சந்திப்பு

முதல் சந்திப்பு

அதே சமயம், அவரது வீட்டிலும் எங்களது காதல் பற்றி கூறினார்.. ஊருக்கு வரும் பொழுது என்னை அவரது வீட்டில் அறிமுகம் செய்து வைப்பதாக அவரது அம்மாவிடம் கூறினார்.. அதே போல நாங்கள் சந்திக்கும் நாளும் வந்தது... இருவரும் சந்தித்துக் கொண்டோம்... முதல் சந்திப்பின் போதே அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்... அவை அனைத்தும் புதிய அனுபவம்... நான் உன் காதலி என்று வீட்டில் சொல்லாதே.. எனக்கு வீட்டிற்கு வர பயமாக இருக்கிறது என்று கூறினேன்... ஆனால் அவர் சொல்லிவிட்டார் போல... என் அவரது வீட்டில் முதல் நாளே மருமகளாக தான் பார்த்தார்கள்...

பிரிவு...

பிரிவு...

பெற்றோர்களின் அனுமதியின்றி முகத்தை மறைத்து கொண்டு வெளியில் சுற்றும் காதல் அனுபவம் எனக்கு உண்டாகவில்லை... அவருக்கு வெளியூரில் வேலை என்பதால், அடிக்கடி சந்திக்கவும் இயலவில்லை... அவருக்கு காதலித்த சிறிது நாட்களில், வெளிநாடு போக வேண்டிய சூழ்நிலை வந்தது... அவரது அந்த குறுகிய கால பிரிவு என்னை அதிகமாக பாதித்தது... அவர் வெளிநாடு சென்ற அந்த காலம் எனக்கு மிக கடுமையாக இருந்தது...

என் லட்சியம்

என் லட்சியம்

அவர் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த சமயம் அது... இனிமேல் பிரிவே வரக்கூடாது என்பதால் தானோ என்னவோ எனக்கு அவர் வேலை செய்யும் ஊரிலேயே வேலை கிடைத்தது... எனக்கு இண்டர்வியூ செல்வதில் இருந்து, அனைத்திலும் உதவி செய்தார்.. அங்கு நான் ஹாஸ்டலில் தான் தங்க வேண்டிய சூழ்நிலை... நான் அங்கு தங்க அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார்... முன்பை விட நல்ல சம்பளம்... நான் ஆசைப்பட்ட நிறுவனத்திலேயே.. நான் ஆசைப்பட்ட வேலை... அனைத்தும் கிடைக்க காரணமாக இருந்தது அவர் தான்... அவர் மட்டும் இல்லை என்றால், நான் இவ்வளவு தூரம் வந்திருக்கவே மாட்டேன்!

கலப்பு திருமணம்

கலப்பு திருமணம்

நான் வேலைக்கு சேர்ந்த சிறிது நாட்களில், எங்களுக்கு திருமணமும் ஏற்பாடானது... எங்களுடைய திருமணம் ஒரு கலப்பு திருமணமும் கூட... என்னிடம் இருந்து அவர் எந்த ஒரு வரதட்சனையையும் எதிர்பார்க்கவில்லை... அனைத்து செலவுகளையும் அவரே பார்த்துக் கொண்டார்... இதற்கு அவரது குடும்பத்தினரும் எந்த எதிர்பும் கூறவில்லை.. இதுவரை எந்த கோபத்தையும் யாரும் என் மேல் காட்டவில்லை.. அவரது அம்மா, அப்பா, அக்கா என அனைவரும் என்னை அவரது வீட்டு பிள்ளையாக பார்த்து வருகின்றார்கள்...

கடவுளின் பரிசு

கடவுளின் பரிசு

என்ன தான் சண்டை வந்தாலும், அவரை நானும், என்னை அவரும் பிரிந்து வாழ்வது என்பது இயலாத ஒன்று... என்னால் பல தொல்லைகள் அவருக்கும், அவரது குடுபத்தினருக்கும் வந்துள்ளது.. ஆனால் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் என்னை பார்க்கும் பொழுது இன்முகத்துடன் வரவேற்பதில் தான் அவர்களது அன்பு உள்ளது...! என் அம்மாவிற்கு ஒரு மகன் இல்லை என்ற குறையை போக்குவதாக இருக்கும் என் கணவருடைய அந்த குணம் வேறு யாருக்கும் வராது...! இந்த வாழ்க்கையை கொடுத்தற்கு நான் கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்..!

இப்படிக்கு

நான்......!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

my story :he gave life to me

my story :he gave life to me