அவன் காதலித்தது என் அழகை மட்டும் தான்! - இதற்கு பெயர் காதலா?

Written By:
Subscribe to Boldsky

நாம் அனுபவித்த வலிகளிலேயே மிகவும் கொடுமையான வலி எதுவென்றால், அது காதலின் வலி தான். அதற்கு மேலான வலி எதுவென்றால் தனது உயிருக்கும் மேல் என்று நாம் நினைத்து அனுதினமும் நமது காதலை பகிர்ந்து வந்தவர் நம்மை விட்டு விலகி செல்வது தான். காதலிக்கும் போது கூட பல காதல் என்றால் என்ன என்று உணர்ந்திருக்க மாட்டார்கள். உண்மையில் காதலியுடன் பேசாமல் இருந்த போதும், காதல் பிரிந்த போதும் தான் எந்த நேரமும் தனது காதலியை பற்றியே நினைத்து கொண்டு, சோகமான காதல் பாடல்களை கேட்டு கொண்டும் காதலின் வலியை உணர்வார்கள்.

காதல் ஒன்று சேர்ந்த கதையை நாம் கேட்கும் போது நமது மனதில் மகிழ்ச்சி எழும். ஆனால், அதுவே பிரிந்த ஒரு காதல் கதையை கேட்கும் போது நமக்கே ஒரு காதல் உணர்வு உண்டாகும். சிலர், இந்த கதைகளை கேட்டு அழுகவும் ஆரம்பித்துவிடுவார்கள். இந்த பகுதியில் ஒருவரது காதல் கதையை காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தோழியின் நண்பன்

தோழியின் நண்பன்

எனது தோழி ஒருத்திக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருந்தார்கள். ஆனால் நான் எந்த ஒரு ஆணுடனும் பேச மாட்டேன். எனது தோழி ஒருநாள், அவளது நண்பன் ஒருவனது எண்ணுக்கு என்னை அழைத்து, அவனை எனக்கு உடனடியாக கால் செய்ய சொல்லும் படி கூறினாள். அவளுக்கு ஏதோ அவரசம் போல இருக்கிறது என்று, நான் அவனுக்கு கால் செய்தேன். அன்று முதல் எனது எண்ணுக்கு அவன் மெசேஜ் அனுப்ப ஆரம்பித்துவிட்டான்.

பேசினேன்!

பேசினேன்!

அவன் என்னிடம் நல்ல முறையில் பேசியதால் நானும் அவனுடன் பேசினேன். சில நாட்கள் சென்றன... எனது பிறந்த நாளன்று அவனை நேரில் பார்த்தேன்.. நண்பன் என்ற முறையில் தான் நான் அவனுக்கு இனிப்பு கொடுத்தேன். பின்னர் அவன் தனது நட்பு வட்டாரத்தில் என்னை காதலிப்பதாக கூறியிருந்தான். எனது தோழியிடமும் கூட கூறியிருந்தான். இவ்வாறு எனக்கு அவனது காதல் பற்றி தெரியவந்தது.

அடம் பிடித்தான் :

அடம் பிடித்தான் :

அவனது பேச்சு, நடை, உடை, பாவணை, பெண்களுடனான நட்பு எல்லாம் எனக்கு அவனை நண்பனாக பார்த்த பொழுது பெரியதாக தெரியவில்லை. ஆனால் காதல் என்று வரும் போது அவனை சற்றும் எனக்கு பிடிக்கவில்லை. இருப்பினும், அவனுடன் பேசினேன்.. பேசும் போது எல்லாம், எனக்கு ஒருவித மனக்கசப்பு தான் ஏற்பட்டது. அவன் தன்னை காதலிக்கும் படி என்னிடம் கெஞ்சினான்... குடித்துவிட்டு கூட பல பிரச்சனைகளை செய்தான். நட்பு வட்டாரங்களும் அவனை காதலிக்கும் படி என்னிடம் கேட்டுக் கொண்டது. பல நாட்களுக்கு பிறகு அவனை வேண்டா வெறுப்பாக காதலிக்க தொடங்கினேன்...!

மகிழ்ச்சி இல்லை

மகிழ்ச்சி இல்லை

ஏதோ ஒரு மனநிலையில் பாவம் பார்த்து வந்து காதல் தான் அது..! அவனை அவ்வளவாக எனக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் எனது மனநிலையை மாற்றிக்கொள்ள தொடங்கிவிட்டேன்... எனது தோழியும் அவனை பற்றிய நல்ல விஷயங்களை கூறி என்னை தேற்றினாள். நாட்கள் சென்றன... என் மனதிலும் காதல் மலர்ந்தது...!

குடும்பத்தில் ஒருவன்

குடும்பத்தில் ஒருவன்

நான் அவனை எனது பெற்றோர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தேன்..! அவன் எனது பெற்றோர்களுக்கு மிகவும் நெருக்கமானவன் ஆனான். அவனை எனக்கு பிடித்தது. அவனுக்கும் என்னை பிடித்தது. கல்லூரி நாட்களில் அவன் படிப்பதற்கு நான் என்னால் ஆன உதவிகளை செய்தேன். அவனும் முன்பை விட நல்ல மதிப்பெண்களை எடுத்தான். ஒரே கல்லூரி என்பதால் தினமும் சந்திப்பது, மொபைல் மூலம் அரட்டை அடிப்பது என்பது எல்லாம் தொடர்ந்தது.

தோழியின் வெறுப்பு

தோழியின் வெறுப்பு

அவன் என்னுடன் எதாவது சண்டை போட்டால், எனது தோழிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவள் சேர்த்து வைப்பது போல நாடகம் ஆடி அவளால் முடிந்த பிரிவினைகளை செய்துவிடுவாள். இவன் அவளுக்கும் தோழி என்பதால், அவள் என்ன சொன்னாலும் நம்பி விடுவான். ஆனால் அவள் என்ன கூறினாள் என்பது பற்றி என்னிடம் எதையும் கூற மாட்டான். இது பல மாதங்களாக எனக்கு புரியவில்லை...

எறிந்த காதல்..!

எறிந்த காதல்..!

ஒருநாள் என்னை பற்றி தவறாக, வேறு ஒரு ஆணுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக, அவள் அவனிடம் கூறிவிட்டாள். இதனை வேறு ஒருவர் கூறியதாக அவன் வந்து என்னிடம் கேட்டான். நான் இவ்வளவு சந்தேகமா என் மீது என்று கேட்டேன். இல்லை உறுதி செய்து கொள்ள தான் கேட்கிறேன் என்றான்... நான் அப்படி எல்லாம் செய்யவில்லை என்று அழுதேன்.. இந்த அழுகை, எங்கே அவன் என்மீது சந்தேகப்பட்டு, என்னை விட்டு போய்விடுவானோ என்ற பயத்தில் வந்த அழுகை..! அவன் அப்போதைக்கு சமாதானம் ஆனான். ஆனால் மறக்கவில்லை.. அடிக்கடி சொல்லி காட்டுவான். அதுவும் நான் செய்யாத ஒரு தவறை..!

அவனது முகம்!

அவனது முகம்!

இதற்கு பின்னர் பலரும் அவனை பற்றி என்னிடம் தவறாக கூறினார்கள். இவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக என்னிடம் தெரிவித்தனர். ஆனால் அதை எல்லாம் நான் நம்பவில்லை. அவனிடம் அப்படியே கூறினேன். அவன் நான் அவ்வாறு இல்லை என்று கூறினான்...! சரி, நான் உன்னை நம்புகிறேன் என்று நம்பினேன்..! அது தான் நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு... காதல் ஆசையில் புத்தி யேசிக்க மறுத்துவிட்டது. நான் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறேன்..! அறிவிலும் சிறந்தவள் என்ற ஒரே காரணத்திற்காக தான் அவன் என்னை காதலித்தான். என்னை விட சிறந்த பெண் கிடைத்தாள் என்னை கழற்றி எறிந்துவிடுவது அவன் திட்டம் எனவும் பலர் கூறினார்கள். அதை நம்பாமல் இருந்தது என் குற்றம் என நாட்கள் செல்ல செல்ல தான் புரிந்தது.

கல்லூரி முடிந்தது

கல்லூரி முடிந்தது

எங்களது கல்லூரி காலம் முடிந்தது...! அவன் மேற்ப்படிப்பிற்காக வேறு ஒரு கல்லூரியில் படித்தான். நானும் வேறு ஒரு கல்லூரியில் படித்தேன். அவன் என்னை காதலித்து கொண்டு தான் இருந்தான். ஒருநாள் நான் அவனை காண்பதற்காக, பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தேன். அப்போது அவனது கல்லூரியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் சாதாரணமாக பேசினேன். பேசும் போது தான் தெரிந்தது, அந்த பெண்ணும் இவனும் ஒரே ஊர் என்று.. அவனை தெரியும் என்றும் கூறினாள். நான் என்ன அவனை இன்னும் காணவில்லை என்று கேட்டேன், அதற்கு அவள் அவர், அவரது காதலியுடன் தான் வருவார் என்று கூறினாள். நான் அதிர்ந்துவிட்டேன்.

பிடிபட்டான்!

பிடிபட்டான்!

ஒருநாள் நான் அவனது முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று, அவனிடம் கூறாமல் அவனது கல்லூரிக்கு சென்றேன். அவன் அந்த பெண் கூறியபடியே அவனது புதிய காதலியுடன் கைகோர்த்து வந்தான். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. உடனே, நான் சென்று அவனது கையை பிடித்து இழுத்து, அவனை கன்னத்தில் அறைந்தேன். அவனது புதிய காதலியோ, எனது காதலனை ஏன் அடிக்கிறாய் என்று கேட்டாள். அவளுக்கு உண்மை தெரியாது என்று நான் அவளிடம் எங்களது காதல் கதையை கூறினேன். அவன் அவளிடம் என்னை பற்றி மிகவும் அவதூறாக கூறியது தெரியவந்தது. எனக்கு நடந்த தூரகத்தை உணர்ந்து வந்துவிட்டேன்.

அவனது தற்போதிய நிலை

அவனது தற்போதிய நிலை

சில மாதங்களிலேயே அவனது புதிய காதல் முடிந்துவிட்டது. அவன் என்னை பற்றி புகழ ஆரம்பித்தான். அவன் மீண்டும் என்னை காதலிக்க ஆசைப்படுகிறான் என்று எனக்கு புரிந்தது. ஆனால் நான் கண்டுகொள்ளவில்லை. நான் அவனை வெறுத்தேன். இப்போது எனது படிப்பு நல்லபடியாக முடிந்து, நான் நல்ல நிலையில் இருக்கிறேன். என்னை வேண்டாம் என்று கூறியவன் என்னை மிஸ் செய்து விட்டோம் என்று நினைத்து வாடும் அளவிற்கு நான் வாழ்ந்து வருவது எனக்கு மகிழ்ச்சியே..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

My secret real life story

My secret real life story
Story first published: Thursday, October 12, 2017, 12:34 [IST]