என் வருங்கால மனைவியிடம் முதலிரவு பற்றி பேசவே பயமாக இருக்கிறது!

Written By:
Subscribe to Boldsky

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்... திருமணத்தை அனைவரும் ஊரையே அழைத்து விமர்ச்சையாக செய்வார்கள். ஊரையை அழைக்கும் போது அவர்களை முந்தைய நாள் முதல் அடுத்த நாள் இரவு வரை வரவேற்று, உபசரித்து, போட்டோக்களை எடுத்து மணமக்கள் மிகவும் சோர்வடைந்து இருப்பார்கள். இது நம்மில் 95% பேருக்கு நடக்க கூடிய உண்மையாகும். இதில் பெரியவர்கள் வேறு, திருமணத்து அன்று இரவே முதலிரவை ஏற்பாடு செய்து விடுவார்கள்.

intercourse on wedding day night is good or bad

திருமண களைப்பில் யாருக்காக இருந்தாலும், தூங்க வேண்டும் என்று தான் தோன்றும்... வீட்டில் பார்த்து வைத்த திருமணம் என்று பார்த்தால், மணமகன் மற்றும் மணமகள் இருவருக்கும் சற்றும் ஒரு நெருக்கம் கூட இருக்காது... ஒருவரை பற்றி ஒருவர் புரிந்தும் வைத்திருக்க மாட்டார்கள். இந்த நிலையில் உடலுறவு என்பது சரியான விஷயமாக இருக்காது. இதுபற்றி ஒருவரது வாழ்கை அனுபவத்தையும் அதற்கான தீர்வையும் பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரச்சனை

பிரச்சனை

எனக்கு விரைவில் திருமணமாக போகிறது. எனக்கு நடக்கவிருப்பது பெற்றோர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும். எனக்கு நான் திருமணம் செய்து கொள்ள போகும் நபரை நான்கு வருடங்களாக தான் தெரியும். நான் அவரை இதுவரை நேரில் சந்தித்தது இல்லை. மேலும் நாங்கள் இருவரும் உடலுறவு பற்றி எல்லாம் பேசியது கிடையாது. அவள் நன்றாக படித்தவாள். அவள் பாரம்பரியமான ஒரு இந்திய பெண். அவளிடம் எப்படி உடலுறவு பற்றி எல்லாம் பேசுவது என்று தெரியவில்லை. எனக்கு அவளிடம் இதை பற்றி எல்லாம் பேசினால் என்னை பற்றி என்ன நினைப்பாள் என்று கவலையாகவும் உள்ளது. திருமணத்தன்று முதலிரவை நான் அவளுடன் கழிப்பது சரியானது தானா?

தீர்வு :

தீர்வு :

உங்களது கேள்வி நியாயமானது தான். இந்த சந்தேகம் நிறைய பேருக்கு இருப்பது தான். அதுவும் ஒரு பெண்ணின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் அவளை அணுகுவது முறையானது அல்ல. முதலிரவு என்பது அனைவரும் நீண்ட நாட்களாக காத்திருக்கும் ஒன்று. அன்று தம்பதிகளுக்கு பயமும், கூச்சமும் வருவது இயல்பு தான். உங்களது குழப்பம் நியாயமானது தான். அது உங்களது மனைவி மீது நீங்கள் வைத்துள்ள நியாயமான அக்கறையை காட்டுகிறது. இதிலிருந்து நீங்கள் உங்களது வாழ்க்கையில் அவரிடம் இருந்து எதையும் கட்டாயப்படுத்தி, பெற மாட்டீர்கள் என்று தெரிகிறது.

நட்பு ரீதியான உறவு

நட்பு ரீதியான உறவு

நீங்கள் இவ்வளவு அக்கறை உங்களது வருங்கால மனைவி மீது வைத்து இந்த கேள்வியை கேட்பது என்பது, நீங்கள் அவருடன் ஒரு நண்பனாகவும், இருப்பீர்கள் என்பதை காட்டுகிறது. நீங்கள் அவர் மீது மிகுந்த மரியாதையுடன் இருப்பதையும் இது காட்டுகிறது. ஒவ்வொரு ஆணும் தன் மனைவி மீது இந்த அளவு அக்கறையுடன் தான் நடந்து கொள்ள வேண்டும். உங்கள் இருவருக்கும் இடையில் அக்கறையும், அன்பும் அதிகரிப்பதே உங்களது உடலுறவு சார்ந்த பேச்சிற்கு வழிவகுக்கலாம். இவை தான் உடலுறவின் அடிப்படை.. முதலில் ஒரு பெண்ணின் மனதை, அவளது உணர்ச்சிகளை புரிந்து நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

சரியா? தவறா?

சரியா? தவறா?

உங்களது கேள்வி என்னவென்றால், திருமணத்தன்று இரவு உடலுறவு வைத்து கொள்வது சரியா? தவறா? என்பது தான். இதில் சரி என்று சொல்வதற்கும், தவறு என்று சொல்வதற்கும் எதுவும் இல்லை. எல்லாம் உங்கள் இருவரது மனது சார்ந்தது தான். நீங்கள் இருவரும் ரீலாக்ஸ் ஆக இருப்பது இரவு நேரத்தில் தான். அப்போது அன்பான, ரொமேண்டிக்கான வார்த்தைகளால் அவரது மனதை வருடுங்கள். அவருக்கும் நிச்சயம் உங்கள் மீது காதல் எண்ணம் இருக்கும். உங்கள் இருவருக்கும் முதலிரவு அன்று உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் மெதுவாக கூட நடக்கலாம்.

பயம் வேண்டாம்

பயம் வேண்டாம்

அவர் உங்களது மனைவி, அவருக்கும் உங்கள் மீது ஆசை இருக்கும் எனவே நீங்கள் பயம் கொள்ள தேவையில்லை. அவரது மனதை புரிந்து நடந்து கொண்டால் போதுமானது. உங்களுக்கு அவர் மீது மரியாதை, அன்பு, அக்கறை எல்லாம் இருக்கிறது.. கூடிய சீக்கிரம் இந்த காதல் அடுத்த நிலைக்கு சென்றுவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

intercourse on wedding day night is good or bad

intercourse on wedding day night is good or bad
Story first published: Friday, October 13, 2017, 18:38 [IST]