For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  அவன் மரணத்திற்கு நானே காரணம், அன்று அவனுடன் இருந்திருக்க வேண்டும் - My Story #123

  |

  நான் மன்னிப்புக் கோர வேண்டியவளா? அல்லது இது என் வாழ்வில் எழுதப்பட்ட விதியா என தெரியவில்லை. ஆனால், அவனிடம் மனதார மன்னிப்புக் கேட்க வேண்டும் என கருதுகிறேன். நான் எப்போது அவனுக்கு மிக தேவை என்ற தருணம் உண்டானதோ... அப்போது நான் அவனுடன் இல்லை. அதற்கான வருத்தத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

  நான் என் குடும்பத்தை மிகவும் நேசிப்பவள். நான் என்னையே மிகவும் லக்கியான பெண் என கருதுபவள். ஏனெனில், என் குடும்பமும் உறவினர்களும் என்னை மிகவும் மென்மையாக, அரவணைப்புடன் பார்த்துக் கொண்டனர். என் குடும்பத்தின் கடைக்குட்டி நான். ஆகையால், மிகவும் செல்லம்.

  சுதந்திரத்தின் எல்லை எதுவோ, அதுவரை நான் அந்த சுதந்திரத்தை அனுபவித்தவள். முக்கியமாக எனது பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் நான் அனுபவித்த சுதந்திரம் வேறு யாரும் அனுபவித்திருக்க வாய்ப்பே இல்லை என கூறலாம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  நினைவுகள்!

  நினைவுகள்!

  இப்போது, இந்த நொடி நான் எனது வாழ்வில் புதிய நினைவுகளை சேமிப்பதை, புதிய நபர்களுடன் பழகுவதை நிறுத்திக் கொண்டாலும் கூட, வாழ்நாள் முழுக்கு நினைத்து நினைத்து சந்தோசப்பட தேவையான அளவுக்கு மிகுதியான நினைவுகள் என் வாழ்வில் நடந்துள்ளன.

  ஆனால், என் வாழ்வில் இந்த சம்பவம் நடந்த பிறகு, நான் என் விதியை நம்பி, கால் போன போக்கில் பயணித்து வருகிறேன்.

  12ம் வகுப்பு

  12ம் வகுப்பு

  அப்போது நான் 12ம் வகுப்பு பயின்று வந்தேன். என் வகுப்பில் பயின்று வந்த பல பெண்களும், ஆண்களும் கல்லூரியில் சேரும் முன் ஒரு பிக்னிக் சென்று வரலாம் என முடிவு செய்தார்கள். பிக்னிக் என்றால் சாதாரணமாக அல்ல, அதுவொரு நீண்ட தூர பயணமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் கனவாக இருந்தது.

  ஆண்கள்!

  ஆண்கள்!

  என் வகுப்பில் பயின்று வந்த ஆண்கள், பைக் ரைடு செல்லலாம். பெண்கள் எல்லாம் எங்கள் பைக்கில் வாருங்கள் என கூறினார்கள். அனைத்து பெண்களுக்கும் இது மிகவும் பிடித்திருந்தது. எனக்கு வேறு வழியில்லை என அந்த பயணத்தில் இணைந்துக் கொண்டேன். நான் குரு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எனும் என் வகுப்பு தோழனுடன் அந்த பயணத்தில் சேர வேண்டிய நிலை உண்டானது.

  நெருங்கிய தோழன்!

  நெருங்கிய தோழன்!

  குரு எனது வகுப்பில் மிகுவும் நெருங்கிய தோழன். அவன் மிக ஈர்ப்பான ஆண் எல்லாம் கிடையாது. ஆனால், இதர ஆண்களுடன் ஒப்பிடுகையில் இவனிடம் ஈகோ இல்லை, ஆதிக்கம் காண்பிக்க மாட்டான். மிகவும் பண்பான மாணவன். இதுவே இவனை சற்று தனித்துவப் படுத்திக் காண்பித்தது.

  ஆனால், அவனோ...

  ஆனால், அவனோ...

  ஆனால், அவனோ நேர் எதிராக நடந்துக் கொண்டான். மறுநாள் முதல் என்னுடன் பேசுவதை தவிர்த்தான். நான் அவனை கண்டால், உடனே அங்கிருந்து ஓடிவிடுவான். என்னை ஏதோ மூன்றாவது நபர் போல காண துவங்கினான்.

  நான் பள்ளி படிக்கும் போது மாநில அளவிலான பல விவாதப் போட்டிகளில் பரிசு வேண்டுள்ளேன். அதனால், யாருடனும் பேச இப்படி அஞ்சியதில்லை.

  காதல்?

  காதல்?

  மற்ற வகுப்பு தோழர்களிடம் இதுக் குறித்து விசாரித்த போது. குரு என் மீது காதல் கொண்டுள்ளான் போல என கூறினார்கள். என்னுள் அடக்க முடியாத சிரிப்பு. ஏனெனில், எனக்கு அப்படியான உணர்வு அதுவரை வந்ததே இல்லை. நாட்கள் கடந்தன.

  அவன் ஒருநாள் சீரியஸா நான் உன்ன காதலிக்கிறேன் என கூறி பிரபோஸ் செய்தான். என்னவோ தெரியவில்லை, மறுப்பு தெரிவிக்காமல் ஓகே என்று பதிலலித்துவிட்டேன்.

  சந்தோசம்!

  சந்தோசம்!

  அவன் சந்தோசத்தில் குத்தித்து மகிழ்ந்தான். என்னுடன் பேசவே அஞ்சி நடுங்கி வந்தவன், எனக்கு பிரபோஸ் செய்தது விந்தையாக இருந்தது. ஆனால், நான் மிகவும் பொறுமையாக இருந்தேன். ஏனெனில், அவனது இயல்பு குணம் என்ன என்பதை நான் அறிவேன். மீண்டும் கொஞ்சம் நாட்கள் கழிந்தன... நாங்கள் வெளியே சந்தித்துக் கொள்ள துவங்கினோம்.

  சண்டை!

  சண்டை!

  ஒரு நாள், நான், குரு மற்றும் மற்ற இரண்டு நண்பர்கள் வெளியே ஓரிடத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நாலைந்து அடியாட்கள் வந்து எங்களை தாக்கி எங்களிடம் இருந்த நகை மற்றும் பணத்தை திருடி சென்றனர். என்னுடன் இருந்த ஒரு பெண் மயங்கி கீழே விழுந்தாள். இரண்டு நாட்கள் கழித்து, அந்த குழுவில் இருந்த ஒருவன் குருவின் பர்ஸில் இருந்த அவரது தந்தையின் படத்தைக் கண்டு, திருடிய நகை, பணம் அனைத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டு சென்றான்.

  பவர்புல் ஆள்!

  பவர்புல் ஆள்!

  ஆம்! குருவின் தந்தை அந்த நகரின் பவர்புல் நபர். அவருக்கு அதிகாரமும், அதிகார வர்க்கத்தை சேர்ந்த நபர்கள் பலரும் நெருக்கமானவர்களாக இருந்தனர்.

  இந்த சம்பவம் நடந்த சில நாட்கள் கழித்து நானும் குருவும் பேசிக்கொள்ள வாய்ப்பு அமையவில்லை.

  அவனது நபர்கள் என்னிடம் வந்து, எக்ஸாம் முடிந்த பிறகு குரு உன்னிடம் பேசுவான் என கூறினார்கள்.

  பாஸ்?

  பாஸ்?

  நான் தேர்வில் பாஸ் ஆவேன் என யாருக்கும் நம்பிக்கை இல்லை. என் வாழ்வில் இந்த அனைத்து சம்பவங்களும் என் தேர்வின் போதுதான் நடந்தது. ஆனால், எனக்கு அது பெரிதாக தெரியவில்லை. குரு தேர்வு எழுத வந்தான், ஆனால், எனது முகத்தை ஏறெடுத்து கூட பார்க்காமல் சென்றுவிட்டான்.

  என்னை பார்த்தாலோ, என்னுடன் பேசினாலோ, கவன சிதறல் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் இருக்கிறான் என நான் கருதினேன்.

  முடிந்தது!

  முடிந்தது!

  தேர்வுகள் முடிந்தன. அப்போது அவனது நண்பர்கள் வந்து வேறு ஒரு புதிய காரணத்தை கூறினார்கள். தேர்வு ரிசல்ட் வெளியான பிறகு குரு என்னிடம் பேசுவான் என கூறி சென்றனர். ஓகே என்றே எண்ணினேன். சிலமுறை நான் அவனுக்கு கால் செய்தேன், அவன் எடுக்கவில்லை. சில சமயம் எடுப்பான், எடுத்துவிட்டு எதுவும் பேசாமல், போனை வெறுமென வைத்திருப்பான்..

  முடிவுகள்!

  முடிவுகள்!

  தேர்வு முடிவுகள் வெளியாகின. நான் பாஸ், ஆனால், அவன் ஃபெயில். அடுத்து அவனது நண்பர்கள் கூறவரும் காரணமும் நான் அறிவேன், ரீ-எக்ஸாம் முடிந்த பிறகு குரு பேசுவான் என்றனர். நான் அதற்கும் காத்திருந்தேன். ரீ-எக்ஸாம் முடிந்தன. அதிலும் அவன் பாஸ் ஆகவில்லை.

  அதன் பிறகு அவனிடம் பேசி, இதற்காக மனம் சோர்ந்துவிட வேண்டாம். நிச்சயம் அடுத்த முறை பாஸ் ஆகிவிடலாம் என கூறினேன். ஆனால், அவன் எதையும் காதுக் கொடுத்துக் கேட்கவில்லை.

  தைரியம்!

  தைரியம்!

  பிறகு குரு அவனது தந்தையின் தொழிலை செய்ய துவங்கினான். நான் அவனிடம் உண்மையான சமூகம் மற்றும் எப்படி அனைவருடனும் பழக வேண்டும் என பலமுறை கூறினேன். அவனும் மாறினான், மிக தைரியசாலியாக, உண்மை எது, பொய் எது என பிரித்துப் பார்க்க தெரிந்த ஆளாக உருவெடுத்தான்.

  இப்போது நான்...

  இப்போது நான்...

  அவனிடம் இந்த மாற்றங்களை கண்டு இப்போது நான் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தேன். தனக்கான பணத்தை அவனே சம்பாதித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு வயது 18 தான். நான் என்ஜினியரிங் படித்து வந்தேன். எனது ஒவ்வொரு நாளிலும் அவன் கலந்திருந்தான். என் இன்ப துன்பங்களில் அவனது பங்களிப்பு எப்போதுமே இருந்தது. நானும், அப்படியாக தான் அவனது வாழ்வில் கலந்திருந்தேன்.

  கம்பெனி!

  கம்பெனி!

  குரு தனது சொந்த கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி துவங்க திட்டமிட்டு கொண்டிருந்தான். அதற்கு அவனது தந்தையும் உதவுவதாக கூறியிருந்தார். அப்போது எனக்கு ஒரு எம்.என்.சி கம்பெனியில் வேலை கிடைத்தது. எங்கள் இருவருக்கும் அப்போது வயது 24. அவன் குழந்தைகள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு என தனி பள்ளியை திறந்தான்.

  அச்சம்!

  அச்சம்!

  குருவுக்கு இருந்தே ஒரே அச்சம் என் மீதானது தான். எனக்கு எதாவது ஆகிவிடுமோ என்ற பயம் அவனிடம் அதிகமாக இருந்தது. என்னை வேலைக்கு போக வேண்டாம், என் அருகிலேயே இரு என கூறினான். தன்னுடன் நீ இரு... நீ சம்பாதிக்கும் பணத்தை ஊதியமாக தருகிறேன் என கூறினான்.

  அப்போது தான் எனது அண்ணனுக்கு குரு பற்றி தெரிய வந்தது. என்னை தகாத வார்த்தைகளால் திட்டினான். அதன் பிறகு நான் எனது அண்ணனுடன் பேசுவதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டேன். என் ஒட்டுமொத்த குடும்பத்திடமும், நான் குருவை தான் திருமணம் செய்துக் கொள்ள போகிறேன் என கூறினேன்.

  சச்சரவுகள்!

  சச்சரவுகள்!

  ஒருபுறம் அண்ணின் அதட்டல், மறுபுறம், குரு என் மீது கோபத்தை காண்பிக்க துவங்கினான். அம்மா செண்டிமெண்ட் பிளாக் மெயில் செய்து வந்தார். இதற்கெல்லாம் இடையில், நான் இந்த காதலே வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டேன். ஆனால், குரு என்னை விடுவதாக இல்லை. அவனால் நான் இல்லாமல் வாழ முடியாது என்பதை, அவனை காட்டிலும் நான் நன்கு அறிவேன்.

  ஆனால், பிரிவு தான் முடிவு என்ற நிலை பிறந்தது.

  பிரிவோம்...

  பிரிவோம்...

  குருவிடம் நேரே சென்று, எல்லாம் முடிந்துவிட்டது. இனிமேல், நாம் இணைய முடியாது என கூறினேன். அவன் எத்தனையோ முயற்சித்தும் நான் சமாதானம் ஆகவில்லை. வீட்டில் அனைருக்கும் அதிர்ச்சி, எப்படி நான் குருவை பிரிந்து வந்தேன் என. வேறு ஒரு நபரை மாப்பிள்ளை பார்த்தனர்.

  பெண்களுக்கே என பொதுவாக எழுதப்பட்ட தலையெழுத்து என கருதி, அவரை திருமணம் செய்துக் கொண்டேன். திருமணத்திற்கு பிறகு வெளிநாடு சென்றுவிட்டோம்.

  இரண்டு வருடங்களில் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. என் கணவர் என்னை மிகவும் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டார். என் குழந்தை பிறந்த பிறகு நான் உண்மையான காதல் என்றால் என்ன என்பதை உணர்ந்தேன்.

  அழைப்பு!

  அழைப்பு!

  திடீரென என பள்ளி நண்பர்களிடம் இருந்த அழைப்பு வந்தது. என் திருமணத்தை அறிந்து, குரு தடுக்க வந்ததாகவும், அவரது அப்பா தான் தடுத்து பூட்டி வைத்துவிட்டார் என்றும் கூறினார்கள் அதற்கு என்ன என்றேன். இல்லை, குரு எலும்பு புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறான். தனது கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறான். உன்னை பார்க்க வேண்டும் என்பது அவனது ஆசை. ஆனால், அதை அவன் வெளியே யாரிடமும் கூறமால் மறைத்து வைத்திருக்கிறான் என கூறினார்கள்.

  கதறி எழுதேன்!

  கதறி எழுதேன்!

  என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் கதறி எழுதேன். எனது கணவரிடம் இதுக்குறித்து பேசினேன். அவன் நான் இந்தியா திரும்ப ஏற்பாடு செய்தார். குருவை பார்த்து வர அவசர அவசரமாக கிளம்பினேன். நான் அவன் வீட்டை அடைந்த போது, அவன் இறந்த செய்தி மட்டுமே எனக்கு மிஞ்சியது. நான் அவனுடனே இருந்திருக்க வேண்டும்.

  நான் இல்லாமல் அவனால் இருக்க முடியாது என தெரிந்தும் அவனை பிரிந்து வந்தேன். நான் இல்லாமல் அவன் இந்த உலகைவிட்டே சென்றுவிட்டான்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  I Dont Want To Turn Back, Just Wanna Go With the Flow - My Story!

  I Dont Want To Turn Back, Just Wanna Go With the Flow - My Story!
  Story first published: Saturday, December 30, 2017, 13:45 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more