For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என் இரவுகளை களவாடி, என்னை காரிருளுக்குள் அடைத்து சென்றான்... My Story #107

|

"என்னை 'அஞ்சாதவள்' என பொருள் தரும் பெயர் வைத்தே அழைத்து வந்தான் அவன். என் இதழில் அதிகம் புன்னகை நிறைத்தவன் எவனோ, அவனே என் கண்களில் அதிக நீர் நிறைத்தான்."

நான் விழுப்புரம் அருகே ஒரு டவுன் பகுதியில் பிறந்து வளர்ந்தவள். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து நான் சுதந்திரத்துடன் தான் வாழ்ந்து வருகிறேன். எனக்கு என் பெற்றோர் எவ்வளவு சுதந்திரம் அளித்தார்களோ, அந்த அளவிற்கு அவர்கள் மீது மதிப்பும், மரியாதையும் கொண்டவள் நான்.

என்னை கேட்காமலே எனக்கான அனைத்தையும் ஏற்படுத்தி கொடுத்தார்கள் என் பெற்றோர். அவர்கள் குறைக் கூறாதப்படி வளர்ந்து வந்தேன். என் திருமணம் என் அனுமதியுடன் பெற்றோரால் நிச்சயம் செய்யப்பட்டது. இது எனக்கு பிடித்த திருமணம் அல்ல. ஆனால், நான் கட்டாயம் ஏற்றுக் கொள்ள வேண்டிய திருமணம்.

நான் தினம், தினம் மறக்க நினைக்கும் பொழுதுகள் என ஓராயிரம் இரவுகள் இருக்கின்றன... அவற்றுக்கு உரிமையாளனாக ஒருவன் இருந்தான்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்ட்ரிக்ட் காலேஜ்!

ஸ்ட்ரிக்ட் காலேஜ்!

நான் சென்னைக்கு முதன் முறையாக சென்றது கல்லூரி பயில தான். என்னுடைய நான்காண்டு கல்லூரி வாழ்க்கையில் நான் சென்னையை சுற்றிப் பார்த்ததில்லை என்றால், எப்படிப்பட்ட ஸ்ட்ரிக்டான காலேஜில் நான் படித்திருப்பேன் என்று நீங்கள் ஓர் முடிவுக்கு வர இயலும். ஹாஸ்டல் ஸ்டூடன்ட் என்பதால் எங்களுக்கான கெடுபிடி இன்னமும் அதிகமாக இருந்தது.

ஃபைன்!

ஃபைன்!

என் கல்லூரியில் தொட்டது தொன்னூருக்கும் ஃபைன் (Fine) தான். ஆண்களுடன் பேசினால் ஃபைன், ஹாஸ்டல் ஸ்டூடண்ட்ஸ் வெளியே சென்று அரைமணிநேரம் தாமதமாக திரும்பினால் ஃபைன் என காசு பிடுங்குவது மட்டுமே கல்லூரி நிர்வாகத்தின் வேலையாக இருந்தது. இதனால், பெரும்பாலும் வெளியே செல்வதையும், ஆண்களுடன் பேசுவதையும் தவிர்த்துவிடுவோம்.

வார்டன்!

வார்டன்!

ஆண்கள் ஹாஸ்டல், பெண்கள் ஹாஸ்டல் என தனித்தனி வார்டர்ன்கள். நிர்வாகத்திற்கு ஏற்ற ஒரு ஸ்ட்ரிக்ட் பெண் வார்டன் எங்களுக்கு. அவரிடம் இருந்து எதையும் மறைக்க முடியாது. பிக் பாஸ் போல தான் ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது. அவர் குச்சியை எடுத்து இரவு ரவுண்ட்ஸ் வந்து செல்வது வரை உறங்குவது போல நடிக்க வேண்டும். இல்லையேல் நிம்மதியாக எதுவும் பேசக் கூட முடியாது.

திருட்டு போன் கால்!

திருட்டு போன் கால்!

எங்கள் பெண்கள் ஹாஸ்டலில் சில காதல் ஜோடிகள் இருந்தன. எப்போதுமே சைலன்ட் மோடில் இருக்கும் அவர்களது போனில் முனங்கள் சப்தம் இரவு 12 மணிக்கு மேலாக தான் ஒலிக்க துவங்கும். எப்படியும் அவர்கள் பேசி முடிக்கும் வரை தூக்கம் வராது. ஒரு பக்கம் நமக்கு இப்படி ஒரு பாய் ஃபிரெண்ட் இல்லையே என்ற எண்ணம்.

இன்னொரு முக்கியமான விஷயம்... சப்தம் போட்டு பேசும் போது கூட தூங்கி விடலாம். ஆனால், இந்த முணுமுணுத்துக் கொண்டிருக்கும் சப்தம் கேட்டால் தூக்கம் வராது. நமது காதுகள் பெரிதாகி அப்படி அவர்கள் என்னதான் பேசுகிறார்கள் என கேட்க துவங்கும்.

ஃபேஸ்புக் ஃபிரெண்ட்!

ஃபேஸ்புக் ஃபிரெண்ட்!

அப்போது தான் ஃபேஸ்புக் அதிகமாக பிரபலமாக துவங்கிய காலம் என கருதுகிறேன். ஸ்மார்ட் போன்களின் வருகை கொஞ்சம் குறைவு தான். நோக்கிய E71 புழக்கத்தில் இருந்த நாட்கள். ஃபேஸ்புக் எனக்கு அறிமுகம் ஆனதும் அப்போது தான்.

பல பள்ளித் தோழர்கள், தோழிகளின் நட்பு மீண்டும் புத்துயிர் பெற்றது. நிறைய நண்பர்கள் சேர்ப்பதில் போட்டியே நிலவும். வரும் ஃபேஸ்புக் ரெக்வஸ்ட் எல்லாம் அக்சப்ட் செய்வது, People You May Knowவில் யாரெல்லாம் அம்சமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு ரெக்வஸ்ட் அனுப்புவது என ஹாஸ்டலில் நாட்கள் கழிந்தன.

என் ஃபேஸ்புக்!

என் ஃபேஸ்புக்!

தோழிகளின் நச்சரிப்பு மற்றும் பெற்றோரின் அன்பளிப்பாக என் கைக்கும் வந்து சேர்ந்தது ஒரு ஸ்மார்ட்போன். நான் அதிகமாக நண்பர்கள் எல்லாம் சேர்த்துக் கொள்ளவில்லை. நான் அறிந்தே சேர்த்துக் கொண்ட அறிமுகம் இல்லாத ஒரே ஆள் அவன் தான்.

பார்த்ததும் ஒரு ஈர்ப்பு. என் பள்ளி தோழனின் சகோதரன் அவன். பெரிய அழகெல்லாம் இல்லை. ஆனால், அவனிடம் ஒரு ஈர்ப்பு இருந்தது. தமிநாட்டு முகம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

நானும் அதிகமாக 'ஹ்ம்ம்... அப்பறம்...' என்ற வார்த்தைகள் பயன்படுத்த காரணமாக இருந்தவன் அவன்தான்.

ரெக்வஸ்ட், அக்ஸப்ட்!

ரெக்வஸ்ட், அக்ஸப்ட்!

ரெக்வஸ்ட் அனுப்பிய சில மணிநேரங்களில் அக்ஸப்ட் செய்தான். அந்த சில மணி நேரங்கள் வேண்டுமென்றே அவன் எடுத்துக் கொண்டது. என் தோழன் மூலம் சொல்லி தான் நான் ரெக்வஸ்ட் அனுப்பினேன். ஆகவே, நான் அனுப்பியதும் கண்டும் கூட சில மணிநேரங்கள் எடுத்துக் கொண்டான் அவன். அவனிடம் ஒரு திமிர் இருக்கும், அது மிகவும் அழகானது.

அக்கறை அதிகம்!

அக்கறை அதிகம்!

யாராக இருந்தாலும் அவன் அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்வான் என பேசிய இரண்டு நாட்களிலேயே புரிந்துக் கொள்ள முடிந்தது. அதிகமாக சமூக அக்கறையும், தமிழ் மொழி மீது அதிக பற்றும் கொண்டவன். பெரும்பாலும் தான் பேசும் வார்த்தைகளில் தமிழ் சொற்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்வான். நாம் தமிழை ஆங்கிலத்தில் எழுதுவது போல, ஆங்கிலத்தை தமிழில் எழுதி, பழிக்குபழி வாங்குகிறேன் என கூறுவான்.

வித்தியாசமானவன்!

வித்தியாசமானவன்!

எதையும் கொஞ்சம் வித்தியாசமாகதான் செய்வான். அவன் பேசும் விதத்தில் இருந்து, ரசிக்கும் விதம் வரை அனைத்திலும் வித்தியாசங்கள் நிறைந்திருக்கும். அந்த வித்தியாசம் தான் அவன் மீது நான் காதலில் விழ முக்கிய காரணமாக இருந்தது. அவனது நடை, உடை, பாவனை எல்லாம் 'அட, இவன் முரடன் போல...' என்ற தோற்றத்தை அளக்கும். ஆனால், அவனிடம் விளையாட்டுத்தனம் கொஞ்சம் அதிகம். அதை வெகு சிலரால் மட்டுமே அறிந்துக் கொள்ள முடியும்.

இதற்கும் நாங்கள் இருவரும் நேரில் பார்த்துக் கொண்டது இல்லை. எங்களுக்குள்ளான தொடர்பு போன் அழைப்புகள், வீடியோ கால், சாட்டிங் மட்டும் தான்.

களவாடிய பொழுதுகள்!

களவாடிய பொழுதுகள்!

நான் உறங்கும் போது கடைசியாக பார்ப்பது அவனுடைய செய்தியாக தான் இருக்கும். நான் கண்விழித்ததும் பார்க்கும் முதல் செய்தியும் அவன் அனுப்பியதாக தான் இருக்கும். ஷார்ப்பாக காலை 7 மணியில் இருந்து இரவு 10 மணி வரை எந்த ஒரு செய்திகளோ, காலோ இருக்காது. அவனது வேலை பெரும்பாலும் நள்ளிரவு வரை நீடிக்கும். அவனது ஃப்ரீ டைம் 10 மணிக்கு மேலாக தான் இருக்கும். எப்படியும் 12 மணிக்கு பேச துவங்கினால் 2 - 3 மணி வரை பேசிக் கொண்டே இருப்போம். அதில் பெரும்பாலான பகுதி ஹ்ம்ம்... அப்பறம் தான்.

இது தான் காதலா?

இது தான் காதலா?

நான் கண்ட வரை இது தான் காதல் என்று எண்ணியிருந்தேன். நான் அவன் மேல் கொண்ட காதலும் இப்படியாக தான் இருந்தது. சில சமயம் அவன் சாப்பிட்டுவிட்டானா? உறங்கிவிட்டானா? என்பதை அறிந்துக் கொள்ளாமல் என்னால் உறங்கவே முடியாது. அவன் ரிப்ளை செய்யும் வரை அழைத்துக் கொண்டே இருப்பேன். அவன் பலமுறை 'நான் ரிப்ளை செய்யவில்லை என்றால் பிஸி என்பதை புரிந்துக் கொள்' என கூறியும் அவை என் புத்திக்கு எட்டவில்லை.

அரமெண்டல்!

அரமெண்டல்!

இதற்காகவே என்னை அடிக்கடி 'அரமெண்டல்' என கூறிக் கொண்டிருப்பான். இதை அவன் கூறி கேட்கும் போது உள்ளுக்குள் ஒரு உணர்வு சிறகடித்து பறக்கத் துவங்கும். ஆனால், இத்தனைக்கும் நடுவே நான் அவனை காதலிக்கிறேன் என்றோ, அவன் என்னை காதலிக்கிறான் என்றோ கூறியதே இல்லை. மாறாக, எனது தோழியைப் பிடித்திருக்கிறது எனக் கூறி என்னை கடுப்பேற்றியுள்ளான்.

தோழிகள்!

தோழிகள்!

'லவ் இல்லாம எவனாச்சும் இத்தன மணிக்கு இவ்வளோ நேரம் பேசுவானா.. அவனும் லவ் பண்ணுவான் போல தான்' என தோழிகள் கூறினார்கள். ஆயினும், ஒருமுறை கூட அவன் என்னிடம் தவறாகவோ, காதலிப்பது போன்றோ பேசியதே இல்லை என்பது எனக்குள் ஒரு சந்தேகத்தையும், கேள்விக்குறியையும் எட்டிப்பார்க்க வைத்துக் கொண்டிருந்தது. கல்லூரி நாட்கள் முடியட்டும் காதலைக் கூறலாம் என காத்திருந்தேன்.

உண்மையில், கல்லூரி முடிந்தவுடன் அவன் வேலை செய்யும் பெங்களூருக்கே சென்று வேலை பார்க்கலாம் என்ற எண்ணமும் இருந்தது.

ஒரு நாள்...

ஒரு நாள்...

ஒரு நாள் எப்போதும் போல அவனது அழைப்புக்காக காத்திருந்தேன். அன்று இரவு பத்து மணிக்கு மேலும் அவனிடம் இருந்து கால் இல்லை. நானாக 10, 15 முறைக்கு மேல் கால் செய்தும் ஏற்கவில்லை. சரி பிஸியாக இருப்பான் என நினைத்தேன். மறுநாள் காலை அனுப்பிய செய்திக்கும் ரிப்ளை இல்லை. கல்லூரிக்கு நேரமானது. போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்துவிட்டு கிளம்பிவிட்டேன்.

மாலை வந்து மொபைல் ஆன் செய்து பார்த்த போதும், அவனிடம் இருந்து எந்த செய்தியும், அழைப்பும் வந்ததாக தெரியவில்லை. நாங்கள் பேச ஆரம்பித்து நாளில் இருந்து அன்று வரை 24 மணி நேரத்திற்கு மேல் நாங்கள் பேசாமல் இருந்த நாளே இல்லை. இது தான் முதல் முறை.

மாலை 7 மணி...

மாலை 7 மணி...

அன்று மொபலை மட்டுமே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். மாலை ஏழு மணி இருக்கும். அவனிடம் இருந்த கால் வந்தது. ரிங் ஆனவுடன் எடுத்துவிட்டேன். எப்போதும் போல ஏதோ சீரியஸாக பேசுவது போல ஆரம்பித்தான். 'எப்படி சொல்வதென தெரியவில்லை. இது தான் முதல் முறை... ஒரு புதுவித உணர்வு..' என இழுத்துப் பேசிக் கொண்டே இருந்தான்.

'சரி, என்னாச்சு, ஏன் நேத்து கால் பண்ணல' என்று கேட்டேன்.

அதற்கு அவன் கூறிய பதிலில் முதல் ஓரிரு வார்த்தைக்கு மேல், அவன் பேசிய எதுவும் என் காதில் விழவில்லை.

காதல்!

காதல்!

அவனது சிறுவயது தோழியை கண்டதாகவும். அவளும், இவனும் ஒருவரை பிரபோஸ் செய்துக் கொண்டதாகவும் கூறினான். அப்படி ஒரு சிறு வயது தோழி இருக்கிறாள் என எனக்கு தெரியும். ஆனால், அவளிடம் எவ்வளவு நெருக்கம், எப்படியான உறவு என்பது குறித்து எதுவும் தெரியாது. எனக்கு இது முற்றிலும் அதிர்ச்சியாக இருந்தது.

எப்படி?

எப்படி?

ஓரிரு நிமிடங்கள் கழித்து, 'எப்படி இந்த திடீர் காதல் முளைத்தது?' என கேட்டேன்.

'திடீர் காதல் எல்லாம் இல்லை. உன்னை போலவே அவளும் என் தோழி தான். எங்களுக்குள் காதல் வந்ததே எங்களுக்கு தெரியாது. அதை எப்படி விளக்குவது என தெரியவில்லை. முதன் முறையாக அவளை ஒரு வாரம் பிரிந்திருந்த போதுதான் அவளை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை உணர முடிந்தது' என கூறினான்.

அப்போ நான் யாரு?

அப்போ நான் யாரு?

அவன் அவ்வளவு மகிழ்ச்சியாக பேசி, அதற்கு முன் நான் கேட்டதே இல்லை. அப்போ அவன் என்னை ஒருநாள் கூட மிஸ் செய்ததே இல்லையா என்ற கேள்வி எனக்குள். என்னை அவன் மிஸ் செய்யும் படியாக நான் எதுவும் செய்ததும் இல்லை. அதன் பிறகு தான் எங்களுக்குள் நான் மட்டுமே காதலித்துள்ளேன், அவன் வெறும் நட்பாக மட்டுமே பேசியிருக்கிறான் என்பதை உணர முடிந்தது.

ஏமாற்றம் யாருக்கு..?

ஏமாற்றம் யாருக்கு..?

இது ஏமாற்றமோ, தவறோ செய்தது யாரும் இல்லை. நான் காதலாக உணர்ந்ததை, அவன் காதலாக உணரவில்லை. ஒருவேளை ஹாஸ்டலில் அனைவருக்கும் இருந்த பாய்ஃபிரெண்ட் எனக்கு இல்லையே என்ற எண்ணத்தின் காரணமாக நான் அவன் மீது காதல் கொண்டிருக்கலாமோ, அல்லது வெறும் நட்பை காதலாக உணர்ந்திருக்கலாமோ? என்ற கேள்விகள் பல எழுந்தன.

இல்லை!

இல்லை!

இல்லை, இல்லவே இல்லை! அவன் மீது நான் கொண்டிருந்தது நட்பில்லை... முழுமையான காதல் தான். அவனை என்னால் மறக்கவே முடியவில்லை. கல்லூரி முடிந்து சென்னையிலேயே வேலைக்கு சேர்ந்தேன். என் அலுவலகத்தில் ஒருவர் என்னை காதலிப்பதாக கூறினார். ஆனால், அவர் மீது எனக்கு காதல் வரவில்லை. வேறு யார் மீதும் என்று கூறலாம். காதல் என்ற வார்த்தை, காதல் பாடல்கள் என காதல் சார்ந்த எந்த ஒரு விஷயமும், செயலும் அவனை மட்டுமே என் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது.

எனக்கான வாய்ப்பு?

எனக்கான வாய்ப்பு?

ஒருவேளை நான் முதலே காதலிப்பதாக கூறி இருந்தால். அவன், அந்த தோழியை மிஸ் செய்ததாக உணராமல் இருந்திருந்தால். இந்நேரம் நான் அவனது காதலியாக இருந்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்கலாம்.

இனி, இவற்றை எல்லாம் யோசிப்பது தவறு. எனக்கானவன் என ஒருவருடன் நிச்சயம் ஆகிவிட்டது. இனியாவது அவனை மறக்க முயற்சிக்க வேண்டும். அவனது நினைவுகள் என்னை தடுமாற செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எத்தனையோ?

எத்தனையோ?

இப்படி சொல்லாமலே பிரிந்த காதல்கள் எண்ணிலடங்காதவை என அறிகிறேன்.

நேரம் பொன் போன்றது என்பார்கள். காதலில் நேரம் என்பது பொன்னுக்கும் மேல். ஒருவேளை உங்களுக்கு அந்த நபர் மீது காதல் இருந்தால்... சரியான நேர்த்தில் உடனே கூறிவிடுங்கள். முதல் காதல் விலைமதிப்பற்றது. மேலும், இதயத்தில் பெரும் தழும்பை உருவாக்கக் கூடியது. இதை மறக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

He Snatched All My Nights and Dreams, Then Left Me Alone on Darkness: My Story

He Snatched All My Nights and Dreams, Then Left Me Alone on Darkness: My Story
Story first published: Thursday, December 14, 2017, 10:00 [IST]