பார்வையிழந்து,முகம் சிதைந்து படுக்கையில் காதலி!உயிரூட்டிய காதலன்!! My story #71

Subscribe to Boldsky

காதல் அழகைப் பார்த்து வருவதில்லை எச்சூழலில் இருந்தாலும் இந்த எரிதழலில் நம் புற அழகு பொசுங்கிப்போனாலும் உள்ளத்தைப் பார்த்து வரக்கூடிய காதல் என்றுமே நிற்காது என்பதாற்கான சாட்சியாக உங்கள் மனங்களை உருக வைக்கக்கூடிய ஒரு உண்மை சம்பவத்தை பற்றிய கதை தான் இது.

முகமெல்லாம் எரிந்து சிதைந்து, பார்வையே பறிபோய் எழுந்து நிற்க கூட முடியாமல் நான்கு வருடங்களாக படுக்கையில் கிடக்கும் பெண்ணைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்... ஐயோ பாவம் என்ற பரிதாப்படுவீர்கள், பிறகு ஏதேனும் பண உதவி செய்யலாம் என்று தோன்றும் அவ்வளவு தானே

Emotional love story about a acid attack survivor

Image Courtesy

ஆனால் இக்கதையின் நாயகன் சரோஜுக்கு என்ன தோன்றியது தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேசிக்க :

நேசிக்க :

அவளை நேசிக்க வேண்டும் என்று தோன்றியது. வாழ்க்கை முழுவதும் அவளை கரம் கோர்த்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று தோன்றியது. அந்தப் பெண்ணை மனப்பூர்வமாக நேசிக்கத் துவங்கினார்.

ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? முழுக்கதையையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

Image Courtesy

விலகி நடக்க ஆரம்பித்தாள் :

விலகி நடக்க ஆரம்பித்தாள் :

சில வருடங்களுக்கு முன்னர் ப்ரமோதினி ரவுல் என்ற பதினைந்து வயதுச் சிறுமி தன்னுடைய பத்தாம் வகுப்பு தேர்வு முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் 28 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபன். சில நாட்களாக தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்திக் கொண்டிருக்கும் அதே வாலிபன் இன்று தன்னை நோக்கி எதிரில் வந்து கொண்டிருக்கிறான்.

இன்றும் தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி கெஞ்சுவான், சண்டைபிடிப்பான் என்ற எண்ணத்தில் சற்று விலகி நடக்க ஆரம்பித்தார் பிரமோதினி.

Image courtesy

அமிலம் :

அமிலம் :

இருவரும் எதிர் எதிரில் சந்தித்துக் கொண்டார்கள். திருமணம் செய்து கொள்... என்று அவன் சொல்ல பள்ளிப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் இந்த சிறுமியால் என்ன பதில் சொல்லிட முடியும்.

பயத்துடன் சுற்றி முற்றியும் பார்த்தபடி இல்லை முடியாது என்று சொல்லியிருக்கிறாள். உடனேயே ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அந்த இளைஞன் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து ப்ரமோதினியின் முகத்தில் வீசிவிட்டு தப்பியோடிவிட்டான்.

Image Courtesy

 உருகி வழிந்த சதை :

உருகி வழிந்த சதை :

சதையெல்லாம் உருகி வலிய கதறியபடி சுருண்டு விழுந்திருக்கிறார் ப்ரமோதினி . முகம் முற்றிலுமாக சிதைந்து விட்டது. இரண்டு கண்களிலும் பார்வை பறிபோய்விட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ப்ரமோதினி.

சுமார் நான்கு மாதங்கள் வரை ஐ சி யு விலேயே இருந்தார். அதன் பின்னர் இடது கண்ணில் மட்டும் லேசாக பார்வை தெரிய வாய்ப்பிருக்கிறது என்று சொல்லி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

Image Courtesy

சிகிச்சை :

சிகிச்சை :

தொடர்ந்து பல்வேறு அறுவை சிகிச்சைகள். அமில வீச்சால் பாதிக்கப்பட்ட இடம் ஓரளவேனும் சரியாகாதா என்ற ஆசையில் தொடர்ந்து சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

பத்து வருடங்கள் வரை அந்த கொடுமைகளை அனுபவித்தார் ப்ரமோதினி. இடுப்புக்கீழே செயல்படாத நிலையினால் நான்கு வருடங்கள் வரை படுத்தப்படுக்கையானார். அவரை பராமரிக்கும் பொறுப்பு, கணவனை இழந்த அந்த தாயின் கையில் குடும்பச் சுமை மட்டுமல்லாது மகளின் துயரமும் சேர்ந்து கொண்டது.

Image Courtesy

தாயின் குரல் :

தாயின் குரல் :

தினமும் சாப்பிடுவதற்கும் மகளின் மருத்துவத்திற்கும் சம்பாதிப்பதை விட காயங்களுக்கு மருந்திடும் வேலை தான் பெரும் கொடுமையானது. ஒவ்வொரு நேரமும் நான் மருந்திடும் போது அவள் வலியால் துடிப்பதை என்னால் சகித்துக் கொள்ளவே முடியாது என்கிறார் அந்தத் தாய்.

Image Courtesy

காதல் :

காதல் :

கடுமையான மன உளைச்சலில் பாதிக்கப்பட்டார் ப்ரமோதினி. இனி நான் பிழைக்க வழியில்லை. இனி நான் யாருக்கும் சிரமம் கொடுக்காமல் இறந்து விடுவது தான் நல்லது. என் வாழ்நாள் முடிந்தது என்று நினைத்து தான் இறந்து விட வேண்டும் என்றே நினைத்திருந்தார்.

ஆனால் விதி வேறு விதமாக விளையாடியது. தான் வாழ வேண்டும் இந்த காதலுக்காக தான் மீண்டு வர வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்தது சரோஜின் காதல்.

கால் :

கால் :

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ப்ரமோதினியை பராமரிக்கும் நர்ஸின் நண்பராக சரோஜ் குமார் ப்ரமோதினிக்கு அறிமுகமாகியிருக்கிறார். நாளைடைவில் சரோஜுக்கு ப்ரமோதினியின் மீது காதல்.

மார்ச் 2014 ஆம் ஆண்டு தான் இருவரும் முதன் முதலாக சந்தித்திருக்கிறார்கள். ப்ரமோதினியின் காலில் சலம் கட்டி இன்ஃபெக்‌ஷன் ஆகிவிட்டிருக்கிறது. கால்களில் ஏற்படக்கூடிய ஒட்டுண்ணியால் தொற்று ஏற்பட்டது.

4 வருடங்கள் :

4 வருடங்கள் :

இதனால் மருத்துவமனைக்கு பதிலாக வீட்டில் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கலாம் என்ற யோசனை முன் வைக்கப்பட்டது. ப்ரமோதினி எழுந்த நடக்க நான்கு வருடங்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

யாரும் உதவ முன் வராத நிலையில் கையறு நிலையில் அழுது கொண்டிருந்த அவரது அம்மாவைப் பார்த்து சரோஜ் உதவ முன் வந்திருக்கிறார்.

Image Courtesy

சரோஜ் வார்த்தைகள் :

சரோஜ் வார்த்தைகள் :

ஆரம்பத்தில் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. சுமார் 15 நாட்களுக்கு பிறகு தான் பேசிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.தொடர்ந்து பேசி மன அழுத்தத்திலிருந்து மீண்டு வர உதவியிருக்கிறார்.

ஒரு நாள் ப்ரமோதினியின் முன்னேற்றம் குறித்து மருத்துவரிடம் கேட்ட போது பாசிட்டிவான தகவல் கிடைக்காததால் அவரது அம்மா இடிந்து விழ அவரை தேற்றிய சரோஜ், அவள் மீண்டு சகஜ நிலைக்கு திரும்பும் வரை நான் உடனிருப்பேன் என்று உறுதியளித்திருக்கிறார்.

அவள் மீண்டு வருவதற்கான எல்லா முயற்சிகளையும் நான் மேற்கொள்வேன் என்று சரோஜ் கொடுத்த வாக்கும் வெறும் வார்த்தைகளாக அல்லாமல் செயல் வடிவமும் பெற்றது.

Image Courtesy

வேலையை துறந்த சரோஜ் :

வேலையை துறந்த சரோஜ் :

ப்ரமோதினியை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை துறந்தார் சரோஜ். எட்டு மணி நேரம் ப்ரமோதினி அருகிலேயே இருந்து பார்த்துக் கொண்டார். தினமும் அவளை ஊக்கப்படுத்தினார்.

Image Courtesy

ப்ரமோதினி :

ப்ரமோதினி :

இது குறித்து ப்ரமோதினி கூறுகையில்.

எனக்கான தேவைகள் என்ன என்பதையரிந்து சரோஜ் சிறப்பாக என்னை கவனித்துக் கொள்கிறான். தினமும் என்னுடன் பேசுவான். அவனது பேச்சு தான் என்னை ஊக்கப்படுத்தியது.

எழுந்து வர வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்தது. கண்பார்வை இழந்து, படுத்தப்படுக்கையாக கிடந்த போது கடுமையான மனவுளைச்சலில் இருந்தேன் அந்த நாட்களை சரோஜ் இல்லையென்றால் என்னால் மீண்டு வந்திருக்கவே முடியாது.

என்னுடைய தன்னம்பிக்கை அவன் தான்.

Image Courtesy

மருந்து :

மருந்து :

எனக்கான மருந்து போல அவன் இருந்தான்.நான் சரோஜுடன் வாழும் போது ஒரு மகாராணியாகவே வாழ்ந்தேன். என்னை முழுவதுமாக நேசிக்கிறார் சரோஜ். எல்லா விஷயங்களிலும் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்.

ஆம், சரோஜ் என்னில் ஒரு அங்கம். இந்த உலகத்தை இப்போது புதிதாக பார்க்கிறேன்.சரோஜ் மட்டும் இல்லையென்றால் இந்த கொடுப்பினை எல்லாம் எனக்கு கிடைத்திருக்காது.

Image Courtesy

வாழ்க்கைத்துணை :

வாழ்க்கைத்துணை :

இன்னும் சொல்லப்போனால் சரோஜ் எனக்கு கிடைத்ததற்கு நான் நிறைய அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன். அவன் என்னை புரிந்து கொண்டிருக்கிறான்.

எப்போதும் அவன் எனக்காக இருப்பான் என்பதே எனக்கு பெரும் தன்னம்பிக்கையை அளித்திருக்கிறது.

ஒருவரால் காதலிக்கப்படுகிறோம். உன்னில் இருக்கும் நல்லவைகளை அடையாளப்படுத்த, அதனை மெருகேற்ற ஒரு வாழ்க்கைத்துணை உங்களுக்கு கிடைத்து விட்டால் இந்த உலகத்திலேயே நீங்கள் தான் மிகவும் அதிர்ஷ்டசாலி! நான் அதிர்ஷ்டசாலி.

ஆக்ராவில் காதல் :

ஆக்ராவில் காதல் :

நாளுக்கு நாள் இவர்களது நட்பு தீவிரமாகிக் கொண்டேயிருந்தது. காதலும் மலர்ந்தது. மகளின் காதலுக்கு முதலில் தாய் தயங்கினார். இன்னும் மகள் முழுமையாக மீளவில்லை என்பதால் திருமணம் குறித்து கொஞ்சம் யோசித்தார்.

2016 ஜனவரி 14 ஆம் தேதி ஆக்ராவில் வைத்து சரோஜ் தன் காதலை ப்ரமோதினியிடம் சொல்லியிருக்கிறார். ப்ரமோதினிக்கும் சரோஜ் மீது காதல் இருந்திருக்கிறது ஆனால் வெளிப்படுத்தவில்லை.

ரொம்ப யோசிக்காத :

ரொம்ப யோசிக்காத :

தன் முகத்தைப் பார்த்த பிறகு, அவனின் காதலை ஏற்க கூடாது. என்னால் அவனுக்கு எந்த மகிழ்ச்சியையும் கொடுக்க முடியாது என்று நினைத்துக் கொண்டார் ப்ரமோதினி . நினைத்ததை மோப்பம் பிடித்து விட்டான் போல,

ரொம்ப யோசிக்காத... என்றான் சிரித்தபடி.

ஒரு நாள் வரும். அந்த நாளில் பிறரை மகிழ்ச்சிப்படுத்துகிற தன்னம்பிக்கையளிக்கிற இடத்தில் நீயிருப்பாய் என்றான்.

Image Courtesy

அறுவை சிகிச்சைகள் :

அறுவை சிகிச்சைகள் :

ஒரு கட்டத்தில் ப்ரமோதினியின் தாய் மற்றும் சரோஜ் குடும்பத்தினர் இருவருமே திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டார்கள். இன்னும் சில அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும்.

ப்ரமோதினியின் கழுத்தப்பகுதி உருகி கீழ்ப்பகுதியுடன் ஒட்டியிருக்கிறது. தலை முழுவதும் வழுக்கை விழுந்தது போல காட்சியளிக்கிறது இவற்றை சரி செய்ய இன்னும் சில அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும்.

மீண்டு வந்துவிட்டேன் :

மீண்டு வந்துவிட்டேன் :

விபத்து முடிந்த பல மாதங்கள் வரை பார்வையின்றியே இருந்தேன். அறுவைசிகிச்சைக்குப் பிறகு இடது கண்ணில் தெரிந்த லேசான பார்வையில் என் முகத்தை கண்ணாடியில் பார்த்த போது நான் முற்றிலுமாக உடைந்து விட்டேன்.

என் வாழ்க்கையே இத்துடன் முடிந்தது என்று நினைத்து அழுது தீர்த்தேன். என் சிகிச்சைக்கு நிறைய செலவாகும் அதை என்னுடைய அம்மா தனியாளாக எப்படி சமாளிப்பார் என்ற தவிப்பும் என்னுள் எழுந்தது. ஒருவழியாக இன்று என் காதலன் சரோஜினால் மீண்டு வந்திருக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

Image Courtesy

யார் குற்றவாளி? :

யார் குற்றவாளி? :

இன்று நான் சந்தோசமாக இருந்தாலும் இத்தனை ரணங்களையும் நான் சந்திக்க காரணமாக இருந்தவன், அன்றைக்கு என் முகத்தில் அமிலம் வீசியவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் தெரியுமா? அவனை இந்தச் சட்டமும் இந்த அராசங்கமும் என்ன தண்டனை கொடுத்திருக்கிறது தெரியுமா?

சுதந்திரமாக உளவ விட்டிருக்கிறது. ஆம், போதிய சாட்சிகள் இல்லையென்று 2012 ஆம் ஆண்டிலேயே அவன் விடுதலை செய்யப்பட்டுவிட்டான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  English summary

  Emotional love story about a acid attack survivor

  Emotional love story about a acid attack survivor
  Story first published: Tuesday, November 21, 2017, 14:00 [IST]
  இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more