For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் உறவில் இந்த கெமிஸ்ட்ரி இருக்கா? செக் பண்ணிக்கிங்க பாஸ்!

இருவர் மத்தியிலான உறவில் இருக்கும் கெமிஸ்ட்ரி என்ன? இதனால் இன்ப, துன்பங்கள் எப்படி நிகழ்கிறது என்பது பற்றி இங்கு காணலாம்.

|

உங்க பேஸ்ட்-ல உப்பு இருக்கா என்பதற்கு எடுத்து, தமிழகத்தில் டிவிகளில் நாம் கேட்ட அடுத்த மிக பெரிய கேள்வி, உங்கள் ஜோடில கெமிஸ்ட்ரி இருக்கா? ஜோடி நம்பர் ஒன் நிகழ்சிக்கு பிறகு தான் அறிவியலில் மட்டுமல்ல, உறவுகளில் கெமிஸ்ட்ரி இருக்கிறது என்பது பலருக்கு தெரியும்.

இந்த கெமிஸ்ட்ரி அப்படி உங்க உறவில் என்னவெல்லாம் நடக்க செய்கிறது? இதனால் உங்கள் உறவில் எப்படிப்பட்ட தாக்கங்கள் எல்லாம் எற்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிபுணர் கூறுவது என்ன?

நிபுணர் கூறுவது என்ன?

உறவுகள் சார்ந்த நிபுணர் ட்ரேசி காக்ஸ், கணவன் - மனைவி; காதலன் - காதலி என உங்கள் உறவில் கெமிஸ்ட்ரி இருக்க வேண்டியது அவசியம். கெமிஸ்ட்ரி இல்லாமல் உறவில் ஒரு அணுவும் சரியாக அசையாது என்கிறார். மேலும், கெமிஸ்ட்ரி இருந்தால் உங்கள் உறவில் அந்த தீ அணையாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்றும் கூறுகிறார் ட்ரேசி.

உளவியலாளர்கள்!

உளவியலாளர்கள்!

தம்பதிகள் ஒரு இணைப்பில் இருக்க ஐந்து முக்கிய கீகள் இருக்கின்றன என உளவியலாளர்கள் கூறுகின்றனர். இது தான் அவர்கள் தொடர்ந்து ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்க காரணியாக அமையும் என்றும் விளக்குகின்றனர்.

அந்த ஐந்து கீகள்...

அந்த ஐந்து கீகள்...

  • இணக்கத்தன்மை!
  • பொதுவான இலட்சியங்கள்!
  • வாழ்க்கை முழுவதும் ஒரே வேகத்தில் நகர்த்துவது!
  • சரியான நேரம்!
  • அடுத்த ஐந்தாவது ஒன்று தான் இந்த கெமிஸ்ட்ரி!
  • ஈர்ப்பு!

    ஈர்ப்பு!

    முதல் பார்வையில் வருவது காதல் அல்ல, அது ஒருவகையான ஈர்ப்பு. அது எப்படிப்பட்டதாக வேண்டுமானாலும் இருக்கலாம். பின்னாளில் அது காதலாக மாறலாம். ஒருசிலர் பேசாமல் இருந்த வரை எலியும், பூனையுமாக இருந்திருப்பார்கள். பேச ஆரம்பித்த சிறிது நேரத்தில் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிடுவார்கள். இது கூட கெமிஸ்ட்ரி தான்.

    கண்களால் கைது செய்!

    கண்களால் கைது செய்!

    இந்த கெமிஸ்ட்ரி என்பது சரியாக இருந்தால், நீங்கள் பேசி தான் காரியத்தை சரிசெய்ய வேண்டும் என்றில்லை. ஒரு கண் பார்வையில், உணர்வை வெளிப்படுத்தி தீர்வு கண்டுவிடலாம். இதற்கு உங்கள் உறவில் கெமிஸ்ட்ரி இருக்க வேண்டும்.

    உடனே பற்றிகொள்வது!

    உடனே பற்றிகொள்வது!

    கெமிஸ்ட்ரி என்பது, நின்று நிதானமாக ஏற்படுவது அல்ல. இரு ரசாயான பொருட்களுக்கு மத்தியில் ஒரு மாற்றம் உடனே ஏற்படுகிறதோ அப்படி தான் இது. இருவர் மத்தியில் உடனே பற்றிகொள்வது தான் கெமிஸ்ட்ரி. இது உங்கள் உறவில் வேகத்தை உண்டாக்கும். அது மகிழ்ச்சியாக இருக்கலாம், இணக்கமாக இருக்கலாம், பேரின்பமாக இருக்கலாம்.

    சிற்றின்பம் அல்ல!

    சிற்றின்பம் அல்ல!

    ஒரு உறவில் இருவர் மத்தியில் கெமிஸ்ட்ரி இருக்கிறது எனில், அது மூன்று நாட்களில் அல்லது மூன்று மாதத்தில் முடிவிற்கு வராது. கெமிஸ்ட்ரி இருக்கும் உறவுகள் நீடித்து நிலைக்கும்.

    ஆதி காலத்தில் இருந்து!

    ஆதி காலத்தில் இருந்து!

    கெமிஸ்ட்ரி என்பது இரு உடல் இணைப்பில் இருந்து வெளிப்படுவது அல்ல. மன ரீதியான இணைப்பும் தான் கெமிஸ்ட்ரி. இது தன்னிச்சையற்ற ஒன்று. கெமிஸ்ட்ரி உங்கள் இல்லறத்தில் மகிழ்ச்சி பல நாட்கள் நீடித்திருக்க செய்யும்.

    கெமிஸ்ட்ரி இழந்துவிட்டால்...

    கெமிஸ்ட்ரி இழந்துவிட்டால்...

    உங்கள் உறவில் நீங்கள் கெமிஸ்ட்ரியை இழந்துவிட்டால், உங்கள் உறவையும் இழக்க நேரிடும். கெமிஸ்ட்ரி என்பது உங்கள் இருவர் மத்தியில் அமையும் ஒரு பாலம். அது வலுவாக இருந்தால் தான் நீங்கள் இணைந்திருக்க முடியும்.

    எல்லா உறவிலும்!

    எல்லா உறவிலும்!

    காதல், இல்லறம் என்று மட்டுமில்லாமல், நட்பு, ஆசிரியர் - மாணவர் போன்ற உறவிலும் கெமிஸ்ட்ரி இருக்கும். ஒருசில வாத்தியார் எப்படி வகுப்பு எடுத்தாலும் மண்டையில் ஏறாது. ஆனால், சிலர் வகுப்பெடுக்கும் போது நமக்காக தானாய் ஒரு ஈர்ப்பு வரும், கவனிப்போம். இதுவும் கெமிஸ்ட்ரி தான்.

    எனவே, உணவில் எப்படி உப்பு அவசியமோ, அப்படி தான் உறவில் கெமிஸ்ட்ரி அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Does YOUR relationship have chemistry

Does YOUR relationship have chemistry? Sex expert reveals how to tell if you still have that spark
Story first published: Wednesday, January 18, 2017, 16:01 [IST]
Desktop Bottom Promotion