எந்தெந்த ராசிகாரர்களை, என்னென்ன விஷயங்கள் பெட்ரூமில் மூடவுட் ஆக்கும் என தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஒருவரிடம் ஒரு பொருள், வேலை அல்லது செயலின் மீதான விருப்பமும், ஈர்ப்பும் அவரவருடைய தனிப்பட்டு விருப்ப, வெறுப்பு சார்ந்தது. அந்த வகையில் ஒவ்வொரு ராசிக்கும் பொதுவான குணாதிசயங்கள், விருப்ப, வெறுப்பு இருக்கும் என கூறப்படுகிறது. இந்த விருப்ப, வெறுப்பு காரணமாக எந்தெந்த ராசிக்காரர்கள், எந்தெந்த விஷயத்திற்கு படுக்கை அறையில் மூடவுட் ஆவார்கள் என்றும் கூறுகிறார்கள்.

இது முழுக்க, முழுக்க, மனது மற்றும் செயற்பாடு குறித்தது ஆகும். ஒரு ராசிக்காரர் நகைச்சுவை திறன் அதிகமாக கொண்டிருக்கலாம். அவரடிக்கும் ஜோக்கிற்கு மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டால் அவர் மூடவுட் ஆவார், ஒரு ராசிக்காரர் எதையும் பொறுமையாக செய்யும் குணம் கொண்டிருப்பார், அவரிடம் வேகம் காண்பித்தால் அவர் மூடவுட் ஆகிவிடுவார்.

இப்படி எந்தெந்த ராசிக்காரர்கள், எந்தெந்த விஷயத்திற்கு மூடவுட் ஆகிறார்கள் என இந்த தொகுப்பில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷம் ராசிக்காரர்கள் நகைச்சுவை விரும்பிகளாகவும், ஜோக்ஸ் அதிகம் பகிரும் நபர்களாகவும் இருப்பார்களாம். வயிறுவலிக்க சிரிக்க தூண்டும் குணம் கொண்டுள்ளவர்கள் இவர்கள். எனவே, நீங்கள் சிரிக்க தயாராக இருக்க வேண்டும். ஒருவேளை அவர்கள் மொக்கை கடி ஜோக் அடித்தாலும் சிறிதளவில் இதழ்களை குவித்து போலி புன்னகையை தெளிக்க மறக்க வேண்டாம். நகைச்சுவை திறன் இன்மை இவர்களை அதிகமாக மூடவுட் ஆக்குமாம்.

ரிஷபம்!

ரிஷபம்!

உறவில் ஆழமான நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் ரிஷப ராசிக்காரர்கள். இவர்கள் உணர்வு ரீதியாக, உடல் ரீதியாக அதிக நெருக்கம் காண்பிக்கும் நபர்கள். ஒரு சிறிய உரையாடலாக இருந்தாலும் கூட அதிக கவனம் செலுத்துபவர்கள். நம்பகத்தன்மை இல்லை எனில், பொதுவாகவே அனைவரும் மூடவுட் ஆவது இயல்பு. இவர்களிடம் அது கொஞ்சம் அதிகமாகவே காணப்படும். முற்றிலும் உங்களுக்கு எதிராக மாறவும் வாய்ப்புகள் உள்ளன.

மிதுனம்!

மிதுனம்!

இவர்கள் சமூகத்தில் தங்களுக்கான இடத்தை யாரும் பறித்து விட கூடாது என்ற எண்ணம் கொண்டிருப்பார்கள். நண்பர்கள், நட்பு, வேலையிடம் என எதுவாக இருப்பினும், தான் தனக்கான இடத்தை கெட்டியாக பிடித்துக் கொள்ள முனைப்புடன் இருப்பார்கள்.

தன்னை விட தனது துணை, பெரியளவு புகழ் கொண்டால், இவர்கள் எளிதாக மூடவுட் ஆகிவிடுவார்கள்.

கடகம்!

கடகம்!

ஓர் நாள் முடிவு செய்து அன்று உறவில் இணைவதாக முடிவு செய்த பிறகு, பிளானை திடீரென மாற்றுவதை கடக ராசிக்காரர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அது எத்தனை முக்கியமான வேலையாக இருந்தாலும், இவர்கள் மன வருத்தம் கொள்வார்கள்.

சிம்மம்!

சிம்மம்!

உறவில் ஈடுபடும் போது பணிவாக நடந்துக் கொள்ளவில்லை எனில், சிம்ம ராசிக்காரர்களுக்கு கோபம் வந்துவிடுமாம். இது அவர்களுக்குள் துணை மீது ஈகோவும் வளர செய்யுமாம். எனவே, ஆதிக்கம் செலுத்த நினைக்காமல், இருவருக்கும் ஒத்துப்போகும் படி நடந்துக் கொள்வது சிறப்பு!

கன்னி!

கன்னி!

கன்னி ராசிக்காரர்களை காக்க வைப்பது மூடவுட் ஆக்குமாம். அது 30 நிமிடங்களாக இருந்தாலும் கூட அவர்கள் மூடவுட் ஆகிவிடுவார்களாம். அதிலும், முக்கியமாக படுக்கையறையில் வேறு வேலைகள் செய்துக் கொண்டு தாமதிப்பது வெகுவாக மூடவுட் ஆக்குமாம்.

துலாம்!

துலாம்!

துலாம் பொதுவாகவே பொறுமை உள்ளவர்கள் எனிலும். வெளியே பார்க்க பூவாக இருப்பவர்கள், உள்ளே பூகம்பமாக கூட இருக்கலாம் காட்டிக் கொள்ள மாட்டார்கள் என கூறப்படுகிறது. எதிலும் புதுமை எதிர்பார்க்கும் துலாம் ராசிக்காரர்கள், தாங்கள் விரும்பும்படி எதுவும் நடக்கவில்லை எனில் மூடவுட் ஆகிவிடுவார்களாம்.

விருச்சிகம்!

விருச்சிகம்!

விருச்சிக ராசிக்காரர்கள் எதிலும் பொறுமையை எதிர்பார்ப்பவர்கள்.ரொமாண்டிக்கானவர்கள் எனிலும், அதற்கான நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும். துணை அதிக வேகம் காண்பித்தல் இவர்களுக்கு பிடிப்பதில்லை. அவசரப்படுத்துதல் இவர்களை மூடவுட் ஆக்குகிறதாம்.

தனுசு!

தனுசு!

தங்களது ஆசையை துணை நிறைவற்றேவில்லை எனிலும், அதற்கு உடன்படவில்லை எனிலும் தனுசு ராசிக்காரர்கள் மூடவுட் ஆகிவிடுவார்களாம். இவர்களது ஈர்ப்பு எளிதாக திசைமாறிவிடும் என்பதால், இவர்களிடம் துணை கொஞ்சம் ஜாக்கிரதையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்.

மகரம்!

மகரம்!

மகர ராசிக்காரர்கள் கொஞ்சம் மூர்கமானவர்கள். ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதில் இருந்து தங்களை அவ்வளவு எளிதாக மாற்றிக் கொள்ள மாட்டார்கள். எந்த தருணத்தில் அவர்கள் அந்த உறவு பாதுகாப்பானது இல்லை என்று கருதுகிறார்களோ, அந்த நொடியே அவ்வுறவில் இருந்து வெளியேற முடிவு செய்துவிடுவார்களாம்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் உணர்வு ரீதியான பிணைப்பு அதிகம் கொண்டுள்ளவர்கள். எதுவாக இருந்தாலும் கேட்டு தான் செய்வார்கள். எனவே, இவர்களிடம் வேகம் காட்டுவதோ, அவசரப்படுவதோ தேவையில்லை. சிம்பிளான குணம் கொண்டிருப்பதால், சாதாரணமாக நடந்துக் கொண்டாலே போதுமானது. வேகத்தை காட்டிலும், இவர்களிடம் விவேகமாக நடந்துக் கொண்டால் மூடவுட் ஆகமாட்டார்கள்.

மீனம்

மீனம்

அவர்களை வழியில் யாரையும் தொந்தரவு செய்யாமல் நேர்மையாக பயணிப்பவர்கள் மீன ராசிக்காரர்கள். அழகாக காதல் கொள்பவர்கள். இவர்களது எனர்ஜி குறையாமல் பார்த்துக் கொண்டாலே போதும் உறவில் எந்த சிக்கலும் வராது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Biggest Turn-Offs in the Bedroom for Each Zodiac Signs!

Biggest Turn-Offs in the Bedroom for Each Zodiac Signs!
Story first published: Thursday, November 16, 2017, 15:23 [IST]