உண்மையான இதயம் முரளி, மேய்ந்த மானின் உண்மை காதல் கதை!

Posted By:
Subscribe to Boldsky

செட்டிலாகாமல் எப்படி திருமணம் செய்துக் கொள்வது, செட்டிலான பிறகு தான் இந்த காதல், கீதல் எல்லாம் என வாழ்ந்து கொண்டிருக்கும் புண்ணிய ஆத்மாக்கள் பலவன இருக்கின்றன.

இருக்கலாம், சிலருக்கு குடும்ப சூழல் காரணமாக மேயாத மான் 'இதயம்' முரளி போல காதலை வெளியே சொல்லாமலேயே தங்கள் வாழ்க்கையை கடந்து விட்டு, அவ்வப்போது, தங்கள் முதல் காதல் நினைவுகளை எண்ணி, சோக காதல் பாடல்களை கேட்டு நாட்களை கழிக்கும் உள்ளங்களும் இருக்கின்றன.

காதல் என்பது ரிட்டையர்ட்மென்ட் அமவுண்ட் கிடையாது. உங்களை என்றும் ரிட்டையர்ட் ஆகாமல் பார்த்துக் கொள்ளும் உறவு.

உங்கள் உறவில், தோழமைகளில், ஏன் நீங்களே கூட ஒரு இதயம் முரளியாக காதலை கூறாது நாட்களை கடத்தியிருக்கலாம். ஆனால், அது வாழ்நாள் முழுக்க, அவளிடம் கூறியிருக்கலாமோ என்ற உறுத்தலை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.

இது காதலை மேய்ந்த ஒரு உண்மையான இதயம் முரளியின் காதல் கதை...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிரிப்பில் முளைத்த முத்துக்கள்...

சிரிப்பில் முளைத்த முத்துக்கள்...

ஒரு புன்னகையில் தான் எங்கள் உறவும், வாழ்வும், அனைத்தும் துவங்கியது. ஆம்! நீங்கள் பல திரைப்படங்களில் கண்ட அதே முதல் பார்வையிலேயே காதல் கதை தான் எங்களுடையதும். பார்த்ததும் காதல், புன்னகையில் முளைத்தது. அவர் ஒரு கட்டிட தொழிலாளி, நான் ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தேன் அந்த நாட்களில்.

உணவு இடைவேளை!

உணவு இடைவேளை!

உணவு இடைவேளை தான் எங்கள் காதல் நேரம். உணவு இடைவேளைக்கு நான் வீட்டிருக்கு திரும்பும் போது, நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கண்களால் மட்டுமே பார்த்து கொள்வோம். அவர் என்னை பார்த்து சிரித்தார், நானும் பதிலுக்கு சிரித்தேன். இன்று வரை நான் எதற்கு அவரை பார்த்து சிரித்தேன் என்பதற்கான காரணம் என்னிடம் இல்லை. இந்த ஒற்றை பார்வை, மாறாத புன்னகையும் ஓராண்டு காலம் நீடித்தது.

வேலை முடிந்தும்...

வேலை முடிந்தும்...

அவரது கட்டிட வேலை முடிந்தும் கூட, சரியாக நான் உணவு இடைவேளையில் வீடு திரும்பும் போது, அந்த இடத்தில் எனக்காக வந்து காத்திருப்பதை அவர் நிறுத்தவில்லை. ஒரே இடம், ஒரே பார்வை, ஒரே புன்னகை, அதே நாங்கள். ஒரு நாளும் இது மாறவில்லை. நாங்கள் ஒருவருக்கு ஒருவர் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை.

ஒரு நாள்!

ஒரு நாள்!

ஒரு நாள், அதே போல நான் இடைவேளை நேரத்தில் வீடு திரும்பும் போது அவர், அதே இடத்தில் நின்றுக் கொண்டிருந்தார். நான் அவரை கடக்க மறுத்து, அதே இடத்தில் நானும் நின்றேன். அவர் தயக்கத்துடன் இங்கே சாலையில் நின்று பேசுவதை தவிர்த்து, வேறெங்காவது போய் பேசலாமா என்று கேட்டார்.

முதல் டேட்டிங்!

முதல் டேட்டிங்!

நாங்கள் இருவரும் முதல் முறை ஒன்றாக வெளியே சென்ற இடம் நேஷனல் மியூசியம். நாங்கள் இருவரும் அங்கிருந்த பொருட்களை மிகவும் வியப்புடன் கண்டு பூரித்துப் போனோம். அங்கே இருந்த அரசர், அரசி பயன்படுத்திய பொருட்களை கண்டு நாங்கள் ஆச்சரியத்தில் இருந்து வெளிவரவே இல்லை.

ராஜா, ராணி!

ராஜா, ராணி!

அங்கே மியூசியத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென அவர் என்னை நிறுத்தி, "நீ எனது ராணியாக இருப்பாயா?" என கேள்வி கேட்டார். சற்றும் யோசிக்காமல், நான் "எப்போதிருந்து?" என பதிலளித்தேன். அதற்கு அவர்,"இன்றிருந்து" என கேட்டார்....

எங்கள் முதல் டேட்டிங்கின் போதே நாங்கள் திருமணம் செய்துக் கொண்டோம். இப்போதும், நாங்கள் அன்று அந்த நேஷனல் மியூசியம் சென்ற என்ட்ரி பாஸ் என்னிடம் பத்திரமாக இருக்கிறது.

வறுமை!

வறுமை!

என் கணவருக்கு வேலை இல்லாமல் இருந்த நாட்கள் பலவன இருந்தன. அந்த மழை கால நாட்களில் நாங்கள் இருவரும் இரண்டு கப் டீ, ஓரிரு பிரெட் துண்டுகள் சாப்பிட்டு கழித்துள்ளோம். என்னவர் ஒரு டீ அடிக்ட். நான் அவருக்கு தெரியாமல் பணம் சேமித்து வைத்து, அவர் ஒரு நாள் கூட டீ அருந்தாமல் நாளை கழிக்க விடாமல் பார்த்துக் கொள்வேன்.

எங்கள் இளவரசி!

நாங்கள் ராஜா, ராணி இல்லை. எங்களிடம் அரண்மனை இல்லை, பெரும் சொத்துக்கள் இல்லை. ஆனால், எங்களுக்கு நாங்களே ஒரு சொர்க்கத்தை உருவாக்கி வைத்துள்ளோம். அதில் நாங்களே ராஜா, ராணி. எங்களுக்கு ஒரு இளவரசியும் இருக்கிறாள், அவள் பெயர் சுக்தாரா... என்று சொல்லி தங்கள் காதல் கதையை முடிக்கிறார் ஷஹீனின் மனைவி சோனியா.

ஒரு சொந்த வீடு, ஐந்திலக்க சம்பளம் சொகுசானா வாழ்க்கை தான் நிலையான வாழ்க்கை என கருதும் நபர்களுக்கு தனது "இதயம் முரளி" ஷஹீனை பற்றி சோனியா விவரித்த கதை, உண்மையான வாழ்க்கை என்ன, காதல் என்ன என்பதை புரிய வைத்திருக்கும் என நம்புகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A Real Life Idhayam Murali, Heart-Touching Love Story of Sonia and Shaheen!

A Real Life Idhayam Murali, Heart-Touching Love Story of Sonia and Shaheen!