For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ப்ரேக்-அப்-க்கு பிறகு நீங்கள் செய்ய வேண்டிய சில காரியங்கள்!

|

மனித வாழ்க்கை என்பது ரூபாய் நாணயத்தை போல அதில் அனைத்திற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. உணர்வு, உறவு, வேலை, சூழல் என அனைத்திலும் நல்லது, கெட்டது என நீங்கள் இரண்டையும் எதிர்த்து, சந்தித்து, கடந்து தான் போக வேண்டும்.

உங்கள் உறவில் இந்த ஏழு நிலைகளை கடந்து வந்ததுண்டா?

இல்லையில்லை எனக்கு ஒரு பக்கம் மட்டும் தான் வேண்டுமென அடம்பிடித்தாலும் கிடைக்கப்போவதில்லை. தோல்வியை கண்டு உடைந்து போனாலும் வாழ்க்கையை வாழ முடியாது. குதிரையே விழுந்த மறு நொடியில் துள்ளி எழும் போது, மனிதர்கள் நம்மால் முடியாதா என்ன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒப்புக்கொள்ள தான் வேண்டும்

ஒப்புக்கொள்ள தான் வேண்டும்

சில நேரங்களில் சூழ்நிலை காரணமாக நல்ல உறவுகளும் கூட முடிவுபெறும். இதை நீங்கள் ஒப்புக்கொள்ள தான் வேண்டும். நிகழ்ந்த உணர்வுகளை மறுக்க முயற்சிப்பது உங்களது வாழ்க்கையை மேலும் பாதிக்கும்.

உடைத்தெறிந்து போன பிறகு

உடைத்தெறிந்து போன பிறகு

உங்கள் மனதை உடைத்தெறிந்து போன பிறகு மீண்டும், மீண்டும் அதையே நினைத்துக் கொண்டிருப்பது. உடைந்த கண்ணாடி சில்கள் மீது மீண்டும், மீண்டும் நடப்பதற்கு சமம். அது உங்களை உறுத்திக் கொண்டே தான் இருக்கும். அதைவிட்டு வெளியே வாருங்கள்.

பாடம்

பாடம்

உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும், சம்பவமும் உங்களுக்கு ஓர் பாடத்தை கற்பித்துவிட்டு தான் போகின்றன. அதை நீங்கள் அறியாமல், புரியாமல் மீண்டும், மீண்டும் அதே தவறை செய்வது தான் மிகப்பெரிய தவறு.

மனநிலை மாற்றம்

மனநிலை மாற்றம்

உங்கள் மனநிலையை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களை நீங்களே அதிகம் விரும்ப துவங்குங்கள். வாழ்க்கையில் புதியதோர் ஒளி பிறக்கும், அது உங்களை முன்னோக்கி செல்ல உதவும்.

மறதி அவசியம்

மறதி அவசியம்

நடந்த யாவையும் மறப்பது கடினம் தான் ஆனால், அதை நீங்கள் மறந்து தான் ஆக வேண்டும். மறக்க நினைப்பதற்கு பதிலாக, வேறு காரியங்களில் உங்கள் சிந்தனையை செலுத்துங்கள். இது எளிதாக பழையதை மறக்க உதவும்.

நட்பு

நட்பு

நண்பர்களுடன் நிறைய நேரத்தை செலவளியுங்கள். இது உங்களை பிரிவில் இருந்து மீண்டு வர வெகுவாக உதவும். மற்றும் நண்பர்களை விட வேறு யாரும் உங்கள் சோகத்தை மிக வேகமாக போக்கிவிட முடியாது.

மன்னிப்பு

மன்னிப்பு

பெரும்பாலும் பிரிந்த பிறகு அந்த நபரை மன்னிக்க முடியாமல், அவர் மீது அதிகரிக்கும் கோபமும் கூட உங்கள் மனதை வருத்தமாக நிலைத்துக் கொண்டே இருக்கும். எனவே, அவர்களை மன்னிக்க பழகுங்கள், இது உங்கள் வாழ்க்கை மற்றும் மனநிலையில் முன்னேற்றம் காண உதவும்.

இதுவே முடிவல்ல

இதுவே முடிவல்ல

நீங்கள் காதலில் தோற்றுவிட்டீர்கள் அல்லது ஓர் உறவில் இருந்து பிரிந்துவிட்டீர்கள் எனில், நீங்கள் மீதும் காதலிக்க கூடாது என எந்த விதிவிலக்கும் இல்லை. ஆனால், அடுத்த முறையாவது உங்களுக்கு ஏற்ற, உங்களை புரிந்துக் கொள்ளும் நபராக இருக்க வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This Is What You Really Need To Hear After A Breakup

This Is What You Really Need To Hear After A Breakup, read here in tamil.
Story first published: Friday, April 22, 2016, 16:53 [IST]
Desktop Bottom Promotion