சைட் அடிக்கும் ஆண்களிடம் பெண்கள் அதிகமாக விரும்பும் 6 விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஆண்கள் என்றால் வீரமுடன் இருக்க வேண்டும், பெண்களை மதிக்க தெரிந்திருக்க வேண்டும், பணிவு, பண்பு, நல்ல குணாதிசயங்கள், பருப்பு, வெங்காயம் தக்காளி என சீரியஸாக பேசும் போது பல்வேறு விஷயங்கள் கூறலாம். ஆனால், கூலாக, ஜாலியாக சைட் அடிக்கும் ஆண்கள் மத்தியில் பெண்களுக்கு என்ன பிடிக்கும் என்பது பற்றி யாருக்கெல்லாம் தெரியும்.

ஓர் ஆணிடம் உடல் ரீதியான அணைப்பில் பெண்கள் விரும்பும் 7 விஷயம்!

எப்படியும் சைட் அடிக்கும் அவர்களுக்கு தானே தெரியும். ஆண்கள் நினைப்பதுண்டு பெண்கள் என்ன அப்படி சைட் அடித்துவிடுகிறார்கள் என, ஆனால், காதலிப்பது மட்டுமின்றி, கலாய்ப்பதிலும், சைட் அடிப்பதிலும் கூட நாங்க தான் கெத்து என பெண்கள் சவடால் விடுகிறார்கள்.

சொட்டை, தாடி, முழு ஷேவ் யார் மிகவும் செக்ஸியானவர்கள்? ஆய்வில் பெண்கள் கருத்து!

சரி, தாங்கள் சைட் அடிக்கும் ஆண்களிடம் பெண்கள் விரும்பும் 6 விஷயங்கள் பற்றி இனி பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மடித்துவிட்ட முழுக்கை சட்டை

மடித்துவிட்ட முழுக்கை சட்டை

ஆண்கள் முழுக்கை சட்டை அணிந்து, அதை முழங்கை வரை மடித்து விட்டுக் கொள்வது தான் ஆண்களின் கெத்து என சில பெண்கள் கூறுகிறார்கள்.

நான்கு நாள் தாடி

நான்கு நாள் தாடி

இந்த நான்கு நாள் தாடி சேது விக்ரம், நந்தா சூர்யாவிடம் இருந்து ஒரு கவர்ச்சியை உண்டாக்கிவிட்டது. இது ஆண்கள் மட்டுமின்றி பெண்களுக்கும் பிடிக்கிறதாம். ஆனால், மாத கணக்கில் வளர்ப்பது பயத்தை உண்டாக்குகிறது என கூறுகிறார்கள்.

பார்வை

பார்வை

எங்களுக்கு தெரிந்துவிட்டது என்ற போதிலும், தைரியமாக, அசடு வழியாமல் தைரியமாக பார்க்கும் ஆண்களை பெண்களுக்கு ஒரு டீஸ்பூன் அதிகமாகவே பிடிக்கிறதாம்.

பைக் ஓட்டுவது

பைக் ஓட்டுவது

பெரும்பாலும் அனைவரும் அறிந்தது தான். பைக்கை ஸ்டைலாக ஓட்டும் ஆண்கள் மீது தனி ஈர்ப்பு உண்டாகிறதாம்.

ஸ்டைல் மீசை

ஸ்டைல் மீசை

வெறுமென கட்டை மீசை வைப்பவர்களை விட தற்போதைய டிரென்ட்டுக்கு ஏற்றார் போல ஸ்டைலாக மீசை, தாடி வைக்கும் ஆண்கள் தனித்துவமாக தெரிகிறார்கள் என கூறுகிறார்கள்.

ஜொள்ளு விடாத புன்னகை

ஜொள்ளு விடாத புன்னகை

சைட் அடிப்பது பெரிய தவறில்லை. இந்த வயதில் அப்படி தான் இருக்கும். ஆனால் அப்படியே விழுங்குவதை போல பார்க்க வேண்டாம். ஜொள்ளு விடாமல் புன்னகைக்கும் வரையில் லிமிட்டாக இருக்கலாம் தவறில்லை என்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things Women Like A Lot From Men

Things Women Like A Lot From Men, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter