இதெல்லாம் சாதாரணம், இத நெனச்சு கவலைப் பட வேண்டாம் - மகப்பேறு மருத்துவர் ஆலோசனை!

Posted By:
Subscribe to Boldsky

மற்ற விஷயங்களால் ஏற்படும் மன அழுத்தத்தை விட, தாம்பத்திய வாழ்க்கை ஏற்படுத்தும் மன அழுத்தம் சற்றே வலிமையானது, மன வலிமையை சீர்குலைக்க செய்வது என்பது உண்மை. மன அழுத்தம் ஒருவரிடம் அதிகரிக்கும் போது அது உடல் நலத்தை வேகமாக பாதிக்க செய்யும்.

சிலர் தாம்பத்தியத்தில் ஏற்படும் சில சாதாரண விஷயங்களை பெரிய பிரச்சனை, நமக்கு ஏதோ கோளாறு இருக்கிறது என எண்ணி பயப்பட ஆரம்பித்து விடுகிறார்கள். அதில், தம்பதிகள் கோளாறு என எண்ணும் இந்த 6 பிரச்சனைகள் குறித்து பெரிதாய் அச்சம் கொள்ள தேவையில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரச்சனை #1

பிரச்சனை #1

ஒத்துழைக்க முடியாமல் போவது - எல்லா சமயங்களிலும் துணை விரும்பும் போது ஒத்துழைக்க முடியாது. இது ஆண், பெண் இருவர் மத்தியிலும் உண்டாகலாம். உடலுறவுக்கு உடல் ஒத்துழைத்தால் மட்டும் போதாது மனதும் ஒத்துழைக்க வேண்டும். மனநலம் சீராக இருக்க வேண்டும். இதற்காக தம்பதிகள் வருந்தத தேவையில்லை.

பிரச்சனை #2

பிரச்சனை #2

உணர்வை எட்டுதல் - சில சமயங்களில் ஆண்கள் சீக்கிரம் உணர்வை எட்டி விடுவார்கள். ஆனால் பெண்களால் அப்படி எட்ட முடியாது. இது கோளாறு அல்ல. இயற்க்கை தான். பெண்கள் உணர்வை எட்ட சற்று தாமதமாகும். இதற்காக அச்சம் கொள்ள தேவையில்லை. எப்போதுமே இப்படி இருக்கிறது எனில் மகப்பேறு மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளலாம்.

பிரச்சனை #3

பிரச்சனை #3

குழந்தை பிறந்தவுடன் - பெண்களுக்கு கருத்தரித்த பிறகும், பிரசவத்திற்கு பிறகும் சில ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும். இதனால் அவர்கள் இயல்பாக தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாமல் போகும். இது தானாக ஒருசில மாதத்தில் சரியாகிவிடுன். இதை எண்ணி அச்சம் கொள்ள தேவையில்லை.

பிரச்சனை #4

பிரச்சனை #4

வெவ்வேறு எண்ணங்கள் - ஆணுக்கும், பெண்ணுக்கும் தாம்பத்தியத்தில் ஏற்படும் ஆசைகள் பெரியளவில் கூட வேறுப்பட்டு இருக்கலாம். இது பயப்பட வேண்டிய விஷயம் இல்லை. ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து, புரியவைத்து அல்லது விட்டுக் கொடுத்து போக வேண்டிய விஷயம்.

பிரச்சனை #5

பிரச்சனை #5

விறைப்பு தன்மை - ஆணுக்கு விறைப்பு தன்மை உண்டாகாமல் போவதற்கு, துணை மீது ஈர்ப்பு ஏற்படவில்லை என்பது மட்டும் காரணமில்லை. அவரது மன நிலை, மன நலம், மன அழுத்தம், உடல் நலக் கோளாறுகள் என எதுவாக கூட இருக்கலாம்.

பிரச்சனை #6

பிரச்சனை #6

ஏமாற்றம் - நீங்கள் உடலுறவில் ஈடுபட தயாராக இருக்கும் போதிலும் கூட, ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும் போதும் கூட அன்றைய நாளில் நீங்கள் எதிர்கொண்ட சம்பவங்கள், அல்லது அன்று நண்பருடன் உண்டான சண்டை போன்ற வேறு காரணங்கள் கூட நீங்கள் உச்சம் அடைய முடியாமல் போக வைக்கலாம். இது கோளாறு அல்ல. தாம்பத்தியம் என்பது உடல் - மனம் இரண்டும் ஒன்றிணைந்த ஒன்று என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Six Intercourse Problems You Don't Need To Worry About

Six Intercourse Problems You Don't Need To Worry About
Please Wait while comments are loading...
Subscribe Newsletter