அத்தை பெண் இருக்கும் ஆண்கள் மட்டும் இதைப் படிக்கவும்!!!

Posted By:
Subscribe to Boldsky

"என் அத்தப் பொண்ணு... மச்சான் அவ...." என்று சொல்லும் போது ஆண்களின் வாயில் மட்டுமின்றி கண்களிலும் கூட ஜொள்ளு வரும். அதற்கான உரிமையும் அவர்களுக்கு இருக்கிறது. சிலர் தனக்கு ஆறு, ஏழு அத்தைப் பெண்கள் இருக்கிறார்கள் என்று கூறும் போது அதை கேட்கும் நண்பர்களின் காதுகளிலும், வயிற்றிலும் புகை கிளம்ப ஆரம்பித்துவிடும்.

ஆணென்றால் இப்படி தான் இருக்க வேண்டும்? பெண்களின் பார்வையில்!!!

பதின் வயதுகளில் இருந்து இளைஞன் என்ற பட்டம் ஒட்டிக் கொண்டிருக்கும் வரும். அத்தை பெண் என்பவள் ஆண்களின் கெளரவம். ஒரு அத்தை பெண் கூட இல்லை என்பது இந்த இளமை வயதை கொஞ்சம் டொங்களாக்கிவிடும். ஏன் ஒரு ஆணின் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒரு அத்தை இருக்க வேண்டும். அதனால் அவனது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? வாருங்கள் காணலாம்...

ஆண்களை பற்றி பெண்கள் தவறாக எண்ணும் 7 விஷயங்கள்!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காதலை சொல்ல ஒரு வாய்ப்பு

காதலை சொல்ல ஒரு வாய்ப்பு

காதலித்து வெற்றி கண்டவர்கள், காதலித்து தோல்விக் கண்டவர்கள் ஏராளம் இருப்பது போல. ஒருமுறை கூட காதலை ஒரு பெண்ணிடம் கூட கூறாதவர்களும் கூட ஏராளம் இருக்கிறார்கள். அத்தை பெண்கள் இருப்பவர்களுக்கு இந்த மோசமான நிலை ஏற்படுவது இல்லை.

கெத்து

கெத்து

ஆண் தனது கெத்தை அனைத்து பெண்களிடமும் தான் வெளிப்படுத்துகிறான். ஆனால், "அவன் கெத்து தெரியுமா.." என்று ஒரு ஆணை குறிப்பிட்டு கூற ஒரு அத்தை பெண்ணால் மட்டுமே முடியும்.

பெண் பார்க்கும் படலம்

பெண் பார்க்கும் படலம்

நமது கொள்ளு பாட்டிகளின் லொள்ளு காரணமாக, அதாங்க கள்ளிப்பால் ஊற்றி பெண்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டனர். இன்று பெண் பார்க்க போவது இவ்வளவு கடினமாக இருப்பதற்கு காரணமே கொள்ளுப் பாட்டிகள் தான். அத்தை பெண் இருந்தால் இந்த சிரமமே இல்லை. அட்னாவ்ஸ் புக்கிங்கில் ஒரு பெண் நமக்காக காத்திருப்பாள்.

தீராத விளையாட்டு பிள்ளை

தீராத விளையாட்டு பிள்ளை

ஜாலியாக தீராத விளையாட்டு பிள்ளை போன்ற பிம்பத்துடன் ஓர் பெண்ணுடன் நீங்கள் பழக வேண்டும் எனில் அது அத்தை பெண்ணிடம் மட்டும் தான் முடியும். துரத்தி துரத்து காதல், கையை பிடித்து இழுப்பது. லொள்ளு வேலைகளில் ஈடுபடுவது போன்றவற்றை வேறு பெண்களிடம் செய்தால் போலிஸ் கேஸ் ஆகிவிடும்.

கேலி கிண்டல்

கேலி கிண்டல்

ஏகபோகமாய் கேலி, கிண்டல் செய்ய கட்டாயம் ஓர் அத்தை பெண் தேவை. ஆனால், பதிலுக்கு அவர்கள் செய்யும் கிண்டலை தாங்க உங்களுக்கும் ஆரோக்கிய இதயம் தேவை.

வம்புதும்பு

வம்புதும்பு

அக்கா, தங்கையிடம் வம்பு செய்பவனிடம் சண்டைக்கு செல்லும் போது கூட ஆண்களிடம் இவ்வளவு வேகம், ஆக்ரோஷம் இருக்காது. இதே எவனாவது தனது அத்தை பெண்ணிடம் தகராறு செய்தான் என்று தெரிந்தால் மொகரையை உடைத்தே ஆகவேண்டும் என்ற கோபம் இரட்சகன் போல அவர்களை உருமாற்றிவிடும்.

மாமா......

மாமா......

நம்மளை காதலுடன் இல்லை எனிலும், ஆசையுடன் அல்லது வெறுமென வாயார "மாமா..." என்று அழைக்கவாவது ஒரு அத்தை பெண் வேண்டும்.

வீராப்பு

வீராப்பு

நான் ஒரு வீரன், நான் எப்படிப்பட்டவன் என்று உனக்கு தெரியாது. நான் நின்றால் நூறு யானைக்கு சமம், நீந்தினால் சுறாவிற்கு சமம் என்று வீராப்பு காட்ட கண்டிப்பாக ஒரு அத்தை வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Relationship Benefits Of Having A Niece

Do you have niece? Then you should know about these relationship benefits of having niece, Take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter