Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
மும்பை பெண்கள் தனித்தன்மையானவர்கள் என்பதற்கான காரணங்கள்!
மும்பை பெண்கள் என்றாலே ஃபேஷன் தெரிந்தவர்கள், டிரெண்டியானவர்கள், அழகு பதுமைகள் தான் என எண்ணுவதில் துளியும் தவறில்லை. ஆனால், இவற்றையும் தாண்டி, அவர்கள் எல்லைகள் கடந்து போனாலும், பாதுகாப்பாக இருக்க தெரிந்தவர்கள். புதிய இடங்களில் தங்களை பொருத்திக்கொள்ள கூடியவர்கள் என்பனவும் இருக்கின்றன.
"கட்டுனா குஜாரத்தி பொண்ணுகள தான் கட்டனும் பாஸ்..", ஏன்னு தெரியுமா???
இதனால் தென்னக பெண்கள், பெங்காலி பெண்கள் எல்லாம் என்ன குறைச்சலா என கேட்க வேண்டாம். அவர்களும் இவர்களுக்கு இணையான திறமை கொண்டவர்கள் தான். ஒட்டுமொத்தமாக விகிதத்தில் பார்க்கும் போது இவர்களது எண்ணிக்கை அதிகம். இனி, மும்பை பெண்கள் தனித்தன்மையானவர்கள் என்பதற்கான காரணங்கள் பற்றிக் காணலாம்....

தைரியம்
இந்தியாவின் எந்த மூலை முடிக்கில் வேலை என்றாலும் துணிந்து செல்லும் தைரியம் மும்பை பெண்களிடம் அதிகமாகவே இருக்கிறது.

வெட்கம்
இதை செய்தால் அவர்கள் என்ன நினைப்பார்கள், அதை செய்தால் இவர்கள் என்ன நினைப்பார்கள் என்று தயங்காமல், வெட்க படாமல் எந்த காரியமாக இருந்தாலும் துணிந்து ஈடுபடுவார்கள்.

கணக்கு
மும்பை பெண்களுக்கு யாரிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும். யாரை எந்த அளவு நம்ப வேண்டும், எந்த எல்லை வரை விட்டுப் பிடிக்க வேண்டும் என நுட்பமாக அறிந்து வைத்திருப்பார்கள்.

பொருளாதாரம்
வரவு, செலவுகளில் இவர்கள் பலே கில்லாடி. ஃபேஷன், டிரெண்டி என்பதை தாண்டி செலவுகளை கையாள தெரிதவர்கள் மும்பை பெண்கள்.

அரசியலும்
புத்திசாலித்தனம், திறமை என்பதை தாண்டி அரசியலையும் போதுமான அளவு கற்று வைத்திருப்பார்கள். இது இவர்கள் என்று சென்றாலும் உறுதுணையாக இருக்கும். அனைவருமே அடிப்படை சட்டம், அரசியல் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

எளிதாக எடுத்துக் கொள்வார்கள்
யாரேனும் சில்மிஷம் செய்ய வெந்தால் பயந்து ஓடிவிடமாட்டர்கள். எதிர்த்து நிற்கவும் செய்வார்கள். மேலும், இதனால் துவண்டு போகாமல், தன் பாதையில் இருந்து விலகாமல் பயணிக்கும் திறனும் கொண்டிருப்பார்கள்.

குறிக்கோள்
தங்களுக்கு எது வேண்டும், எது வேண்டாம், தங்களுக்கு வேண்டியதை அடைய என்ன செய்ய வேண்டும் என தன் எது வாழ்க்கைக்கு தேவை, தேவையற்றது என சரியான அட்டவணை போட்டு வைத்திருப்பார்கள்.

விளையாட்டு
மற்ற மாநில பெண்களோடு ஒப்பிடுகையில் விளையாட்டு, படிப்பு என இரண்டிலும் புகுந்து விளையாடும் பலே கில்லாடிகள் மும்பை பெண்கள்.

காதல்
காதல் என்ற பெயரில் ஏமாறுவது, ஏமாற்றம் அடைவது இவர்களில் மிக குறைவு. டேட்டிங், அவுட்டிங், காதல் இவற்றுக்கான வேறுபாடு, வித்தியாசம் தெரிந்தவர்கள் மும்பை பெண்கள்.



Click it and Unblock the Notifications
