கட்டுனா பஞ்சாபி பொண்ணுகள தான் கட்டனும் பாஸ்..., ஏன்னு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பஞ்சாப் என்றாலே அவர்களது வீரமும், டர்பனும் தான் முதலில் கண் முன் தோன்றும். உண்மை தான், பஞ்சாப் ஆண்கள் மிகவும் வீரமானர்வர்கள் தான். ஆனால், அவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல பஞ்சாப் பெண்கள். வீரத்திலும் சரி, அழகிலும் சரி.

பாரம்பரியத்தை கடைப்பிடிப்பது, நடனம் ஆடுவது, வீரம், சமைப்பது, என ஒரு குடும்ப பெண்ணிடம் என்னென்ன நற்குணங்கள் எல்லாம் இருக்க வேண்டுமோ, அவை அனைத்தும் ஓரிரு டீஸ்பூன் அதிகமாகவே பஞ்சாப் பெண்களிடம் இருக்கிறது.

இனி, கட்டுனா பஞ்சாபி பொண்ணுகள தான் கட்டனும், என்பதற்கான காரணங்கள் குறித்துப் பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நடனம்

நடனம்

முன்பு எல்லாம் பெண் பார்க்க சென்றால் பெண்ணுக்கு பாட தெரியுமா? ஆட தெரியுமா என்று கேட்பார்கள். இவர்களிடம் இதை கேட்கவே வேண்டாம். பாங்ரா நடனத்தில் பின்னி பெடலேடுத்துவிடுவார்கள் பஞ்சாபி பெண்கள்! இதற்காக இவர்கள் முன்னரே பயிற்சி எடுக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை, சாதாரணமாகவே அசத்துவார்கள்.

பிரியர்கள்

பிரியர்கள்

கலோரிகள் பற்றி எல்லாம் கவலைப்படாமல். சும்மா வெளுத்து வாங்குவார்கள். சாப்பிடுவதில் மட்டுமல்ல, ருசியாக சமைப்பதிலும் பஞ்சாபி பெண்கள் கைதேர்ந்தவர்கள். அதிலும் அசைவ வகைகளில் வூடுகட்டி அடிப்பார்கள்.

உடை

உடை

அவர்களது அந்த பட்டியாலா உடை உடுத்தும் அழகே தனி. அதிலும், பலவண்ண கலவையில் அழகான டிசைன்களிலான உடை உடுத்தி அவர்கள் சாலையில் நடந்து வருவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். (போலீஸ் கண்ணுல படாதவரை).

 வண்டியும் ஓட்டுவார்கள்.

வண்டியும் ஓட்டுவார்கள்.

பொதுவாகவே ஆண்களுக்கு தங்களுக்கு பிடித்தமான பெண்களுடன் வண்டியில் நெடுந்தூர பயணம் செல்ல பிடிக்கும். இதில் சற்று சுவாரஸ்யத்தை அதிகரிக்க, உங்களை உட்கார வைத்து அவர்கள் வண்டி ஒட்டி செல்வார்கள்.

குடும்பம்

குடும்பம்

பஞ்சாபில் கூட்டுக்குடும்ப வழக்கம் அதிகம். இன்று வரையும் அவர்கள் பெருமளவில் கூட்டுக்குடும்பமாக தான் வாழ்வார்கள். இதனால், வீட்டில் மகிழ்ச்சிக்கும், ரகளையான விளையாட்டுகளுக்கும் குறைவே இருக்காது.

 குடும்ப விழாக்கள்

குடும்ப விழாக்கள்

ஓர் தனி குடும்பத்தின் விழாவே, ஏதோ திருவிழா போல நடக்கும். அதிலும் திருமண விழாக்கள் பற்றி கூறவே வேண்டாம். ஒரு மாத காலத்திற்கு கொண்டாட்டத்திற்கு குறைவே இருக்காது.

உணர்வுகள்

உணர்வுகள்

பஞ்சாபி பெண்கள் சற்று உணர்ச்சிப்பூர்வமானவர்கள். ஒரு நொடியில் கண்கலங்கிவிடுவார்கள். நீங்கள் சோகத்தில் இருந்தால் சில நொடிகளில் கலகலப்பூட்டி உங்கள் உணர்வை, மனநிலையை மேலோங்க வைப்பதில் பஞ்சாபி பெண்கள் பலே கெட்டிக்காரர்கள்.

 சரியான கலவை

சரியான கலவை

பாரம்பரியம், மாடர்ன் என இரண்டின் சரியான கலவையில் இருப்பவர்கள் பஞ்சாபி பெண்கள்.

 தைரியம்

தைரியம்

எதுவாக இருந்தாலும் முகத்திற்கு நேராக கூறிவிடுவார்கள். முன் ஒன்றும், புறம் ஒன்றுமாக பேச மாட்டார்கள். மேலும், பஞ்சாபி ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கு கூட தைரியம் மிக அதிகம்.

ஊக்கம்

ஊக்கம்

நீங்கள் தோல்வியில் துவண்டாலும், வெற்றிக்காக அயராது உழைத்துக் கொண்டிருந்தாலும், உங்களுக்கு ஊக்கமளிக்க என்றும் சற்றும் சலித்துப் போகமாட்டார்கள் பஞ்சாபி பெண்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lovable Reasons To Love Punjabi Girls

There are so many lovable reasons to be in relationship with punjabi girls, read here in tamil.