For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏன் ஆரம்பக்கட்டத்தில் உடலுறவு குறித்து அதிகம் பேசக் கூடாது?

|

ஆண்களில் சிலர் தவறென தெரியாமல் செய்யும் தவறு இது. ரொமாண்டிக்காக பேசுகிறேன் என்று உடலுறவு குறித்து பேச ஆரம்பித்து விடுவார்கள். எப்போதாவது இப்படி பேசினால் பரவாயில்லை. உங்கள் காதலி அல்லது துணையிடம் அடிக்கடி இப்படி பேசுவது தவறான தாக்கத்தை ஏற்படுத்துகிறதாம்.

படுக்கையறையில் ஆண்கள் செய்யும் குற்றவுணர்வு ஏற்படுத்தும் தவறுகள்!!

இதனால், அவர்களது மனதளவில் பயமும், உறவில் விரிசல் மற்றும் உங்கள் குணம் பிடிக்காமல் போதல் என பல தீய தாக்கங்கள் உறவில் உண்டாக வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, துணையுடன் ரொமாண்டிக்காக பேசுகிறேன் என்று உரையாடும் போது சற்று கவனமாகவே பேசுங்கள்...

இந்த தலைமுறையினர் உடலுறவை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டிய 3 விஷயங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பயம்

பயம்

சிலர் ரொமாண்டிக்காக பேசுகிறேன் என்று பல நேரங்களில் உடலுறவுக் குறித்தே பேசுவார்கள். உண்மையில் இது பெண்கள் மத்தியில் ஈர்ப்புக்கு பதிலாக பயத்தை தான் அதிகரிக்க செய்கிறது.

பயம்

பயம்

பொதுவாகவே சில இயற்கை பிரச்சனைகளால் பல வலிகளை தாங்கிக் கொண்டு வாழ்பவர்கள் பெண்கள். மேலும், அவர்கள் உடலுறவில் ஈடுபட்டால் அதிக வலி ஏற்படும் என்ற எண்ணம் அவர்களுக்குள் இருக்கும். இதன் காரணங்களால் உடலுறவு பற்றி நிறைய பேசுதல் அவர்களுக்கு பயத்தை உண்டாக்குகிறது.

உறவில் விரிசல்

உறவில் விரிசல்

என்றேனும் கால நேர சூழ்நிலையின் காரணமாக உடலுறவு பற்றி பேசினால் பரவாயில்லை. அடிக்கடி உடலுறவு பற்றி பேசுவது, நீங்கள் அவர்களிடம் அந்த ஒன்றை மட்டும் தான் விரும்புகிறீர்கள் என்ற எண்ணத்தை உண்டாக்கி, உறவில் விரிசல் ஏற்பட கருவியாகிறது.

உறவில் விரிசல்

உறவில் விரிசல்

பெண்களுக்கு குழந்தைகள் பற்றி பேசுவது பிடிக்கும். ஆனால், அது மேலோட்டமாக மட்டுமே இருக்க வேண்டும். அளவை தாண்டி பேசாமல் ஆண்கள் சற்று கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.

சந்தேகம்

சந்தேகம்

நம்ம ஊர் பெண்களுக்கு பாலியல் குறித்த விஷயங்கள் பேசுவது பிடிக்காது. அந்த சூழலில் தான் பெரும்பாலும் பெற்றோரால் பெண்கள் வளர்க்கப்படுகிறார்கள். எனவே, பாலியல் குறித்து அதிகமாகே பேசுவது, நீங்கள் கெட்டவர் என்ற நோக்கம் அவர்களுள் எழ காரணமாகிவிடும்.

சந்தேகம்

சந்தேகம்

மேலும், உங்களுக்கு "அது" போன்ற தொடர்பு ஏதேனும் இருக்குமோ என்ற சந்தேகம் அளவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

தாம்பத்தியம் பாதிக்கும்

தாம்பத்தியம் பாதிக்கும்

எப்போதுமே உடலுறவு பற்றி பேசுவது உங்கள் தாம்பத்திய வாழ்க்கையை பாதிக்கும் என உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கு காரணம் துணைக்கு உங்கள் மீது ஏற்படும் தவறான எண்ணம் தான் என கூறப்படுகிறது.

தாம்பத்தியம் பாதிக்கும்

தாம்பத்தியம் பாதிக்கும்

இதனால், இல்லறத்தில் சண்டைகள் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புகள் இருக்கின்றன. நீங்கள் பொதுவாக கூறும் கருத்துகள் கூட தவறாக எடுத்துக் கொள்ளப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

விளைவுகள்

விளைவுகள்

ஒரு கட்டத்தில் இது உங்கள் குணாதிசயத்தின் மீதான பார்வையையே மாற்றிவிடும். மேலும் இதனால் ஏற்படும் விளைவுகள் இல்லறம் மற்றும் குழந்தைகளை கூட பாதிக்கலாம்.

விளைவுகள்

விளைவுகள்

எனவே, காதலியாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி ஆரம்பக்கட்டத்தில் உடலுறவு பற்றி அடிக்கடி பேச வேண்டாம். உரிமை இருக்கிறது என்பது வேறு, அவர்களது மனதில் தவறான தாக்கம் ஏற்படுத்துவது என்பது வேறு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dont Talk About Intercourse Daily

Dont Talk About Intercourse Daily, it may affects your relationship.
Story first published: Monday, February 8, 2016, 15:38 [IST]
Desktop Bottom Promotion