சொட்டை, தாடி, முழு ஷேவ் யார் மிகவும் செக்ஸியானவர்கள்? ஆய்வில் பெண்கள் கருத்து!

Posted By:
Subscribe to Boldsky

சொட்டை விழுந்துவிட்டால் தங்களை கேலி பொருளாக பார்ப்பார்கள் என்ற அச்சம் ஆண்கள் மத்தியில் நிறையவே இருக்கிறது. மேலும், தாடி வைத்தால் சமூகத்தில் மட்டுமல்ல வீட்டில் அம்மா, தங்கை உட்பட ரவுடி என்று தான் அழைப்பார்கள். ஆனால், முழு மொட்டை அடித்துக் கொள்வது தாடி வைத்துக் கொள்வது எல்லாம் இன்று அடிமட்ட ஃபேஷன் ஆகும்.

பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள்!

உலகெங்கும் சாதாரணமாக பார்க்கப்படும் இந்த தலைமுடியை முழுதாய் ஷேவ் செய்துக் கொள்வதும், தாடி வளர்ப்பதும் நம்ம ஊரில் விசித்திரமானவன் என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கிவிடும். மேலும், நமது ஊர்களில் ஷார்ட் கட் செய்து முகத்தில் தாடியை முழுவதுமாக ஷேவ் செய்தவர்கள் தான் உத்தம புத்திரனாக போற்றப்படுகிறார்கள்.

முதலிரவன்று பெண்களின் மனதில் எழும் அபத்தமான எண்ணங்கள்!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆண்மை, வலிமை, ஆதிக்கம்

ஆண்மை, வலிமை, ஆதிக்கம்

சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், சொட்டை தலை அல்லது தலைமுடியை முழுவதுமாக ஷேவ் செய்துக் கொள்ளும் ஆண்கள் தான் அதிகம் ஆண்மையானவர்களாக தோற்றமளிக்கிறார்கள் என பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆண்மை, வலிமை, ஆதிக்கம்

ஆண்மை, வலிமை, ஆதிக்கம்

மேலும், இவர்கள் தான் காண ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும், வலிமையானவர்களாகவும் இருக்கின்றனர் என்ற கருத்தையும் பெண்கள் அதிகமாக பதிவு செய்துள்ளனர்.

அமெரிக்கன் ஹேர் லாஸ் அமைப்பு

அமெரிக்கன் ஹேர் லாஸ் அமைப்பு

இப்போதுள்ள தலைமுறையில் ஆண்கள் மத்தியில் 35 - 50 வயதுக்குள் 85% வரையிலான முடி உதிர்வு ஏற்படுகிறது என அமெரிக்கன் ஹேர் லாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கன் ஹேர் லாஸ் அமைப்பு

அமெரிக்கன் ஹேர் லாஸ் அமைப்பு

ஆண்கள் மத்தியில் அதிகமாக முடி உதிர்வு ஏற்படுவதற்கு காரணியாக இருப்பது மன உளைச்சல், மன அழுத்தம் போன்ற உளவியல் காரணங்கள் தான் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்கன் ஹேர் லாஸ் அமைப்பு

அமெரிக்கன் ஹேர் லாஸ் அமைப்பு

இந்த உளவியல் பிரச்சனைகளால் உண்டாகும் முடி உதிர்வானது சராசரியாக ஆண்கள் மத்தியில் 22 வயதில் இருந்தே தொடங்கிவிடுகிறது என்றும். இதனால் முடி மெலித்தல், உதிர்தல் போன்ற பிரச்சனைகள் உண்டாகின்றன என்றும் ஆய்வாரள்கள் தெரிவித்துள்ளனர்.

ஈர்ப்பு

ஈர்ப்பு

பெரும்பாலும் பெண்கள் ஆண்களிடம் முதலில் கவனிப்பது முடியை தானாம். ஆனால் முழுவதுமாக தலைமுடி ஷேவ் செய்தவர்களை காணும் போது கண்களை தான் முதலில் பார்க்கின்றனர். மேலும் இது அதிக ஈர்ப்பை ஏற்படுத்துகிறது எனவும் கூறுகின்றனர்.

மூன்று நாள் தாடி

மூன்று நாள் தாடி

மேலும் பெண்கள் அடர்த்தியாக பெரிதாக தாடி வைத்திருக்கும் நபர்களை விட, மூன்று - நாலு நாட்கள் முளைத்த சிறிய தாடி வைத்திருக்கும் ஆண்கள் தான் அதிகம் ஈர்ப்புடன் தோற்றமளிக்கின்றனர் என கூறியிருக்கின்றனர்.

உயரமான ஆண்கள் அவுட்

உயரமான ஆண்கள் அவுட்

இந்த ஆய்வில் பெரும்பாலான பெண்கள் உயரமான ஆண்கள் மற்றும் கசகசவென பெரிய தாடி வைத்திருக்கும் ஆண்கள் மீது பெரிதாக ஈர்ப்பு உடையதாக கருத்து தெரிவிக்கவில்லையாம். எனவே, அவர்கள் இந்த ஆட்டத்தில் இருந்து அவுட்டாகி வெளியேறிவிட்டனர்.

கவலைய விடுங்க

கவலைய விடுங்க

இனிமேலும் முடி உதிரிகிறது, சொட்டை விழுகிறது என கலங்க வேண்டாம், மன அழுத்தத்தை அதிகரித்து கொள்ள வேண்டாம். இவ்வளவு பெரிய உலகில் நமது தலையில் உதிரும் சிறிய முடிகளுக்கு பெரிய முக்கியத்துவம் அளித்து, வாழ்க்கையை நொந்துக் கொள்ள வேண்டாமே!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bald, Beard, Full Shave Who is More Sexier Scientific Study Finds

Bald, Beard, Full Shave Who is More Sexier Scientific Study Finds, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter