தாடி வெச்ச பசங்கள தான் பொண்ணுகளுக்கு அதிகம் பிடிக்கிதாம், ஏன்னு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

தாடி, மீசை வைத்த ஆண்களை பெண்களுக்கு அதிகம் பிடிக்கிறது என்பதையும் தாண்டி, இது நமது பாரம்பரிய தோற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. தாடி, மீசை வைப்பதால் முதிர்ச்சியான தோற்றமளிக்க முடியும். உங்கள் நட்பு, அலுவலகம் அல்லது உறவினர் போன்ற வட்டத்தில் உங்களுக்கு தெரிந்த நபர் திடீரென தாடி, மீசை வைத்தால் பெரிய ஆண்மகனை போல தோற்றம் மாறிவிடும்.

ஆண்களே! தாடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா...?

அல்லது தாடி, மீசையை திடீரென எடுத்துவிட்டால் குழந்தை போல தோற்றமளிப்பார்கள். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழும் ஓர் நபர் நமது தமிழகத்தில் இருக்கிறார், வேற யாரு நம்ம தனுஷ் தான். பார்க்க பக்கத்து வீட்டு பையன் போல இருக்கும் இவருக்கு இது கனகச்சிதமாக பொருந்தும். தாடி வைப்பதால் நீங்கள் பல கெட்டப்புகளில் கூட உலா வர நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன...

ஆண்களே! உங்களுக்கு தாடி வளரமாட்டீங்குதா? இதெல்லாம் ட்ரை பண்ணுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வீரம்

வீரம்

சாதாரணமாக ஆண்கள் தாடி மீசை வைத்தால் மிகவும் வீரமாகவும், கம்பீரமாகவும் தோற்றமளிப்பார்கள். இது பெண்களுக்கு மிகவும் பிடிக்கிறது.

அழகு

அழகு

பெண்களுக்கு எப்படி நீண்ட கூந்தலும், ரெட்டை ஜடையும் அழகு என ஆண்கள் கருதுகிறார்களோ, அதே போல தான் ஆண்களுக்கு தாடியும் முறுக்கு மீசையும் அழகு என்று பெண்கள் கருதுகிறார்கள்.

தனித்துவம்

தனித்துவம்

நூறு ஆண்கள் இருக்கும் இடத்தில் தாடி வைத்திருக்கும் ஆண் மட்டும் தனித்துவமாக இருப்பார். மற்றும் மற்றவர்களது முகங்களைவிட இவர்களது முகம் எளிதாக மனதில் பதிந்துவிடும். இதெல்லாம் கூட ஓர் காரணமாக இருக்கிறது.

முதிர்ச்சியான தோற்றம்

முதிர்ச்சியான தோற்றம்

நிறைய ஆண்கள் தாடி இல்லாத போது குழந்தை போல தோற்றமளிப்பார்கள், இதுவே அவர்கள் தாடி வைத்தவுடன் மிகவும் முதிர்ச்சியுடன் தோற்றமளிப்பார்கள். இந்த முதிர்ச்சியான தோற்றம் தான் பெண்களை கவர்ந்திழுக்கிறது.

கெத்து

கெத்து

தாடி மீசை என்பது மனதில் ஓர் விதமான உயர்ந்த எண்ணத்தை உருவாக்கும். இளைஞர்கள் மத்தியில் கெத்து என்பது போலவும், பெரியவர்கள் மத்தியில் மரியாதை என்பது போன்ற எண்ணத்தை தாடி, மீசை உருவாக்குகிறது.

எளிதான விஷயமல்ல

எளிதான விஷயமல்ல

பெண்களுக்கு எப்படி நீளமான கூந்தலை பராமரிப்பது எளிதான காரியம் இல்லையோ, அது போல தான் ஆண்களுக்கு தாடி, மீசை வைப்பதும். அவ்வப்போது அரிக்கும், அதை ஸ்டைல் என்ற பெயரில் நீவிவிடுவது போல யாருக்கும் தெரியாமல் சொறிந்துக் கொள்ள வேண்டும்.

பாரம்பரியம்

பாரம்பரியம்

மீசை, தாடி என்பது நமது பாரம்பரியமும் கூட, வேலைக்கு செல்கிறோம் என்ற பெயரில் என்னதான் மேற்கத்திய பாணியில் உடை அணிந்தாலும், வடநாட்டு இந்தியர்களை போல தாடி, மீசை இன்றி தோற்றமளித்தாலும், நமது ஊர்களில் ஏர் பூட்டி உழவு செய்யும் முதிய ஆண்மகனின் தோற்றத்திற்கு இணையாகுமா? நம்ம ஊரு, நம்ம பாரம்பரியம்! அதுதானே அழகு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Girls Like Beard Guys A Lot

Do you know why girls like beard guys a lot? read here in tamil.