முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது பெண்களின் உணர்வு எவ்வாறு இருக்கும்?

Posted By:
Subscribe to Boldsky

என்னதான் எழுத்துப் பூர்வமாக அறிவும், தெளிவும் நிறைய இருந்தாலும் செயல்முறை என்று வரும் போது துளி அளவாவது அச்சம் அனைவரிடமும் தொற்றிக் கொள்ளும். டோனி இந்த பந்தில் சிக்ஸ் அடித்திருக்க வேண்டும், மிஸ் செய்துவிட்டார், அஸ்வின் இந்த பந்தில் விக்கெட் எடுத்திருக்க வேண்டும், தவறிவிட்டார் என கூறும் நபர்களிடம் பந்தையும், பேட்டையும் கொடுத்துப் பாருங்கள் நடுங்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இதுப்போன்று தான் உடலுறவில் ஈடுபடுவதும் கூட. நமக்குள் நிறைய ஆசைகள் இருக்கும் ஆனால் அதற்கு இணையாக அச்சங்களும் இருக்கும். இந்த வகையில் முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது என்ன நடக்கும், இது நடந்துவிடக் கூடாது என்று பெண்களுக்குள் சில எண்ணங்கள் இருக்கும். அவற்றை பற்றி தான் நாம் இங்கு காணவிருக்கிறோம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணர்வுபூர்வமான பதட்டம்

உணர்வுபூர்வமான பதட்டம்

என்னதான் உடலுறவு பற்றி தெளிவான அறிவு இருந்தாலும் கூட உள்ளுக்குள் உணர்வுப்பூர்வமான பதட்டம் இருக்கும். இது அனைவருக்கும் இருப்பது தான். செய்முறை தேர்வின் போது என்ன தான் எல்லாம் தெரிந்தாலும், தேர்வு அறைக்குள் சென்றவுடன் ஓர் பதட்டம் தொற்றிக் கொள்ளுமே, அதேபோல் தான்.

கொஞ்சி விளையாடுதல், முத்தம்

கொஞ்சி விளையாடுதல், முத்தம்

உடலுறவு என்பது வெறுமென உடலளவில் இணைவது மட்டுமில்லை என்பதை முதலில் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும். முற்பாதியில் கொஞ்சுதலும், பின்பாதியில் முத்தங்களும் நிறைந்திருக்க வேண்டும். முதன்முதலில் உறவில் ஈடுபடும் போது இதெல்லாம் எப்படி என்ற தயக்கம் இருக்கும் பெண்களிடம் நிறையவே இருக்கும்.

உடல்வாகு

உடல்வாகு

உடலுறவில் ஈடுபடும் போது பெண்கள் தங்கள் உடல்வாகு பற்றி எண்ணுவது இயல்பு. தங்கள் உடல்வாகு பற்றி யாரேனும் குறைக் கூறிவிட்டால் பெண்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. எனவே, கணவனுக்கு பிடிக்குமா, பிடிக்காத என்ற எண்ணமும் இருக்கும்.

ஆணுறை

ஆணுறை

என்னதான் இருந்தாலும் முதல் முறை உறவில் ஈடுபடும் போது பெண்கள் ஆணுறை பயன்படுத்தலாமே என்ற எண்ணம் கொண்டிருப்பார்கள்.

உடலுறவு அச்சம்

உடலுறவு அச்சம்

ஆசைகள் ஒருபுறம் இருந்தாலும் கூட, மறுபுறம் அச்சமும் இருக்கும். முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது வலி ஏற்படும் என்று கூறப்படுவதே இதற்கான காரணமாக இருக்கிறது.

கசிவு

கசிவு

வலி என்பதை தாண்டி, இரத்தக் கசிவு குறித்து தான் பெண்கள் அதிகம் அச்சம் கொள்கிறார்கள். பொதுவாகவே, இது குறித்த பயம் பெண்களிடம் அதிகமாக இருக்கிறது. முதல்முறை உறவில் ஈடுபடும் போது கண்டிப்பாக பெண்களுக்கு இதுக் குறித்த எண்ணம் இருக்கும்.

கருத்தரிப்பு

கருத்தரிப்பு

தற்போதையே சூழலில் பெரும்பாலானா தம்பதிகள் முதல் முறை அல்லது திருமணமான புதிதில் கருத்தரிக்க விரும்புவதில்லை. என்ன தான் ஆணுறை பயன்படுத்தினாலும் கூட கருத்தரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இதுப் பற்றிய எண்ணங்களும் பெண்களுக்குள் இருக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

உடலுறவுக்கு பிறகு

உடலுறவுக்கு பிறகு

ஆண்கள் உடலுறுவில் ஈடுபடும் போது தான் இன்பம் காண்கிறார்கள். ஆனால், பெண்களோ உடலுறவில் ஈடுபட்ட பிறகு தான் இன்பம் காண்கிறார்கள். இதற்கு தான் நாம் முன்பு கூறியது போல, கொஞ்சி விளையாடுதல் மற்றும் முத்தங்கள் கைக்கொடுத்து உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What She's Thinking The First Time You Hook Up

What She's Thinking The First Time You Hook Up? read here in tamil.